பட்டு சேலை வாங்க பெண்கள் 'கியூ'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பட்டு சேலை வாங்க பெண்கள் 'கியூ'

Added : செப் 12, 2018 | கருத்துகள் (16)
Advertisement
முதல்வர் குமாரசாமி, மைசூரு பட்டு சேலை, கர்நாடக கௌரி விழா,  கர்நாடகா, பெண்கள் வரிசை, கர்நாடக கவுரி விழா, ஷா ரா மகேஷ், வரமகாலட்சுமி விழா,   தள்ளுபடி விலையில் பட்டு புடவைகள்,  மைசூரு பட்டு கடை, மைசூரு நாசர்பாத் , பட்டு சேலை விலை குறைப்பு, Chief Minister kumarasamy, Mysore Silk Sarees,
Karnataka Gowri Festival, Karnataka, Womens, Karnataka Gauri Festival, Shah Raw Mahesh, Varamahalakshakshi Festival, Silk Sarees, Mysore Silk Shop, Mysore Nasarbat, Silk Sala Price Reduction,

மைசூரு: கர்நாடக மாநிலத்தில், தள்ளுபடி விலையில் மைசூரு பட்டு சேலை வாங்க, ஏராளமான பெண்கள் வரிசையில் நின்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கவுரி விழாவை ஒட்டி விற்பனை

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சுற்றுலா துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஷா ரா மகேஷ், வரமகாலட்சுமி விழா நாளில் இருந்து தள்ளுபடி விலையில் பட்டு புடவைகள் விற்கப்படும் என அறிவித்தார்.

அன்றைய தினம் கடைகளுக்கு சென்ற பெண்களுக்கு விலை குறைந்த புடவைகள் கிடைக்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கவுரி விழாவின் போது, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சேலை 4,500 ரூபாய்க்கு கிடைக்கும் வகையில் புதிய திட்டம் துவக்கப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.

கர்நாடகாவில் கவுரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனால், மைசூருவில் நாசர்பாத் என்ற இடத்தில் உள்ள கர்நாடக பட்டு ஆலை கழகத்தின் மைசூரு பட்டு கடை முன் நேற்று காலை( செப்., 11) 6 மணி முதல் முதல் பெண்கள் குவிய தொடங்கி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. மதியம் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த பிறகே புடவை விற்பனை துவங்கும் என கடை ஊழியர்கள் கூறினர். மேலும், 1,800 புடவைகளே கைவசம் உள்ளன. எனவே குலுக்கல் முறையில் விற்பனை செய்யலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.

எனினும், இதை பெண்கள் ஏற்கவில்லை. யார் முதலில் வந்தார்களோ அவர்களுக்கு புடவை வழங்க கோரினர். இறுதியில், பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் பெண்களுக்கு புடவை விற்பனை செய்யப்பட்டது.எனினும், வண்ணம் மற்றும் டிசைனை தேர்வு செய்து புடவையை வாங்க முடியவில்லை என பெண்கள் குறைப்பட்டு கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nabikal naayakam - தூத்துக்குடி,இந்தியா
12-செப்-201820:05:10 IST Report Abuse
nabikal naayakam கேவலமான பெண்கள்.....சைவ உணவு பழக்கம் கொண்டவர்கள்கூட இப்படி உயிர்க்கொலை செய்து உருவாகும் புடவை வாங்குவது அநியாயம்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-செப்-201816:49:21 IST Report Abuse
இந்தியன் kumar புடவை மோகம் என்றும் பெண்களுக்கு குறைவதே இல்லை
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-செப்-201815:50:18 IST Report Abuse
மலரின் மகள் நீண்ட நாட்கள் கழித்து தினமலர் நல்ல செய்தியை வெளியிட்டிருக்கிறது. கர்நாடகாவை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் இது போன்று செய்யலாமே. இவர்கள் அம்மா பட்டுப்புடவை திட்டம் கொண்டு வந்திருக்கலாம். ஒன்லைன் இல் விற்றிருந்தால் என்போன்றோருக்கு சிறப்பாக இருந்திருக்கும். பெங்களூரு இத்தனைக்கும் இந்தியாவின் டிஜிட்டல் சிட்டியாம். ஒரு பத்து புடவை வாங்கி இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X