அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை உயர்வு Dinamalar
பதிவு செய்த நாள் :
அங்கன்வாடி பணியாளர்களுக்கு
ஊக்கத் தொகை உயர்வு

புதுடில்லி : ''நாடு முழுவதும் பணியாற்றும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் 'ஆஷா' எனப்படும் சமூக சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

Anganwadi workers,Modi,ஊக்கத் தொகை,உயர்வு,அங்கன்வாடி,பணியாளர்கள்,மோடி


அங்கன்வாடி மற்றும் சமூக சுகாதாரப் பணியாளர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நேற்று உரையாடினார். அப்போது, அவர் கூறியதாவது: நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யக் கூடிய, மிகவும் முக்கியமான பணிகளில் ஈடுபட்டுள்ளீர்கள். இளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரத்தை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பு, உங்களுக்கு உள்ளது.

இந்த சேவையைப் பாராட்டும் வகையில், வரும் அக்டோபர் முதல், மாதாந்திர ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்பட உள்ளது. தீபாவளி பரிசாக, இது வழங்கப்பட உள்ளது. இதுவரை, 3,000 ரூபாய் பெற்றவர்கள், இனி, 4,500 ரூபாய் பெறுவர். 2,200 ரூபாய் பெற்ற வர்களுக்கு, 3,500 ரூபாய் வழங்கப்படும். அங்கன்வாடி உதவியாளர்களுக்கான ஊக்கத் தொகை, 1,500ல் இருந்து, 2,500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

இதைத் தவிர, அங்கீகாரம் பெற்றுள்ள ஆஷா எனப்படும், சமூக சுகாதார திட்டப் பணியாளர்கள், பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர். பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ், 4 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு தொகை, இலவசமாக வழங்கப்படும்.

ஆயுஷ்மான் பாரத் என்ற, மருத்துவக் காப்பீடு திட்டம், வரும், 23ல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் துவக்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கான பயனாளிகள், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவ்வாறு, மோடி கூறினார்.

Advertisement

ஒரு கோடி போலி பயனாளிகள்:

அங்கன்வாடிகளுக்கு வரும் குழந்தைகள் மற்றும் பயனாளிகள் குறித்து ஆய்வு செய்யும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மேனகா உத்தரவிட்டுள்ளர். இதுவரை, ஒரு கோடி போலி பயனாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் பெயர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் மேனகா நேற்று தெரிவித்தார்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
12-செப்-201820:11:34 IST Report Abuse

சூரிய புத்திரன்ஊக்கத்தொகை என்று ஹிந்தியில் சொன்னால் எங்களுக்கு புரியாது , Incentive என்று தொல்காப்பிய தமிழிலே சொன்னால் தான் புரியும்

Rate this:
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
12-செப்-201820:06:24 IST Report Abuse

சூரிய புத்திரன்எப்ப அவரு 15 லட்சம் போடுறேன்னு சொன்னாரு? எத்தனை தொகுதியில பாஜகவை தமிழ்நாட்டில ஜெயிக்க வச்சீங்க? குடிகாரன் வாக்கை நம்பியா மோடிஜி இருக்காரு ..

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
12-செப்-201815:39:41 IST Report Abuse

Endrum Indian2019 தேர்தலுக்காக என்னவெல்லாம் நாடகமாட வேண்டியிருக்கின்றது, உஷ் அப்பாடா - மோடி.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X