ரூ.55க்கு பெட்ரோல்: கட்கரி தரும் யோசனை| Dinamalar

ரூ.55க்கு பெட்ரோல்: கட்கரி தரும் யோசனை

Updated : செப் 12, 2018 | Added : செப் 12, 2018 | கருத்துகள் (71)
நிதின் கட்கரி, பயோ பியூல், பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, எதனால், உயிரி எரிபொருள்,  அமைச்சர் நிதின் கட்கரி , நிதின் கட்கரி யோசனை, மெதனால், சிஎன்ஜி,பெட்ரோலிய பொருட்கள்,  பயோ டீசல், எதனால் தொழிற்சாலை, எத்தனால், Ethanol
Nitin Gadkari, petrol price hike, diesel price rise, bio fuel, 
Minister Nitin Gadkari, Nitin Gadkari idea, Methanal, CNG, petroleum products, bio diesel, ethanal factory,எத்தனால் தொழிற்சாலை,

ராய்பூர்: உயிரி எரிபொருள் (பயோ பியூவல்) பயன்பாட்டை அதிகரித்தால், டீசல் லிட்டர் 50 ரூபாய்க்கும், பெட்ரோல் லிட்டர் 55 ரூபாய்க்கும் கிடைக்கும் சூழ்நிலை உருவாகும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி யோசனை தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது:


எதனால், மெதனால், உயிரி எரிபொருள் மற்றும் சி.என்.ஜி.,க்கு மாறினால், பெட்ரோலிய பொருட்கள் பயன்பாடு குறைந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும். நாம் ஆண்டுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்கிறோம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. விவசாயிகள், பழங்குடி மக்கள், வனவாசிகள் எதனால், மெதனால், உயிரி எரிபொருளை உற்பத்தி செய்தால், குறுகிய காலத்தில் செல்வந்தராகி விடலாம் என்பதை, 15 ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன். எதனால், பயோ டீசல், சி.என்.ஜி., மெதனால், உயிரி எரிபொருளால் இயக்கப்படும் ஆட்டோக்கள், பஸ்கள், டாக்சிகளுக்கு பர்மிட்டில் விலக்கு அளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

நமது பெட்ரோலிய அமைச்சகம், ஐந்து எதனால் தொழிற்சாலைகளை உருவாக்கி வருகிறது. நெல் மற்றும் கோதுமையின் வைக்கோல் மற்றும் கரும்பு சக்கை, நகராட்சி பகுதிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து எதனால் தயாரிக்கப்படும். இந்த முயற்சிக்கு பிறகு டீசல் லிட்டருக்கு 50 ரூபாய்க்கும், பெட்ரோல் லிட்டர் 55 ரூபாய்க்கும் கிடைக்கும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X