கருணாநிதி அழைத்தும் செல்லவில்லை: ஆதரவாளர்களிடம் அழகிரி தகவல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கருணாநிதி அழைத்தும் செல்லவில்லை
ஆதரவாளர்களிடம் அழகிரி தகவல்

மதுரை : 'தி.மு.க., தலைவர் கருணாநிதி இருந்தபோது கட்சியில் சேர அழைத்தும் நான் செல்லவில்லை' என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அவரது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

கருணாநிதி,அழைத்தும்,செல்லவில்லை,அழகிரி


கருணாநிதி மறைவிற்கு பின் அவரது நினைவாக சென்னையில் பேரணியை அழகிரி நடத்தினார். நேற்று முன்தினம் அவர் மதுரை திரும்பினார். மாவட்டம் வாரியாக ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். நேற்று தேனி மாவட்டத்தினரை சந்தித்தார். உடன் முன்னாள் துணை மேயர் மன்னன், இசக்கிமுத்து உள்ளிட்டோர் இருந்தனர்.

சந்திப்பின்போது ஆதரவாளர்கள் பேசியதாவது: மாவட்டம் வாரியாக தி.மு.க., அதிருப்தி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் சுற்றுப்பயணம் செய்தால் உண்மை நிலை தெரியும். உங்கள் பின் வருவதற்கு தயாராக உள்ளனர். கருணாநிதி பெயரில் பெரிய இயக்கம் துவங்கி, கட்சியில் நம்மை மீண்டும் சேர்க்க வைக்கும் அளவிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தினர்.

அவர்களிடம் அழகிரி பேசியதாவது: கட்சியில் சேர்க்க அவர்கள் தயாராக இல்லை. கருணாநிதி இருந்தபோது அவரை அடிக்கடி பார்க்க செல்வேன். 2016 சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து அவரிடம் அதிருப்தி தெரிவித்தேன். அப்போது, 'இவர்கள் நிர்வாகம் தெரியாதவர்களாக உள்ளனர். உனக்கான நேரம் வரும். அப்போது வா. தோல்வியுற்ற பின் அவர்களே உன்னை தேடி வருவார்கள். அதுவரை காத்திரு' என தெரிவித்தார். அப்போதுதான், 'கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை' என நான் வெளிப்படையாக தெரிவித்தேன்.

Advertisement

கடைசி நேரத்தில் கருணாநிதியின் உடல்நலம் கருதி எவ்வித நிர்பந்தமும் கொடுக்காமல் அமைதி காத்தேன். கருணாநிதி அழைத்தும் செல்லாமல் இருந்து விட்டேன். மாவட்டம் வாரியாக ஆதரவாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள், என்றார்.

நிருபர்களிடம் அழகிரி கூறுகையில், ''பேரணி வெற்றிக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், திருப்பரங்குன்றம். திருவாரூர் தொகுதிகள் இடைத்தேர்தல் குறித்தும் ஆதரவாளர்கள் ஆலோசனைகள் தெரிவித்தனர். மாவட்ட வாரியாக ஆதரவாளர்களை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
12-செப்-201816:22:24 IST Report Abuse

ganapati sbதிமுகவுக்கு கருணாநிதி இருக்கும் போதே எப்போதுமே 20% மேல் வாக்கு வங்கி இல்லை 80 % தமிழக மக்கள் நாத்திகத்திற்கு ஒத்து ஊதிய ஊழலுக்கு அடித்தளம் அமைத்த திமுகவிற்கு எதிரான மன நிலையில்தான் உள்ளனர் எப்போதுமே பல சாதி மத தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைத்தே அது 30 % வாக்கு வங்கி பெற்ற ஜெய இருந்த அதிமுகவை வென்று வந்துள்ளது 15 % வாக்கு மற்ற சிறு குறு கட்சிகளிடம் உள்ளது . மீதமுள்ள 35 % யாருக்கும் வாக்களிக்காத நடுநிலை வாக்காளர்கள் ஒரு நல்ல அரசியல் மாற்றத்திற்காக முனைந்து யாருக்கேனும் வாக்களித்தால் அவர்கள் ஜெயிப்பார்கள் . ஸ்டாலின் மேயராக உள்ளாட்சி அமைச்சராக ஓரளவு நன்றாக செயல்பட்டிருந்தாலும் கூட தனிப்பட்ட முறையில் வெற்றிபெறும் அளவு செல்வாக்கை பெறவில்லை . அழகிரிகோ தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு தவறாமல் உதவி கணிசமான தென்மாவட்ட மக்களிடம் நல்லபெயர் தனிப்பட்ட உள்ளது. அவரால் நிரூபித்து வேட்பாளர்களை நிறுத்தி திமுகவின் வெற்றி வாய்ப்பை சில ஆயிரம் வாக்கு வித்தியாசங்களில் நழுவ வைக்க முடியும் . மக்கள் விரும்பும் சரியான கூட்டணி ஒன்றை அமைக்கவிட்டால் அதிமுக பிளவு பட்டிருந்தாலும் திமுகவிற்கு RK நகர் போல மோசமாக இல்லாவிட்டாலும் மீண்டும் தோல்வி உறுதி .

Rate this:
unmai -  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-201815:29:20 IST Report Abuse

unmaikattumaram sonnalum sollirupaan!!

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-செப்-201815:08:34 IST Report Abuse

இந்தியன் kumarஅழகிரி இனி என்னவெல்லாம் சொல்வாரோ???

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X