ஆதார் சாப்ட்வேரை ஹேக் செய்ய முடியும்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆதார் சாப்ட்வேரை ஹேக் செய்ய முடியும்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆதார் சாப்ட்வேர் ஹேக்,  ஹேக்கிங் சாப்ட்வேர்கள், ஆதார் தகவல்கள், மத்திய அரசு, ஆதார் ஆணையம், ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா, ஆதார் பாதுகாப்பு , ஆதார் அடையாள அட்டை, பேட்ச் சாப்டவேர், ஹேக்கர்கள், 
Aadhaar Software Hack, Hacking Software, Aadhaar Information, Central Government, Aadhaar Commission, Huffingtonpost India, Aadhaar Security, Aadhaar Identity Card, Patch Software,hackers,

புதுடில்லி : தனி நபர் அடையாள ஆணையத்தின் ஆதார் சாப்ட்வேரை ஹேக் செய்து, அதிலிருந்து பொதுமக்களின் ஆதார் விவரங்களை திருட உதவும் சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹேக்கிங் சாப்ட்வேர்கள் வெறும் ரூ.2,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்களின் ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசும், ஆதார் ஆணையமும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. எனினும், ஆதார் அடையாள அட்டையின் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு முறையான பதில்கள் கிடைக்கவில்லை
இந்நிலையில், இணையதள நிறுவனங்களின் பாதுகாப்பை உடைக்க பயன்படுத்தப்படும் ஒரு பிரத்யேக சாப்டவேர் மூலம் ஆதார் விவரங்களை திருடலாம் என ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ரூ.2500க்கு கிடைக்கும் அந்த சாப்டவேர், ஆதார் ஆணையத்தின் பாதுகாப்பை உடைத்து, பொதுமக்களின் ஆதார் விவரங்களை காண பயன்படுகிறது. கடந்த சில மாதங்களாக பல்வேறு இணைய நிபுணர்கள் மூலம் அந்த பேட்ச் சாப்டவேரை ஆய்வு செய்து, ஆதார் விவரங்களின் பாதுகாப்பு உடைக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக ஹஃபிங்டன்போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஆதார் விவரங்களை பொதுமக்களிடம் இருந்து பெறும் மையங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேரை இந்த பேட்ச் மூலம் திருடலாம். மேலும், எந்த ஆதார் மையம் இந்த சாப்ட்வேரை பயன்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சேவையையும் இந்த பேட்ச் மூலம் செயல் இழக்க செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த பேட்ச் மூலம், எந்த நாட்டில் உள்ளவர்களும், ஆதார் பாதுகாப்பை எளிதாக உடைக்க முடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதார் கழகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat - chennai,இந்தியா
12-செப்-201820:24:18 IST Report Abuse
venkat என்னவோ ஆதார் வலைத்தளம் மட்டும் மிகவும் வலுவற்றது போல ஒரு மாயை கணினி இணைய மென்பொருள் பற்றி ஏதும் தெரியாத பாமரர்கள், உள்நோக்க எதிரிக்கட்சிகள் புரளி செய்தி பரப்பி வருகிறார்கள். நீங்கள் அன்றாடம் பரிவர்த்தனை செய்யும் எந்த வலைத்தளத்தையும் விட ஆதார் uidai வலைத்தளம் ,மற்றும் பின் தகவல் சேமிப்புத் தொகுப்புகள் பாதுகாப்பானவையே. ஆதார் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உள்ளது என்றால் அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் வாய்ந்த மக்களின் பணப் பரிமாற்ற விவரங்கள் பாதுகாப்பு இல்லை என்ற நிலையே உள்ளது. அதனால் யாரும் பணப் பரிமாற்றங்களை இணையத்தின் மூலம் செய்வது உலகில் நிறுத்தவில்லை. உலகின் மாபெரும் வலைத்தளங்களில் இருந்து இந்த நூற்றாண்டின் சில முக்கிய தகவல் திருட்டுகள் பட்டியல் >> தகவல் கசிவு யாஹூ - 300 கோடி, Adult Friend - 400 கோடி, ஈபே - 150 கோடி, Equiax - 14 கோடி அமெரிக்கா ஆதாருக்கு இணையான SSN மற்றும் 2 லட்சம் கிரெடிட் கார்டு விவரம் உட்பட, Heartland Payment - 13 கோடி கிரெடிட் கார்டு தகவல், Target Store - 11 கோடி கிரெடிட் கார்டு, TJX - 9 கோடி கிரெடிட் கார்டு, உபேர் - 5.7 கோடி பயனாளி 6 லட்சம் ஓட்டுநர், ஜெ பி மார்கன் - 7.6 கோடி இல்லத்தோர், 70 லட்சம் சிறுவணிகர், US Office of Pers Mgt - 2.2 கோடி அரசு ஊழியர், சோனி play ஸ்டேஷன் - 7.7 கோடி இணைய கணக்குகள் ($ 17 கோடி இழப்பு) .Anthem - 7.88 கோடி வாடிக்கையாளர் விவரம், RSA Sec - 4 கோடி ஊழியர் விவரம், ஈரான் அணு ஆயுத திட்டம், Veri Sign, Home Depot - 5.6 கோடி கிரெடிட் கார்டு விவரம், Adobe - 3 .8 கோடி பயனாளி விவரம் .....இதையெல்லாம் பார்க்கும்போது ஆதார் தகவல் திருட்டு என்பது வெறும் புரட்டுப் புரளிகள்.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
12-செப்-201818:45:46 IST Report Abuse
jagan சாப்ட்வேர் வல்லரசு ஹா ஹா ஹா
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201818:20:47 IST Report Abuse
Srinivasan Kannaiya மின்னணு என்றாலே அதை திசை மாற்றமுடியும்... நம் இஷ்டம் போல செயல்படவைக்க முடியும்... புற சாதனங்கள் மூலம் அதை செயலிழக்க வைக்கவும் முடியும்... சொன்னால் யாரும் கேட்பது இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X