வாராக் கடன் பிரச்னைக்கான காரணம் அம்பலம்! Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அம்பலம்!
வாராக் கடன் பிரச்னைக்கான காரணம்...
காங்.,கை கை காட்டுகிறார் ரகுராம் ராஜன்

புதுடில்லி : ''காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, அள்ளி அள்ளி கொடுக்கப்பட்ட கடன்களே, வங்கிகளின் வாராக் கடன்கள் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது,'' என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

வாராக் கடன்,பிரச்னை,காரணம்,அம்பலம்,காங்.,கை காட்டுகிறார், ரகுராம் ராஜன்நாட்டின் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு, மிகவும் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான, பார்லிமென்ட் மதிப்பீட்டு குழு விசாரித்து வருகிறது.


'வாராக் கடன்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தீவிர முயற்சி மேற்கொண்டார்' என, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர், அரவிந்த் சுப்ரமணியன், சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.


அதன்படி, வாராக் கடன் பிரச்னை குறித்து விளக்கம் அளிக்கும்படி, ரகுராம் ராஜனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த, 2016 செப்டம்பர் வரையில், மூன்று ஆண்டுகள், ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜன், தற்போது அமெரிக்க பல்கலையில் பேராசிரியராக உள்ளார்.


நிர்வாக குறைபாடுகள் :பார்லிமென்ட் மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ரகுராம் ராஜன்

கூறியுள்ளதாவது: அரசுகளின் நிர்வாக குறைபாடுகள்; வழக்குகள் வந்துவிடுமோ என்ற பயத்தில், திட்டங்கள் குறித்து முடிவெடுப்பதில் தாமதம் என, பல்வேறு விவகாரங்களே, வாராக் கடன் அளவு அதிகரித்துள்ளதற்கு காரணம்.


முந்தைய, காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது வழங்கப்பட்ட கடன்களே, பிரச்னைக்கு காரணம். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும், இது தொடர்ந்தது. இவற்றுடன் பொருளாதார வளர்ச்சி குறைந்தது, பிரச்னையை சிக்கலாக்கியது.


ஐ.மு., கூட்டணி ஆட்சி :இந்த வாராக் கடன் பிரச்னை தற்போது அதிகரித்தாலும், காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில் தான், இது துவங்கியது. குறிப்பாக, 2006 - 2008 காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கடன் வழங்கப்பட்ட விவகாரமுமே, பிரச்னை இவ்வளவு தீவிரமாவதற்கு காரணமாக அமைந்தது.


அந்த காலகட்டத்தில்தான், மின்சார உற்பத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, அதிகப்படியான கடன்கள் வழங்கப்பட்டன. சாதாரணமாக, பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருக்கும் நிலையில்; அடுத்ததாக பொருளாதார மந்த நிலை; அதற்கடுத்து பொருளாதார வீழ்ச்சி என்பது ஒரு சுழற்சியாகவே இருக்கும்.


ஆனால், இதை வங்கிகள் சரியாக கவனத்தில் கொள்ளவில்லை. திட்டம் என்று யார் செயல்படுத்தினாலும், எந்த விசாரணையும் இல்லாமல், திட்ட அறிக்கையை வைத்தே, கடன்களை வழங்கி உள்ளனர். அந்த திட்டங்கள் குறித்து எந்தவித ஆய்வையும், நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்த ஆய்வுகளையும், பெரும்பாலான வங்கிகள் மேற்கொள்ளவில்லை.


Advertisement

ஊழல் புகார் :இந்நிலையில், ஐ.மு., கூட்டணி அரசின் மீது, பல்வேறு ஊழல் புகார்கள் எழத் துவங்கின. நிலக்கரி சுரங்க முறைகேடு போன்றவற்றால், புதிய திட்டங்கள் குறித்து முடிவெடுக்காமல், அரசு தள்ளி போட்டது. அந்த காலகட்டத்தில், மின்சார உற்பத்தி மிகவும் குறைவாக இருந்தபோதும், புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் சுணக்கம் காட்டப்பட்டது.


இந்த நேரத்தில் தான், ஏற்கனவே திட்டங்களை செயல்படுத்த, கடன் வாங்கிய நிறுவனங்கள், கடனை அடைக்க முடியாமல் திணறின. இவ்வாறு பல்வேறு நிர்வாகக் கோளாறுகளே, வாராக் கடன்கள் அதிகரிப்பதற்கு காரணமாயின. இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

என்ன செய்யலாம்?

வாராக் கடன்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு என்ன செய்ய வேண்டும் என, ரகுராம் ராஜன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்; அவர் மேலும் கூறியுள்ளதாவது: எந்த திட்டமாக இருந்தாலும், அதற்கு கடன் வழங்குவதற்கு முன், வங்கிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும். அந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் மற்றும் கடன் திரும்ப வருமா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். திட்டங்களை மதிப்பிடுவதுடன், திட்டத்தின் முன்னேற்றம் குறித்து, வங்கிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக, பொதுத் துறை வங்கிகளின் நிர்வாக செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். கடன்களை திரும்ப வசூலிக்கும் முறைகளை வலுப்படுத்த வேண்டும். வங்கியின் நிர்வாக செயல்பாடுகளில், அரசின் தலையீடு இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Advertisement

வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
12-செப்-201820:22:32 IST Report Abuse

