ஆதார் சாப்ட்வேரை ஹேக் செய்ய முடியும்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆதார் சாப்ட்வேரை ஹேக் செய்ய முடியும்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (30)
ஆதார் சாப்ட்வேர் ஹேக்,  ஹேக்கிங் சாப்ட்வேர்கள், ஆதார் தகவல்கள், மத்திய அரசு, ஆதார் ஆணையம், ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா, ஆதார் பாதுகாப்பு , ஆதார் அடையாள அட்டை, பேட்ச் சாப்டவேர், ஹேக்கர்கள், 
Aadhaar Software Hack, Hacking Software, Aadhaar Information, Central Government, Aadhaar Commission, Huffingtonpost India, Aadhaar Security, Aadhaar Identity Card, Patch Software,hackers,

புதுடில்லி : தனி நபர் அடையாள ஆணையத்தின் ஆதார் சாப்ட்வேரை ஹேக் செய்து, அதிலிருந்து பொதுமக்களின் ஆதார் விவரங்களை திருட உதவும் சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹேக்கிங் சாப்ட்வேர்கள் வெறும் ரூ.2,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்களின் ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசும், ஆதார் ஆணையமும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. எனினும், ஆதார் அடையாள அட்டையின் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு முறையான பதில்கள் கிடைக்கவில்லை
இந்நிலையில், இணையதள நிறுவனங்களின் பாதுகாப்பை உடைக்க பயன்படுத்தப்படும் ஒரு பிரத்யேக சாப்டவேர் மூலம் ஆதார் விவரங்களை திருடலாம் என ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ரூ.2500க்கு கிடைக்கும் அந்த சாப்டவேர், ஆதார் ஆணையத்தின் பாதுகாப்பை உடைத்து, பொதுமக்களின் ஆதார் விவரங்களை காண பயன்படுகிறது. கடந்த சில மாதங்களாக பல்வேறு இணைய நிபுணர்கள் மூலம் அந்த பேட்ச் சாப்டவேரை ஆய்வு செய்து, ஆதார் விவரங்களின் பாதுகாப்பு உடைக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக ஹஃபிங்டன்போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஆதார் விவரங்களை பொதுமக்களிடம் இருந்து பெறும் மையங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேரை இந்த பேட்ச் மூலம் திருடலாம். மேலும், எந்த ஆதார் மையம் இந்த சாப்ட்வேரை பயன்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சேவையையும் இந்த பேட்ச் மூலம் செயல் இழக்க செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த பேட்ச் மூலம், எந்த நாட்டில் உள்ளவர்களும், ஆதார் பாதுகாப்பை எளிதாக உடைக்க முடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதார் கழகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X