பாபர் மசூதி வழக்கால் பதவி உயர்வு போச்சு

Updated : செப் 11, 2018 | Added : செப் 11, 2018 | கருத்துகள் (4)
Advertisement
சுப்ரீம் கோர்ட், பாபர் மசூதி இடிப்பு வழக்கு, நீதிபதி பதவி உயர்வு, சுரேந்திர குமார் யாதவ், சிபிஐ, அத்வானி, உமாபாரதி, அலகாபாத் உயர்நீதிமன்றம், நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், பாபர் மசூதி இடிப்பு, 
Supreme Court, Babur Masjid demolition case, Judge promotion, Surendra Kumar Yadav, CPI, Advani, Uma Bharati, Allahabad High Court, Judge Surendra Kumar Yadav, Babur Masjid demolition,

புதுடில்லி: பாபர் மசூதி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, தனது பதவி உயர்வு பறிக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.


கூடுதல் நீதிபதி

உ.பி., மாநிலம், லக்னோவில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றுபவர் சுரேந்திர குமார் யாதவ். சுப்ரீம் கோர்ட் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல், 19ம் தேதி பிறப்பித்த உத்தரவுபடி, பாபர் மசூதி இடிப்பு வழக்கை, சி.பி.ஐ., கோர்ட்டி விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில், ரேபரேலியில் இருந்து இந்த வழக்கு விசாரணையை லக்னோவுக்கு மாற்ற வேண்டும்; நீதிபதி உள்பட யாரையும் மாற்றக் கூடாது; 2019ம் ஆண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்; அத்வானி, உமாபாரதி உட்பட எட்டு பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என கூறியது. அதன்படி சுரேந்திர குமார் யாதவ் நீதிபதியாக இருக்கும் சிபிஐ கோ்ட் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.


இச்சூழ்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த ஜூன், 1ம் தேதி இவருக்கு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு அளித்து, பணியிட மாற்றமும் செய்தது. அடுத்த சில மணி நேரங்களில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மேற்கோள் காட்டி, பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டது.


பதவி உயர்வை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ' சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவால், எனது பதவி உயர்வுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 28 ஆண்டுகளாக நீதித்துறையில் சிறப்பாக பணியாற்றிய எனக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது' என, கூறியுள்ளார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க தொடங்கி உள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201807:56:11 IST Report Abuse
Srinivasan Kannaiya இப்பிடியும் ஒரு காரணமா
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
11-செப்-201820:34:06 IST Report Abuse
Needhiyin Pakkam Nil 28 வருசமாக ஒரு பாபர் மசூதி வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்ல முடியல அப்புறம் எப்படி உங்களை நீதித்துறையில் சிறப்பாக பணியாற்றிய நீதிபதியாக ஒப்பு கொள்ள முடியும், அதனால தான் உங்களின் பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது...........
Rate this:
Share this comment
Cancel
11-செப்-201817:27:09 IST Report Abuse
ஆப்பு இதுக்குத்தான் வாய்தா வழங்காமல் கேசுகளை முடிக்கணும்கறது. 28 வருசமா பாப்ரி மசூதி வழக்கை விசாரிச்சு சம்பளம் வாங்கிட்டிருக்காரு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X