குட்கா வழக்கில் சிக்கும் போலீஸ் அதிகாரிகள் 36 பேர்! Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குட்கா,வழக்கு,சிக்கும்,போலீஸ் அதிகாரிகள்,36 பேர்

சென்னை : 'குட்கா' ஊழல் வழக்கில் அடுத்து சிக்கப்போகும் போலீஸ் அதிகாரிகள் பட்டியலில் 36 பேர் இருப்பதாக சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர்கள் அனைவரையும் விசாரிக்க ஆயத்தமாகி வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், முதல் கட்டமாக உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் என இருவருக்கு 'சம்மன்' அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் 2013ல் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. தடையை மீறி 2014ல் சென்னை செங்குன்றம் அருகே ரகசியமாக குட்கா ஆலை மற்றும் கோடவுன்கள் செயல்பட்டு வருவதாக சி.பி.ஐ.,க்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் விசாரணையில் இறங்கிய சி.பி.ஐ., அதிகாரிகள் 2015 மார்ச்சில் சட்டவிரோதமாக குட்கா ஆலை மற்றும் கோடவுன்கள் செயல்பட்டு வருவதை உறுதி செய்தனர். அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ்க்கு இது தொடர்பாக அறிக்கை அனுப்பினர். இதையடுத்து 2015 ஜூனில் ஜார்ஜ் உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருந்த ஜெயகுமார் குட்கா ஆலை மற்றும் கோடவுனில் சோதனை நடத்தினார். அதில் மூடை மூடையாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கின.

இதற்கிடையில் குட்கா ஆலை உரிமையாளர் மாதவ ராவ் மற்றும் பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோர் 250 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து 2016 ஜூலை 7ல் மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் மற்றும் கோடவுன் மேலாளர் ராஜேந்திரன்,

கணக்காளர் யோகேஷ்வரி உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது யோகேஷ்வரியின் வீட்டில், 'ஜெனரல் எக்ஸ்பென்சஸ்' என்ற பெயரில் ரகசிய டைரி சிக்கியது. இதில் குட்கா விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்த ஆளும் கட்சியினர் மற்றும் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விபரம் தேதி வாரியாக எழுதப்பட்டு இருந்தது.

அந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை கமிஷனராக இருந்த ஜார்ஜ் மற்றும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் கலால் துறை அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. 'இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இயக்குனர் பாலகிருஷ்ணன், 2016 ஆகஸ்டில் அப்போது தலைமை செயலராக இருந்த ராமமோகன் ராவுக்கு கடிதம் அனுப்பினர்; நடவடிக்கை இல்லை.

பின் 2016 டிச., 21ல் ராமமோகன் ராவ் வீடு

மற்றும் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலக அறையில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்களை கைப்பற்றினர்.

அதேபோல் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது தோழி சசிகலா அறையிலும் சோதனை நடத்தினர். அப்போது டி.ஜி.பி.,யாக இருந்த அசோக்குமார் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு குட்கா ஊழல் குறித்து அனுப்பிய கோப்பு சிக்கியது. இதனால் குட்கா ஊழல் விவகாரத்தில் சசிகலா தொடர்பு பற்றிய சந்தேகத்தை கிளப்பியது.

அதன்பின் குட்கா ஊழல் விவகாரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் கிடப்பில் போட்டதால் நீதிமன்ற உத்தரவால் சி.பி.ஐ.,க்கு வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து விசாரணை வேகம் பெற்றுள்ளது.

சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 40 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். மாதவ ராவ்,

உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி, எம்.கே.பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.

தற்போது அவர்களை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மாதவ ராவ் உள்ளிட்டோர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் லஞ்சம் வாங்கிய ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியலை தயாரித்துள்ளனர். அதில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த நான்கு பேர்; ஆறு கூடுதல் கமிஷனர்கள்; ஐந்து இணை கமிஷனர்கள்; ஐந்து துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என 36 பேர் இடம் பெற்று இருப்பதாக சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் முதல் கட்ட விசாரணைக்காக குட்கா ஊழல் நடந்த காலக்கட்டத்தில் செங்குன்றம் உதவி கமிஷனராக இருந்த மன்னர்மன்னன், புழல் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத்குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சம்மன் அனுப்பி உள்ளனர். காவலில் எடுத்துள்ள மாதவ ராவ் மற்றும் அவரது பங்குதார்கள் முன்னிலையில் இந்த இருவரிடமும் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இதேபோல பட்டியலில் உள்ள மற்றவர்களையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

அம்பலப்படுத்திய உதவியாளர்:

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் நேற்று மாதவராவின் உதவியாளர் தாமோதரன் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஐ.பி.எஸ்., அதிகாரிகளை கைக்குள் போட்டு மாதவ ராவ் போட்ட ஆட்டத்தை அவர் அம்பலப்படுத்தி உள்ளார்.Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rohan - San Jose,யூ.எஸ்.ஏ
13-செப்-201801:04:39 IST Report Abuse

Rohanமாஜி கமிஷனர் George ஒரு பச்சை திருடன். இவன் தான் மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கெடுத்தவன். இவனை பிடித்து அவன் விசாரித்தது போல நல்ல கவனிப்புடன் கவனித்தால் நிறைய விஷயம் வெளியில் வரும். அடுத்தது விஜயபாஸ்கர். இவனால் எப்படி இன்னும் அமைச்சராக இருக்கமுடிகிறது? எடபடிக்கு தைரியம் இல்லையா? அல்லது அவன் கூட்டும் வெளியே வந்து விடும் என்று payama???

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
12-செப்-201819:28:53 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஇவர்களுக்கெல்லாம் வெட்கம் மானம் சூடு சொரனை என்பதெல்லாம் >>>>>>>>

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
12-செப்-201819:26:51 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஇப்படி பட்டவர்களை என்ன செய்தாலும் தகும் .சே சே.

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X