நெல்லையில் மூவரை தாக்கி கார் பறிப்பு: 6 பேர் கும்பல் கைவரிசை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் மூவரை தாக்கி கார் பறிப்பு: 6 பேர் கும்பல் கைவரிசை

Added : செப் 12, 2018 | கருத்துகள் (1)
நெல்லை கார் பறிப்பு, திருநெல்வேலி,  ரகுராமகிருஷ்ணன், நெல்லை ஜங்ஷன், நம்பிராஜன் , சுரேஷ்குமார், தாமிரபரணி ஆறு, கார் பறிப்பு கும்பல் , Tirunelveli, Raguramakrishnan, Nellai Junction, Nambirajan, Suresh Kumar, Thamiraparani River, Car flush gang,Nellai car flush, Tirunelveli,

திருநெல்வேலி: நெல்லையில் நள்ளிரவில் மூவரை தாக்கி, காரை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி, நரசிங்கநல்லூரை சேர்ந்தவர் ரகுராமகிருஷ்ணன் 39. மருத்துவ பிரதிநிதி. இவரது உறவினர் சங்கரன்கோவிலை சேர்ந்த சுரேஷ்குமார் 35. நேற்று பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.அந்த காருடன் சென்று இரவு 10 மணிவாக்கில் நெல்லை ஜங்ஷன், உடையார்பட்டி அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துள்ளனர். அவர்களுடன் நம்பிராஜன் 25, என்பவரும் உடன் இருந்துள்ளார்.
இரவு 11 மணிவாக்கில், ஆற்றங்கரைக்குள் அரிவாள், கட்டை, இரும்பு ராடுகளுடன் வந்த 6 பேர் கும்பல், மூவரையும் சரமாரியாக தாக்கினர். அவர்களிடம் இருந்த 2 மொபைல் போன்கள், பையில் இருந்த 15 ஆயிரம் ரூபாய், லைசென்ஸ், ஆதார் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.
பின்னர் மூவரை காரில் ஏற்றிக்கொண்டு காரையும் கடத்திசென்றனர். ஜங்ஷன் வடக்கு பைபாஸ் ஆற்றுப்பாலம் அருகில் வந்ததும் ரகுராமகிருஷ்ணன், சுரேஷ்குமார் ஆகியோர் காரில் இருந்து குதித்து தப்பினர். நம்பிராஜனை மட்டும் அந்த கும்பல் காரில் கடத்திச்சென்று நாங்குநேரி செல்லும் சாலையில், டக்கரம்மாள்புரம் என்னுமிடத்தில் விட்டுச்சென்றுள்ளனர்.

மூவரும் பலத்த காயங்களுடன் தற்போது நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

கடத்தப்பட்ட டிஎன்07 பிஎல் 2724 என்ற பதிவு எண் கொண்ட இன்டிகா விஸ்டா கார்குறித்து போலீசார் அனைத்து போலீஸ் சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X