36 பிரேத பரிசோதனை செய்த போலி டாக்டர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

36 பிரேத பரிசோதனை செய்த போலி டாக்டர்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (24)
Advertisement
கர்நாடகா போலி டாக்டர், பிரேத பரிசோதனை, விகாஸ்,  அரசு மருத்துவமனை, டாக்டர் விகாஸ் பாட்டீல் , விகாஸ் பிஎஸ்சி நர்சிங், 
Karnataka Fake Doctor, Postmortem, Vikas, Government Hospital, Dr. Vikas Patil, Vikas Bsc Nursing,

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், அரசு மருத்துவமனைகளில் 36 பிரேத பரிசோதனை செய்த போலி டாக்டர் சிக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம், பாகல்கோடு மாவட்டம், முத்ஹோல் என்ற பகுதியை சேர்ந்தவர் விகாஸ். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடாக் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில், 36 பிரேத பரிசோதனை செய்துள்ளார். விகாஸ், பி.எஸ்சி., நர்சிங் படித்தவர். ஆனால், டாக்டர் விகாஸ் பாட்டீல் என்பவரின் சான்றிதழில் தனது போட்டோவை ஒட்டி, தான் ஒரு டாக்டர் என கூறி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார்.

சமீபத்தில் தான் அவரை பற்றிய உண்மை தெரிய வந்தது. மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் அளித்த புகாரின் பேரில் போலீசார், விகாசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் விகாஸ் கூறுகையில்,' என்னால் மற்ற டாக்டர்களை போல மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், நான் பி.எஸ்சி., நர்சிங் படித்து இருந்ததால் தாழ்வு மனப்பான்மை தோன்றியது. எனவே தான் டாக்டர் என கூறி தொடங்கினேன்' என்றார்.

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramaniam - Tirupur,இந்தியா
12-செப்-201820:59:58 IST Report Abuse
Balasubramaniam மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, போலி டாக்டர் போஸ்ட்மார்டம் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டும் பிரயோஜனம் இல்லை. ஆனால் படம் மட்டுமே
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
13-செப்-201804:10:28 IST Report Abuse
uthappaதந்தி டி வி மக்கள் மன்றத்தில் மபொ பாண்டியராஜன் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பலனை கூறியுள்ளார், காது கொடுத்து ஒருமுறை யு டுபிலாவது கேளுங்கள். வெறும் காழ்ப்புணர்ச்சி மட்டும் இருக்கக்கூடாது. நாணயத்தின் இரு பக்கமும் தெரிந்து கொள்ள வேண்டும்....
Rate this:
Share this comment
Ivan - ,
13-செப்-201805:56:56 IST Report Abuse
IvanTirupur Bala, modi hospital dean than citizens doctors mathiri fake a iruntha ethana postmodem pannunalum waste than....
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
12-செப்-201820:48:20 IST Report Abuse
 Muruga Vel டாக்டர்கள் கடவுள் கிடையாது .இன்ஜினியரிங்கில் இருப்பது போல டிப்ளமா டாக்டர் .. மேஸ்திரி டாக்டர் என்று திறமைக்கு தகுந்தாற்போல இருக்கணும் ..தலைவலிக்கும் காய்ச்சலுக்கும் MBBS தேவை கிடையாது … இதன் மூலம் நிறைய வேலை வாய்ப்பும் கிடைக்கும் ..கிராமத்தில் பணி செய்ய விரும்பாத MD MS MBBS மருத்துவர்களுக்கு மாற்றாக டிப்ளமா டாக்டர்களும் மேஸ்திரி டாக்டர்களும் கிராமத்தில் பணிபுரிவார்கள் .அமெரிக்காவிலேயே பிரசவம் பார்க்க ..குழந்தை பராமரிப்புக்கு பெரும்பாலும் நர்ஸ்கள் பணியாற்றுகிரார்கள்
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
12-செப்-201819:11:02 IST Report Abuse
Raghuraman Narayanan Have doctors of Government Hospitals outsourced this task to Vikas ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X