உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு| Dinamalar

உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு

Added : செப் 11, 2018 | கருத்துகள் (67)
Share
புதுடில்லி: உயர்ஜாதி மக்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கலாம் என மத்திய அமைச்சரும், லோக்ஜனசக்தி கட்சி தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.தலித் மக்கள் போராட்டம்@@subboxhd@@மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியதாவது:ஆறு மாதங்களுக்கு முன், எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு, தலித் மக்கள், உயர் ஜாதி மக்கள், ராம் விலாஸ் பஸ்வான், ரோகித் வெமுலா, டில்லி பல்கலை போராட்டம், உன்னா பிரச்னை, Reservation, Dalit people, high caste people, Ram Vilas Paswan, Roghit Vemulah, Delhi University protest, unna problem,

புதுடில்லி: உயர்ஜாதி மக்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கலாம் என மத்திய அமைச்சரும், லோக்ஜனசக்தி கட்சி தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.


தலித் மக்கள் போராட்டம்

மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியதாவது:


ஆறு மாதங்களுக்கு முன், எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மோடி அரசை, தலித் மக்களுக்கு எதிரானது என அழைக்க தொடங்கினர்.

என்னிடம் கூட மக்கள், ' தலித் மக்களின் தலைவர் நீங்கள். ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்' என, கோபத்துடன் கேள்வி எழுப்பினர். இப்பிரச்னையை தீர்க்க நிறைய வேலைகள் செய்யப்பட்டன. அதன் பிறகு தலித் மக்களுக்கு எதிரான அரசு என்ற கருத்து தற்போது மாறி விட்டது. அம்பேத்கருக்கு பிறகு, வி.பி.சிங்கும், மோடியும் தான் தலித் மக்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.


சுப்ரீம் கோர்ட் உத்தரவு வந்த அடுத்த நாளே, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்து அவசர சட்டம் கொண்டு வந்திருந்தால், இந்த அளவுக்கு எதிர்ப்பு இருந்து இருக்காது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழுவில் நான் இருக்கிறேன். அந்த குழு உடனே அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தது. ஆனால், அதிகாரிகள் வழக்கம் போல், 'வேகமாக' செயல்பட்டனர். எனினும் நடந்தது நல்லதற்கு தான். இப்படி ஒரு போராட்டம் நடந்து இருக்காவிடில், மோடி என்ன செய்தார் என்பது மக்களுக்கு தெரியாமல் போய் இருக்கும்.


உயர்ஜாதி மக்களுக்கு இட ஒதுக்கீடு


தலித் மக்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டதால், உயர் ஜாதி மக்களுக்கு கோபம் வர வாய்ப்பு இல்லை. அரசு புதிதாக எதையும் செய்யவில்லை. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை மாற்றவே சட்டம் கொண்டு வந்தது. உயர்ஜாதி மக்கள் ஓட்டு வங்கி என்பது பா.ஜ.,வுக்கு ஆதரவானது. அவர்கள் எப்போதும் பா.ஜ.,வுக்கு தான் விசுவாசமாக இருப்பார்கள். அவர்கள், லாலு, மாயாவதி அல்லது அகிலேஷ் யாதவிடம் செல்ல மாட்டார்கள்.

சில காலத்திற்கு முன் ரோகித் வெமுலா, டில்லி பல்கலை போராட்டம், உன்னா பகுதி பிரச்னையால், தலித் மக்கள் பா.ஜ.,விடம் இருந்து விலகி இருந்தனர். தற்போது அந்த சூழ்நிலை மாறி விட்டது.

இத்துடன் இதர பிறப்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால் அது தலித் இட ஒதுக்கீடுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கவே செய்யும். என்னை கேட்டால், உயர் ஜாதி மக்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கலாம். இது, 50 சதவீத இட ஒதுக்கீடுக்கு மேல் அளிக்க கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறுவதை போல் இருக்காது. தமிழகத்தில், 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூடி முடிவு செய்தால், எந்த பிரச்னையும் வாராது.

இவ்வாறு பஸ்வான் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X