அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.,வுக்கே வெற்றி: அமித் ஷா

Added : செப் 11, 2018 | கருத்துகள் (22)
Share
Advertisement
ஜெய்பூர் : 'அனைத்துத் தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்' என பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: தேர்தல் வரும்போதெல்லாம் எதிர்கட்சிகள் அவதூறு பரப்புவதை கொள்கையாக கொண்டுள்ளனர். மாட்டிறைச்சி விவகாரத்தில் பா.ஜ., மீது அவதூறு பரப்புகின்றனர். வரும் தேர்தலிலும் எதிர்கட்சிகளின் இத்தகைய
B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ,தேர்தல்க,வெற்றி,அமித் ஷா

ஜெய்பூர் : 'அனைத்துத் தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்' என பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: தேர்தல் வரும்போதெல்லாம் எதிர்கட்சிகள் அவதூறு பரப்புவதை கொள்கையாக கொண்டுள்ளனர். மாட்டிறைச்சி விவகாரத்தில் பா.ஜ., மீது அவதூறு பரப்புகின்றனர். வரும் தேர்தலிலும் எதிர்கட்சிகளின் இத்தகைய முயற்சியை முறியடித்து பா.ஜ., அபார வெற்றி பெறும்.

காங்., கட்சிக்கு ஓட்டு வங்கி குறித்தே கவலை; நாட்டைப்பற்றிய கவலை இல்லை. மனித உரிமை மற்றும் நாட்டின் பாதுகாப்பு பற்றி காங்., அக்கறை கொள்வதில்லை. அனைத்து பயங்கரவாத தாக்குதல்களும், குண்டு வெடிப்புகளும் காங்., ஆட்சியில் தான் நடந்துள்ளன. வங்க தேசத்தவர் ஒருவர் கூட இங்கு தங்கியிருக்கக்கூடாது. எதிர்கட்சிகளின் எதிர்ப்பை சமாளித்து வங்க தேசத்தவர்களை இந்தியாவை விட்டு விரட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
12-செப்-201814:20:09 IST Report Abuse
ஜெயந்தன் ஏதோ பெரிய பிளானோடு தான் இருக்கிறார்கள்.. மக்கள் விழிப்பாக இருந்து விரட்டி அடிக்க வேண்டும்.. இவர்கள் மீண்டும் வந்தால் நம் சோற்றில் மண் தான்
Rate this:
Cancel
Balasubramaniam - Tirupur,இந்தியா
12-செப்-201813:05:08 IST Report Abuse
Balasubramaniam நோயாளிக்கு என்ன பிரச்சினை என்று கூட தெரியாமல் ஆபரேஷன் செய்வதில் வல்லவர் பிஜேபி. 8 வழி சாலை என்று கூப்பாடு போட்டு அது இல்லாவிட்டால் பொருளாதாரம் சீரழிந்து விடும் என்ற ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து இப்போது 6 வழி சாலை போதும். 10000 கோடி இல் 2700 கோடி ஆராய்ச்சியில் செலவாகி விட்டது என்று பல்டி அடித்து விட்டார்கள். GST 450 மாற்றம் செய்தும் இன்னும் ஒழுங்குக்கு வரவில்லை. 2 வருடம் திருப்பி திருப்பி எண்ணிய செல்லாத நோட்டு நூற்று கணக்கான பேரை கொன்றது தானே தவிர ஒரு பிரயோஜனம் இல்லை. கருப்பு பணம் ஒரு ஆளுக்கு 15 லட்சம் அளவில் இருக்கும் என்று சொல்லிவிட்டு இப்போது 5 சதவீதம் கூட உள்ளே கொண்டு வர முடியவில்லை. மோடி அமித்ஷா நாடக கம்பனி நடிப்பால் புண்ணை பவுடரை பூசி மறைக்கும் மேக்கப் மட்டும் செய்ய முடிகிறது. சரி செய்ய முடியாது. எண்ணென்றால் சரி செய்ய தெரியாது. கொள்ளகாரர்கள் ஆட்சியில் பெட்ரோல் காஸ் விலை அதிகம் என்று கூப்பாடு போட்ட நாடக கம்பனி இன்று விலை உயர்வு கூட வளர்ச்சி என்கிற ரேஞ்சுக்கு கதை சொல்கிறார்கள்.
Rate this:
Cancel
viswasam - Al Khobar,சவுதி அரேபியா
12-செப்-201811:38:23 IST Report Abuse
viswasam அப்படினா வாக்கு எந்திரம் எல்லாம் தயார் ஆக உள்ளது , எது பட்டனை அழுத்தினாலும் அது எங்க சின்னதுக்கே ஒட்டு விழும் என்று அர்த்தம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X