M S RAGHUNATHANFurther to my earlier posting as regards unsuitability of Basel Norms for developing nation, I give below how some genuine big ticket loans get stuck up and become NPA. A project is funded by a consortium of Banks say for Rs 1000 Crores. The success of the industry/project depends on the following factors. 1. The ability of the promoters to bring in their share of funds in addition to loan at the ning of the project. 2.The ability of the promoters to find sui and efficient work contractors to ensure timely completion of the project, Before that obtaining necessary permissions from the governmental agencies such as Industry Department, Pollution Control department, building plan approval authorities and other related agencies take unbelievably long time in spite of greasing the palms of politicians and corrupt govt officials. The promoters in their anxiety to stick to the schedule and present a rosy picture to the Bank that they will be able to start production give an unimaginative stages of progress and awaiting govt's permission start the work and the banks start releasing the funds/loan. The Bank does not go deep into the correctness of the schedule of implementation whether the same is achievable. AS a result there there is time overrun and this has cascading effect on cost. The break even analysis that is being done by the lead bank does not do their home work diligently and simply accept the schedule of implementation as break even is done only for the estimated increase in cost of inputs and does not reckon time overrun. In the present case the entire loan is disbursed and repayment is to start as per schedule, it is observed that at least 12- 15 months delay is there which results in interest burden increasing. So in the initial stage itself the Bank is forced to restructure the loan repayment, which again takes time. This restructure can not be done repeatedly due to restrictions of norms of R B I. So the sickness of the industry s and the amount is d as NPA only when no more restructure could be made. ( King Fisher Air Lines ). It is also a pity that Banks are hesitant to ask the promoters to mortgage their individual/personal assets even though they have substantial assets. This leads to higher credit risk. When the Banks are lending 75% of the cost of the project why not they insist on the personal guarantee and mortgaging of their assets apart from the margin they have to bring. The Banks are overawed by the so called status of the promoters and also to boost their credit portfolio substantially by a single transaction than sanctioning large number of loans/sharing the risk. The follow up and monitoring of these big loans is also lackadaisical. Many of the monitoring officers have inadequate knowledge of the prudent credit lending and the Managers are also carried away the status of the promoters and when some Managers raise red flag they are simply overlooked and shunted out. Thirdly the auditors do a lot of damage by giving certificates of end use of funds without giving a careful scrutiny and the banks simply file their certificates and take camoflauge under these certificates and no verification is made. I want to end this post with an actual incident. We filed a case in DRT chennai in 1996 against a trading company for recovery of dues of more than 2 crores and we had filed a host of loan documents which included among others hypothecation of stock and moveable/assignment of debts etc. The presiding officer casually asked what is the value of stock covered under the hyp agreement and I sheepishly said there is no stock and there is list of debtors since we did not have the latest balance sheet of the company. The judge then said what is the fun in producing reams of paper when they have no value. He asked whether there is pro note and acknowledge of debt which are sufficient to decide the case. I used to tell my senior officers and junior officers that if a loan is not repaid in time giving a moratorium of 12 months then it is as good as gone and initiate steps for recovery. .

Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
12-செப்-201815:35:35 IST Report Abuse

Tamilnesan இதற்கு முப்பதாயிரம் கோடி போலி முத்திரைத்தாள் மன்னர் சிவகங்கை செவத்த பையன் என்ன சொல்ல போகிறார்?

Rate this:
Htanirdab S K - Hyderabad,இந்தியா
12-செப்-201813:32:28 IST Report Abuse

Htanirdab S Kஎங்கே போனார்கள் நம் நடுநிலையாளர்கள் ?? இதுவரை வாராக்கடன் நமோ அரசினால் வந்தது, எல்லோரும் ஓடிவிட்டார்கள் என்று குற்றம் கூறிய வாய் எங்கே ? அது வேற வாய் ??

Rate this:
Chennaiite - Chennai,இந்தியா
18-செப்-201809:25:58 IST Report Abuse

Chennaiiteஅய்யா, அவங்க சரியில்லைன்னு நீங்க ஆட்சியை புடிச்சி நாட்டுக்கு நல்லது செய்வேன்னு சொன்னீங்க. நீங்க ஆட்சிக்கும் வந்தீங்க, 5 வருஷம் ஆச்சு. காங்கிரஸ் ஆட்சில கடன் குடுத்தாங்க, ஆனா கடன்காரன் கடனை கட்டாம நாட்டை விட்டு ஓடிப்போக துணை புரிந்தது நீங்கதானே சார். காங்கிரஸ் ஆட்சில அவனுங்க நாட்லயாவது இருந்தானுங்க, நீங்க தனி விமானம் வெச்சி அவனுங்கள பார்ஸல் பண்ணிடீங்களே. இப்ப விஜய் மல்லையா அவர்களை சரணடைய சொல்லி அவருக்கு வெளிநாட்டு சிறையில் போல் வசதிகள் செய்து குடுக்கறீங்களே? இதெல்லாம் காங்கிரஸ் சொல்லி தான் நீங்க செய்றீங்களா? விஜய் மல்லையா உங்க ஆட்சில MP ஆனார் ( In 2010, he was re-elected for a second term, this time with the backing of the Bharatiya Janata Party (BJP) and the JD(S) wikiepdia.), ஊற விட்டு போகிறதுக்கு முன்னாடி இந்த நாட்டோட நிதி அமைச்சரை சந்திசிட்டு போனதாக சொல்றாங்க. இதுக்கெல்லாம் உங்க பதில் என்ன????...

Rate this:
மேலும் 65 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X