chennai | நம்பிக்கைதந்த மாணவர்கள்...| Dinamalar

நம்பிக்கைதந்த மாணவர்கள்...

Updated : செப் 12, 2018 | Added : செப் 12, 2018
 நம்பிக்கைதந்த மாணவர்கள்...

மக்கள், மாணவர்கள் என்று யாராக இருந்தாலும் தங்கள் வேலை, தொழில், படிப்பு என்ற வளையத்தைத் தாண்டி தாம் வாழும் இந்த சமூகத்திற்காக சுயநலமின்றி உதவுவார்கள் என்றால் அவர்களை தினமலர்.காம் சார்பில் அடையாளப்படு்த்தி எழுத்தால் கவுரவம் சேர்க்க நான் என்றுமே தயங்கியது இல்லை.
அந்த வகையில் சென்னை ராமபுரத்தில் உள்ள ஈஸ்வரி என்ஜீனிரிங் கல்லுாரி மாணவர்கள் வெகுநாட்களாகவே என் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை மையப்படுத்தி மக்கள் அரங்கத்தில் நாடகம் நடத்தி, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு கிராமத்தில் உள்ள பெண்களுக்கான பள்ளியில் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கின்றனர் என்று கேள்விப்பட்டதில் இருந்து இந்தக் கல்லுாரி மாணவர்கள் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு.
இவர்களை நேரில் சந்தித்து பாராட்டவேண்டும் என்ற எண்ணமும் இருந்தது,அதற்கான வாய்ப்பை அவர்களே கடந்த 5ந்தேதி ஆசிரியர் தினத்தன்று உருவாக்கி கொடுத்திருந்தனர்.

அன்றைய தினம் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் (மின்னனு மற்றும் உபகரணங்களுக்கான பொறியியல்) பிரிவில் ஸ்டூடன்ட் சொசைட்டி மற்றும் இண்டர்நேஷனல் சொசைட்டி ஆப் ஆட்டோமேஷன் என்ற இரு அமைப்பின் துவக்கவிழாவிற்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.மாணவர்களால், மாணவர்களுக்காக மிக நேர்தியாக நடத்தப்பட்ட விழா அது.
கல்லுாரி முதல்வர் டாக்டர் க.கதிரவனை முதலில் பாராட்ட வேண்டும் சிரித்த முகத்துடன் சுறுசுறுப்பாக அறிமுகமானார். விருந்தினர்களை காக்கவைக்கக்கூடாது என்பதற்காகவும் நேர நிர்வாகத்தை கடைபிடிப்பதற்காகவும் என் முன்பாகவே மதிய உணவை மறுத்துவிட்டு விழாவிற்கு தலைமைதாங்கினார்.
அதுமட்டுமின்றி இந்த துறை மாணவர்கள் நிகழ்த்திவரும் சாதனையை எந்தவித குறிப்புகளும் வைத்துக்கொள்ளாமல் பேசி பராட்டினார், மாணவர்களின் கைதட்டலையும் அமோகமாக பெற்றார்.இவரது பேச்சு மாணவர்களுக்கு ஊக்கம் தருவதாக அமைந்திருந்தது.
துறைத்தலைவர் டாக்டர் நாகராஜன், இந்த துறை மாணவர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே சொல்லவேண்டும் தனது முத்திரையை அழுத்தமாக பதியவேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளை சொன்னபோது மனதிற்குள் சந்தோஷ மழை பொழிந்தது
விழாவிற்கு விருந்தினரை அழைத்துவிட்டோமோ! அப்புறம் என்ன? என்று இருந்து விடாமல் என்னை விடாமல் தொடர்பு கொண்டு வரவேற்றதி்ல் இருந்து திரும்ப அனுப்புவது வரை மிகவும் பொறுப்பேடுத்து செயல்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரெ.லட்சுமி மற்றும் டாக்டர் குணசெல்வி மனோகர் ஆகியோரின் அன்பிர்க்கும் பண்பிர்க்கும் தனி வணக்கங்கள்.
தொடர்ந்து மாணவர்கள் அடுத்த தங்களது சாதனை இலக்குகள் என்ன என்பதை விளக்கிய போது அரங்கத்தில் கரவொலி அதிர்ந்தது, எதையும் திட்டமிட்டு செயல்பட்டாலே பாதிவெற்றி அப்போதே கிடைத்ததுவிட்டது என்றே கருதலாம்.
தினமலர் ஐ பேப்பர்தான் தற்போது ட்ரெண்ட், அனைவரது மொபைல் ஆப்பிலும் கட்டாயம் இந்த தினமலர் ஐ பேப்பர் ஆப் இருக்கிறது. சமீபத்தில்தான் இந்த ஐ பேப்பர் அறிமுகமானது, இந்த ஐ பேப்பரில் உள்ள படங்கள் மாறிக்கொண்டே இருக்கும், வெறும் படமாக மட்டுமின்றி தொட்டால் வீடியோவாகவும் மாறும். உதாரணமாகச் சொல்லப்போனால் கார் ரேஸ் படம் பேப்பரில் இருக்கும் இது ஐ பேப்பரிலும் இருக்கும் ஆனால் ஐ பேப்பரில் உள்ள கார் ரேஸ் படத்தை தொட்டால் விர்ரென்ற சத்தத்துடன் வீடியோவில் ரேஸ் காட்சிகள் ஆடியோ வீடியோவாக ஓடும்.இது போல இன்னும் பல புதுமைகள் ஐ பேப்பரில் இருக்கிறது பார்த்துக் கொண்டு இருக்கிறவர்களுக்கு தெரியும், புதிதாக பார்ப்பவர்களுக்கும் புரியும்.

இந்த ஐ பேப்பர் என்ற அபார தொழில்நுட்பத்தின் பின்னனியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் மாணவர்களின் பங்கு பெரிதாக இருக்கிறது என்று நான் சொன்ன போது மாணவர்கள் முதல் துறைத்தலைவர் வரை வருங்காலத்தில் இந்தத்துறைக்கு இன்னும் பெரிய வரவேற்பு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டும் பகி்ர்ந்துகொண்டும் பெருமிதம் அடைந்தனர்.

மாணவர்களை உற்சாகப்படுத்தப் போய் நான் மிகவும் உற்சாகம் பெற்றுவந்தேன் என்பதுதான் நிதர்சனம் ஒரு நல்ல விழாவில் கலந்து கொண்ட நாளைய தேசத்திற்கு நல்லதொரு வழிகாட்டவிருக்கும் பண்புகள் நிறைந்த நம்பிக்கைதந்த மாணவர்கள் பலரை சந்தித்த மகிழ்ச்சி மனதில் நிறைந்து உள்ளது.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X