எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நிறைவு: 5 லட்சம் பேர் பங்கேற்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நிறைவு: 5 லட்சம் பேர் பங்கேற்பு

Added : செப் 11, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நிறைவு:  5 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், வரும், 30ல், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நேற்று விழா நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டனர்.அதன் பின், நிருபர்களிடம் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:கன்னியாகுமரி மாவட்டத்தில், வரும், 22ம் தேதியும், சென்னையில், 30ம் தேதியும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழா நடக்க உள்ளது. சென்னை விழாவில், 5 லட்சம் பேர் பங்கேற்பர். தேசிய தலைவர்கள் பங்கேற்பு குறித்து, கட்சி தலைமை முடிவெடுக்கும்.ராஜிவ் கொலை வழக்கில், சிறை தண்டனை பெற்ற, ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பது, அரசின் நிலைப்பாடு. தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை மதித்து, கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. கவர்னருக்கு காலக்கெடு விதிக்க முடியாது. அரசின் முடிவுக்கு மதிப்பளிப்பார் என, நம்புகிறோம்.தி.மு.க., 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. ஏழு பேரை விடுதலை செய்ய, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இன்று கூச்சலிடுகிறார்.மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை, உயர்த்திக் கொண்டே செல்வதை, ஏற்க முடியாது. மத்திய அரசு, கலால் வரியை குறைக்க வேண்டும். 50 சதவீதம் குறைத்தாலே, அனைத்து மாநில மக்களும் பயன் பெறுவர்.தி.மு.க., ஒரு சந்தர்ப்பவாத கட்சி. எந்த நிலையிலும், பச்சோந்தியை போல் நிறத்தை மாற்றிக் கொள்ளும். தற்போது, காங்கிரசுடன் இருக்கிறது; நாளைக்கு, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
12-செப்-201820:56:13 IST Report Abuse
Poongavoor Raghupathy The Dravidian Parties are only interested to sing the praises of their so called Leaders like EVR,MGR,JAYALALITHA,KARUNANNJDHI,ANNA etc without doing anything useful to their people. Everyday there is one meeting or the other for praising day or memory day for Karunanidhi. Further the Parties want to install statues of Karunanidhi. Now MANIMANDAPAM for Karunanidhi is bound to come. Already Marina is converted into Graveyard for many of their Leaders. When the State is facing so many problems the Dravidian Parties are giving importance to low priority issues.The People of Tamilnadu must understand these Dravidian Parties and exercise their franchise judiciously at least in next elections so that they can be free from the clutches of evils. Let us look at e living conditions of the relatives of Modiji and compare with Karunanidhi's family members and decide before voting. It is given to understand that Udayanidhi, the Stalin's son is world famous car for his use. There is no car for mother and wife of Modiji. 'I WILLNOT EAT PUBLIC MONEY AND NOR I WILL ALLOW OTHERS TO EAT PUBLIC MONEY" is the d policy of Modiji and he is still maintaining both in letters and spirit. The people have to understand and decide before voting.
Rate this:
Share this comment
Cancel
nizamudin - trichy,இந்தியா
12-செப்-201817:55:55 IST Report Abuse
nizamudin 5 கோடி பேர் வர வாய்ப்பு உள்ளது
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
12-செப்-201811:19:38 IST Report Abuse
நக்கீரன் ஏண்டா மொத்தத்தில் 500 பேர் வருன்னான்னு பாரு முதல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X