பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'கொலையாளிகளை விடுவிக்க
கவர்னருக்கு அதிகாரமில்லை'

புதுடில்லி : 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக கவர்னர், தானாக முடிவெடுக்க முடியாது. மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Governor,ஆளுநர்,கவர்னர்,அதிகாரமில்லை,மத்திய உள்துறை அமைச்சகம்


காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிப்பது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் கருணை மனு மீது, கவர்னர் முடிவெடுக்க வேண்டும்' என, சமீபத்தில் கூறியது.

இதைத் தொடர்ந்து, 'ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அது தொடர்பாக, கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது: மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை, முன்னதாகவே விடுவிப்பது அல்லது தண்டனையைக் குறைப்பது குறித்து, மத்திய அரசின் கருத்தை கேட்க வேண்டும்.

ராஜிவ் கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரித்துள்ளதால், மத்திய அரசின் கருத்தை, கவர்னர் கேட்க வேண்டும். ராஜிவ் கொலைக்கான சதி திட்டம் குறித்து, சி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகள் அடங்கிய விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.

'இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு நாடுகளிடம் உதவிகளை கேட்டுள்ளதால், இந்த வழக்கு தற்போதும்

Advertisement

விசாரணையில் உள்ளது' என, அந்தக் குழு, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

ராஜிவ் கொலையாளிகளை விடுவித்தால், அது தவறான முன்னுதாரணமாக மாறி விடும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக கவர்னர் தானாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. மத்திய அரசின் ஆலோசனைகளை பெற வேண்டிய கட்டாயம், அவருக்கு உள்ளது. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LION Bala - Tuticorin,இந்தியா
15-செப்-201819:04:34 IST Report Abuse

LION Balaஒரு நாட்டின் பிரதமர் மற்றும் 14 பேரை கொலை செய்தவர்களை விடுதலை செய்வது தவறான முன் உத்தாரணமாகிவிடும். ராஜீவ் கொலையில், கொலை செய்ய திட்டம் தீட்டியவர்கள் கொலை செய்ய தூண்டியவர்கள் கொலை செய்ய உதவியவர்கள் என மூன்று வகை உண்டு. இவர்கள் கொலை செய்ய உதவியவர்கள் அதற்க்கு கைக்கூலி வாங்கி கொண்டு தான் இந்த பாதக செயலுக்கு உடந்தையாக செயல்பட்டார்கள் என்பது மறுக்க முடியாது. அற்புதம்மாள் மகனின் மேல் உள்ள பாசம், நளினிக்கு மகளின் திருமணம் நடக்க வேண்டும் என்பது தற்போது உள்ள நிலைமை. 14 பேர் இறந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இப்படி பாதிக்கப்பட்ட குடுப்பதின் வலிக்கு அரசு என்ன செய்ய போகிறது. சதி திட்டம் நாடு கடந்த அளவில் நடந்துள்ளது. ஆக இந்த 7 பேரின் முடிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரின் ஒருமித்த கருத்துக்களையம் கேட்க வேண்டும். தமிழக அரசியல் காட்சிகள் அனைத்தும் தங்களின் சுய லாபத்திற்காக அறிக்கை விடுகின்றனர். குற்றம் செய்தவர்களை விடுவிக்க கூடாது என்பது இங்கே பலரின் கருத்து. அப்படி இவர்களை கருணை அடிப்படையில் விடுவித்தாலும் கடவுளின் தீர்ப்பு ஒன்று உண்டு என்பதை மறுக்க முடியாது.

Rate this:
Saravanan - Pazhani ,இந்தியா
12-செப்-201819:15:22 IST Report Abuse

Saravananஉச்ச நீதிமன்றம் சொன்னதுதான் இறுதியானது , பிறகு எதற்கு இந்த வழக்கை இழுத்தடிக்கிறார்கள் ?// பாய் (In 1985, the Supreme Court of India ruled in favour of Muslim divorcee Shah Bano, declaring that her husband should give her alimony. ). அப்போ KhanCross கட்சி சட்டத்தை மாற்றியது ஞாபகம் வரலையா ?

Rate this:
Muruganandam - Madras,இந்தியா
12-செப்-201818:09:37 IST Report Abuse

Muruganandamஅந்த ஏழு பேர்களும் திராவிடர்கள். ஆரியர்கள் இல்லை. இருந்திருந்தால் எல்லோரும் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று கூப்பாடு போடுவார்கள்.

Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
12-செப்-201819:39:05 IST Report Abuse

uthappaப சிதம்பரம், திருநாவுக்கரசு, பீட்டர், வசந்த், புதுவை நாராயணசாமி ஆகியோரிடம் கேளுங்கள்.அவர்களும் விடுதலை செய்ய சொன்னால் நீங்கள் சொல்வது சரி என்றாகும். ...

Rate this:
மேலும் 70 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X