பட்டு சேலை வாங்க பெண்கள் 'கியூ'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பட்டு சேலை வாங்க பெண்கள் 'கியூ'

Added : செப் 12, 2018 | கருத்துகள் (16)
முதல்வர் குமாரசாமி, மைசூரு பட்டு சேலை, கர்நாடக கௌரி விழா,  கர்நாடகா, பெண்கள் வரிசை, கர்நாடக கவுரி விழா, ஷா ரா மகேஷ், வரமகாலட்சுமி விழா,   தள்ளுபடி விலையில் பட்டு புடவைகள்,  மைசூரு பட்டு கடை, மைசூரு நாசர்பாத் , பட்டு சேலை விலை குறைப்பு, Chief Minister kumarasamy, Mysore Silk Sarees,
Karnataka Gowri Festival, Karnataka, Womens, Karnataka Gauri Festival, Shah Raw Mahesh, Varamahalakshakshi Festival, Silk Sarees, Mysore Silk Shop, Mysore Nasarbat, Silk Sala Price Reduction,

மைசூரு: கர்நாடக மாநிலத்தில், தள்ளுபடி விலையில் மைசூரு பட்டு சேலை வாங்க, ஏராளமான பெண்கள் வரிசையில் நின்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கவுரி விழாவை ஒட்டி விற்பனை

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சுற்றுலா துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஷா ரா மகேஷ், வரமகாலட்சுமி விழா நாளில் இருந்து தள்ளுபடி விலையில் பட்டு புடவைகள் விற்கப்படும் என அறிவித்தார்.

அன்றைய தினம் கடைகளுக்கு சென்ற பெண்களுக்கு விலை குறைந்த புடவைகள் கிடைக்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கவுரி விழாவின் போது, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சேலை 4,500 ரூபாய்க்கு கிடைக்கும் வகையில் புதிய திட்டம் துவக்கப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.

கர்நாடகாவில் கவுரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனால், மைசூருவில் நாசர்பாத் என்ற இடத்தில் உள்ள கர்நாடக பட்டு ஆலை கழகத்தின் மைசூரு பட்டு கடை முன் நேற்று காலை( செப்., 11) 6 மணி முதல் முதல் பெண்கள் குவிய தொடங்கி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. மதியம் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த பிறகே புடவை விற்பனை துவங்கும் என கடை ஊழியர்கள் கூறினர். மேலும், 1,800 புடவைகளே கைவசம் உள்ளன. எனவே குலுக்கல் முறையில் விற்பனை செய்யலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.

எனினும், இதை பெண்கள் ஏற்கவில்லை. யார் முதலில் வந்தார்களோ அவர்களுக்கு புடவை வழங்க கோரினர். இறுதியில், பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் பெண்களுக்கு புடவை விற்பனை செய்யப்பட்டது.எனினும், வண்ணம் மற்றும் டிசைனை தேர்வு செய்து புடவையை வாங்க முடியவில்லை என பெண்கள் குறைப்பட்டு கொண்டனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X