ரூ.55க்கு பெட்ரோல்: கட்கரி தரும் யோசனை

Updated : செப் 12, 2018 | Added : செப் 12, 2018 | கருத்துகள் (71)
Advertisement
நிதின் கட்கரி, பயோ பியூல், பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, எதனால், உயிரி எரிபொருள்,  அமைச்சர் நிதின் கட்கரி , நிதின் கட்கரி யோசனை, மெதனால், சிஎன்ஜி,பெட்ரோலிய பொருட்கள்,  பயோ டீசல், எதனால் தொழிற்சாலை, எத்தனால், Ethanol
Nitin Gadkari, petrol price hike, diesel price rise, bio fuel, 
Minister Nitin Gadkari, Nitin Gadkari idea, Methanal, CNG, petroleum products, bio diesel, ethanal factory,எத்தனால் தொழிற்சாலை,

ராய்பூர்: உயிரி எரிபொருள் (பயோ பியூவல்) பயன்பாட்டை அதிகரித்தால், டீசல் லிட்டர் 50 ரூபாய்க்கும், பெட்ரோல் லிட்டர் 55 ரூபாய்க்கும் கிடைக்கும் சூழ்நிலை உருவாகும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி யோசனை தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது:


எதனால், மெதனால், உயிரி எரிபொருள் மற்றும் சி.என்.ஜி.,க்கு மாறினால், பெட்ரோலிய பொருட்கள் பயன்பாடு குறைந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும். நாம் ஆண்டுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்கிறோம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. விவசாயிகள், பழங்குடி மக்கள், வனவாசிகள் எதனால், மெதனால், உயிரி எரிபொருளை உற்பத்தி செய்தால், குறுகிய காலத்தில் செல்வந்தராகி விடலாம் என்பதை, 15 ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன். எதனால், பயோ டீசல், சி.என்.ஜி., மெதனால், உயிரி எரிபொருளால் இயக்கப்படும் ஆட்டோக்கள், பஸ்கள், டாக்சிகளுக்கு பர்மிட்டில் விலக்கு அளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

நமது பெட்ரோலிய அமைச்சகம், ஐந்து எதனால் தொழிற்சாலைகளை உருவாக்கி வருகிறது. நெல் மற்றும் கோதுமையின் வைக்கோல் மற்றும் கரும்பு சக்கை, நகராட்சி பகுதிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து எதனால் தயாரிக்கப்படும். இந்த முயற்சிக்கு பிறகு டீசல் லிட்டருக்கு 50 ரூபாய்க்கும், பெட்ரோல் லிட்டர் 55 ரூபாய்க்கும் கிடைக்கும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
17-செப்-201817:01:17 IST Report Abuse
Jaya Ram அப்போ வெகுவிரைவில் அம்பானி, அல்லது அதானி ஏஜெண்சி மூலம் எத்தனால் அமெரிக்காவில் இறக்குமதியாகப் போகிறது அதற்குத்தான் மக்களை பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது அதனால் அதனுடன் எத்தனால் கலந்து விற்பனைக்கு அனுமதித்து விலையினை குறைக்க முடிவு செய்துள்ளீர்கள் என்பதனை தெளிவாக கூறிவிட்டிர்கள், அது பற்றிய அறிவிப்பு அநேகமாக ஜனவரி வாக்கில் வெளியாகலாம் ஓஹ் அதுக்குத்தான் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி வந்து போனாரோ, இதனால்தான் ட்ரும்ப் இந்தியா எங்களுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என்று கூறினாரோ. தேங்கிக்கிடக்கும் எத்தனாலை அனுப்புவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம் எதத்னாலுக்கும் மக்கள் பெட்ரோல்விலை கொடுக்க போகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
13-செப்-201801:34:37 IST Report Abuse
Panneerselvam Chinnasamy பெட்ரோலியம் விலை உயர்வால் மாற்று எரிபொருள் உற்பத்தி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது... ஆனால் அது நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவைப்படும்... ஆனாலும் அதை தேவை அடிப்படையில் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-செப்-201820:58:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் Reuters news: U.S. ethanol makers call on Mexico, India to reduce biofuel glut .. ராய்ட்டர் செய்தி நிறுவன தகவல் - 9 மாதங்களுக்கு முன்பு: அமெரிக்காவில் மிதமிஞ்சிய எத்தனால் உற்பத்தி காரணமாக அதை மெக்சிகோ, இந்தியாவுக்கு தள்ள ஏற்பாடு.. கூடவே மோசடி அரசாங்கம் இதுக்கு வரிசலுகைன்னு சொல்லி, இதை அம்பானி மட்டும் தான் இறக்குமதி செய்யணும்னு சட்டத்தை வளைத்து.. என்றைக்கும் போல கார்ப்பரேட் குந்தாணிகள் வரிப்பணத்தை கொள்ளை அடித்து போக வழி செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X