எம்.பி.,க்கள் மீதான வழக்கு : ஓராண்டுக்குள் முடிக்க உறுதி Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
எம்.பி.,க்கள் மீதான வழக்கு
ஓராண்டுக்குள் முடிக்க உறுதி

புதுடில்லி : மக்கள் பிரதிநிதிகளான, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளின் விசாரணையை, ஓராண்டுக்குள் முடிப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

MP,எம்.பி.,வழக்கு,ஓராண்டுக்குள்,மத்திய அரசு,உறுதி


'எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான, குற்ற வழக்குகளை விசாரிக்க, நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்' என, 2017ல், பா.ஜ.,வை சேர்ந்த, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்ற வழக்குகளை விசாரித்து முடிக்க, மத்திய அரசுக்கு, டிசம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆகஸ்ட் மாதம், இந்த பொதுநல வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுவரை அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள், முடித்த வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விபரங்களை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு: ஆந்திரா, பீஹார், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, தமிழகம், உ.பி., மேற்கு வங்கம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களில், 11 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

Advertisement

நாடு முழுவதும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, 2,466 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வழக்கு விசாரணை, தண்டனை அளிக்கப்பட்டவை போன்ற விபரங்களை, மாநிலங்கள் சரிவர அளிக்கவில்லை. வழக்குகளின் விசாரணையை விரைவு படுத்தி, ஓராண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
12-செப்-201816:23:44 IST Report Abuse

kalyanasundaramJUDGEMENT ON SUCH CASES WILL ONLY BE AN EYEWASH.. THESE INFLUENTIAL PEOPLE ARE MUCH WISER THAN JUDGES TO AWARD SENTENCE IF AT ALL ANY PUNISHMENT WE MIGHT NOT BE ALIVE

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
12-செப்-201811:18:19 IST Report Abuse

நக்கீரன்ஆமாம் அப்படியே கிழித்து விடுவீர்கள். விசாரணை நடத்துவதற்கு ஒரு வருடம் எதற்கு என்று தெரியவில்லை. மக்கள் தலையில் நன்கு மிளகாய் அரைக்கிறீர்கள். உங்கள் சட்டத்தை மதித்து நடப்பவன் உண்மையிலேயே கேனயந்தான்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201808:18:11 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎங்கே இருந்தாலும் இந்த எம் பி, எம் எல் எ க்கள் ,காசுகொடுத்து வழக்குகளில் இருந்து வெளியே வந்து விடுவார்கள்..

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X