தி.மு.க., ஆட்சி ஊழல்கள் பட்டியல் வெளியாகும் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., ஆட்சி ஊழல்கள் பட்டியல் வெளியாகும்
முதல்வர் எச்சரிக்கை

ஓமலுார் : ''தி.மு.க., ஆட்சியில் நடந்த தவறுகள், இனி வெளியாகும்,'' என, முதல்வர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.

D.M.K,DMK,தி.மு.க,முதல்வர்,எச்சரிக்கை,ஊழல்கள் பட்டியல்,வெளியாகும்பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, சேலம் வந்த, தமிழக முதல்வர் பழனிசாமி, விமான நிலையத்தில் அளித்த பேட்டி: மேகதாது அணை கட்டக்கூடாது என்பது, தமிழக அரசின் நிலைப்பாடு. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தண்ணீர் இருப்பு இருந்தும், கர்நாடகா வழங்கவில்லை.


பாலாறு அணையில் தடுப்பணை குறித்து, சட்ட ரீதியாக சந்திப்போம். அமைச்சர்கள் மீது, புகார் எழுந்தவுடன், குற்றவாளியாக கருத முடியாது. மக்களிடையே, அ.தி.மு.க., செல்வாக்கு அதிகரிப்பதால், வேண்டுமென்றே திட்டமிட்டு, தடை செய்ய முயற்சிக்கின்றனர். அது முடியாததால், இப்படி குற்றச்சாட்டை எழுப்புகின்றனர்.


எந்த துறையிலும், தவறு நடந்துள்ளதாக புகார் வரவில்லை. ஜெயலலிதா ஆட்சியில், குற்றச்சாட்டு தெரிவித்ததும், நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எனக்கு தெரியும். அரசை பொறுத்தவரை, சிறப்பாக செயல்படுகிறது. கடந்த கால, தி.மு.க., ஆட்சியில், பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இனி, அவை வெளியே வரும்.


தேர்தலின்போது, கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். பெட்ரோல் விலையில்,

Advertisement

மதிப்பு கூட்டுவரியை, மத்திய அரசு குறைக்க வேண்டும். தமிழகத்தில், நிதி பற்றாக்குறையாக உள்ளது. ஒவ்வொரு துறையிலும், நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டிய சூழல் உள்ளது.


சி.பி.ஐ., ரெய்டுக்கு, மத்திய அரசே காரணம் என கூறியது, தம்பிதுரை கருத்து; அரசின் கருத்து இல்லை. தமிழக அரசு, மத்திய அரசோடு இணக்கமான சூழலில் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-செப்-201819:46:02 IST Report Abuse

Pugazh V//ஊழல்வாத கட்சி என்று, அதனால்தான் தனியா நின்று வெற்றி பெறும் தைரியம் இல்லை..// ஊர் ஊராக கூட்டணி க்காக அலைகிற பீஜேபிக்கும் இது பொருந்துமல்லவா? திமுக ஊழல் என்று பலரும் பிலாக்கணம் பாடிக்கொண்டே இருக்கிறார்கள் பாவம் ஆதாரங்கள் இல்லாமல் எடுபடவில்லை.

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
12-செப்-201819:06:22 IST Report Abuse

Nakkal Nadhamuniசர்காரியா கமிசன் விசாரனை :- 27 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை திருடி விற்றுள்ளார் கருணாநிதி என்று வாதம் நடந்துகொண்டு இறுக்கிறது. 27 ஆயிரம் சர்க்கரை மூட்டைகள் எங்கு போனது என்று நீதிபதி சர்க்காரியா கேட்டதற்க்கு, கருணாநிதி கூலாக பதில் சொல்கிறார் எறும்புகள் தின்றுவிட்டது என்று.நீதீபதியும் வழக்கறிஞ்சரும் வாயைடைத்து போய்விடுகிறார்கள். ஒரு வாரகாலம் வழக்கு தள்ளிவைக்கபடுகிறது. 27 ஆயிரம் மூட்டை சர்க்கரை ஏழை எளிய மக்களுக்கு செல்லவேண்டியதை திருடி விற்றுள்ளார் எப்படியாவது தண்டனை பெற்றேகொடுக்கவேண்டும் என்று நீதிபதிக்கு மனகுமறல். அரசு வழகறிஞ்சரை கூப்பிட்டு ரகசியமாக பேசுகிறார் ஒரு ஊழல்வாதி தப்பிக்கவே கூடாது. இந்த கேள்வியை கேள் அவன் மாட்டி கொள்வான் தண்டனை கொடுத்து விடலாம் என்கிறார். வழக்கு அடுத்தவாரம் விசாரனைக்கு வருகிறது. வக்கில் கேட்கிறார் 27 ஆயிரம் மூட்டை சர்க்கரையும் எறும்பு தின்றதா என்று ஆமாம் என்கிறார். அப்படி என்றால் அந்த 27 ஆயிரம் சாக்கு கோணிகள் எங்கே என்று கேட்கிறார்? யோசிக்காமல் பதில் சொன்னார் கருணாநிதி "அந்த 27 ஆயிரம் கோணிகளை கரையான் தின்ற பிறகே சர்க்கரையை எறும்புகள் தின்றன" என்று. வழக்கறிஞர் இதயத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டு அமைதியாக தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு நீதிபதியை பார்த்தார். நீதிபதியின் முகத்தில் ஈ ஆடவில்லை. உடனே பேனாவை எடுத்தார் ஊழல் நடந்துள்ளது , அது விஞ்ஞானபூர்வமான ஊழல். ஆதாரத்துடன் நிருபிக்க முடியததால் விடுதலை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு மனவேதனையுடன் சென்றுவிட்டார் அந்த உயர்ந்த மனிதர். A.ARIVARASAN, MA BL ADVOCATE VELLORE.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-செப்-201817:46:21 IST Report Abuse

Malick Rajaமாண்புமிகு முதலமைச்சர் அவுகளே .. நீங்கள் பேசுவதெல்லாம் இனி எடுபடாது . அமைச்சர்களில் பெரும்பாலோர் ஆட்டையை போட்டதெல்லாம் இனி வெளியே வருமுங்கோ .. நீங்க எப்பிடிங்கோ முதலமைச்சர் ஆனிங்கோ .. சசிகலா தானுக முதல் அமைச்சராக உங்களை உக்கார வைத்தார் .. நீங்கள் அவர் காலில் விழுந்து வணங்கியதை உலகமே பார்த்து பதிவு செய்து வச்சிருங்க்க்காங்கோ .. இப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வெளியே அனுப்புங்கோ நீங்களெல்லாம் ஆட்டோமேட்டிக்கா உள்ளே போயிடுவிங்கோ தெரியுமான்களோ .. விஜய பாஸ்கர் நல்லமனிசன் இல்லிங்கோ . ரொம்ப நல்ல மனுஷனாமுங்கோ .. நீங்க பாட்டுக்கு கம்முனு போன கொஞ்சநாள் இன்னும் சம்பாதிக்க வழிஇருக்கும்ங்கியோ .. இல்லாட்டி அம்போ தானுங்க .. புரிஞ்சி போசாக்கும் ..

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X