வேலூர்: வியாபாரிகளை தாக்கி, பணம் பறிக்க திட்டமிட்ட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் வடக்கு போலீசார், நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கொணவட்டம், மரப்பாலத்தில் பதுங்கி இருந்த, ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கொணவட்டத்தைச் சேர்ந்த பாட்ஷா, 35, சைதாப்பேட்டையைச் சேர்ந்த லோகேஷ், 34, ஓல்டு டவுனைச் சேர்ந்த ஜெகன், 25, ஸ்டாலின், 25, தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த நாகு, 30, என்பதும், வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகளை உருட்டு கட்டையால் தாக்கி பணம் பறிக்க திட்டமிட்டிருப்பது, தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.