மக்களுக்கு அவதி: மாநிலங்களுக்கு அட்சய பாத்திரம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மக்களுக்கு அவதி: மாநிலங்களுக்கு அட்சய பாத்திரம்

Updated : செப் 12, 2018 | Added : செப் 12, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பெட்ரோல் விலை உயர்வு , டீசல் விலை உயர்வு ,வரி வருவாய், பெட்ரோல், டீசல், மாநில அரசுகள்,  கச்சா எண்ணெய், அமெரிக்க டாலர், இந்திய ரூபாய் மதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ,  
Petrol price hike, diesel price hike, tax revenue, petrol, diesel, state governments, crude oil, USD, rupee value, petrol diesel price hike,

புதுடில்லி: தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு தான் அவதியாக உள்ளது. அதே நேரத்தில், நடப்பு நிதியாண்டில் ரூ.22,700 கோடி வரி வருவாய் தரும் அளவுக்கு மாநில அரசுகளுக்கு அட்சய பாத்திரமாக உள்ளது.


ஆய்வு அறிக்கை சொல்வது என்ன

எஸ்.பி.ஐ.,யின் ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73ஐ எட்டும் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. அத்துடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 78 அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு மாநில அரசுகளுக்கு கூடுதல் வரி வருவாயை அளிக்க உள்ளது. நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை தாண்டி ரூ.22,700 கோடி அளவுக்கு மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்க உள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலையில், ஒரு டாலர் உயர்கிறது என்றால், முக்கியமான 19 மாநில அரசுகளுக்கு ரூ.1,513 கோடி வருவாய் கிடைக்கும்.முதல் இடத்தில் மகாராஷ்டிரா

கூடுதல் வருவாய் பெறும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இந்த மாநில அரசுக்கு ரூ.3,389 கோடி ரூபாய் கிடைக்கும். அடுத்தாக, குஜராத் மாநிலத்திற்கு ரூ.2,842 கோடி கிடைக்கும். நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிக வரி வசூலிக்கப்படுகிறது. அங்கு, ஒரு லிட்டருக்கு 39.12 சதவீத வாட் விதிக்கப்படுகிறது. குறைந்த பட்சமாக குஜராத் மாநிலத்தில், ஒரு லிட்டருக்கு 16.66 சதவீத வாட் விதிக்கப்படுகிறது.குறைத்தாலும் பாதிப்பு இல்லைமகாராஷ்டிரா, ம.பி., பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்களுக்கு நிதி ஆதாரம் உள்ளது. அம்மாநிலங்களில் பெட்ரோல் விலையில், ரூ.3, டீசல் விலையில், ரூ.2.50 குறைக்க முடியும். மாநில அரசுகள் கச்சா எண்ணெய் விலை, போக்குவரத்து செலவு மற்றும் கமிஷன் ஆகியவை மட்டும் அடங்கிய அடிப்படை விலை மீது வாட் விதித்தால், லிட்டருக்கு டீசல் விலையில் ரூ.3.75, பெட்ரோல் விலையில், ரூ.5.75 குறையும். ஆனால் மாநில அரசுகளுக்கு ரூ.12,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.


இவ்வாறு அந்த அறிக்கை குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
13-செப்-201805:55:00 IST Report Abuse
Ivan He he vanthutanunga en bathroom adachitu central govt mathu nu solla.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-செப்-201820:15:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மக்கள் கிட்டேருந்து கழுத்தை நெறிச்சி பிடுங்கி என்ன செய்ய போறாங்க? மக்களுக்கு நல திட்டங்கள் செய்யப் போறோம்.. ஓஹோ.. அப்ப பிடுங்காமல் இருந்தாலே அவங்களுக்கு நல்லது தானே? நீங்க திட்டங்கன்னு சொல்லி திட்டம் போட்டு திருட பணம் வேணும். அதுக்கு அடிக்கிற சுரண்டல் கொள்ளை தாண்டா இது.
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
13-செப்-201801:49:32 IST Report Abuse
uthappaநல்ல கேள்வி, மாநிலங்களுக்கு செருப்பால் அடித்த மாதிரி. குரூட் ஆயில் இறக்குமதி செய்வது, அதை மத்திய அரசின் ஆயில் கம்பனிகள் சீர்படுத்தி ( refine) , காஷ்மீரிலிருந்து குமரி வரை , தவறாமல் கிடைக்கும்படி செய்கிறது. ஆயில் கம்பனிகளின் பணியாளர்களுக்கு, சம்பளம் , போனஸ், பி எப் , பென்ஷன் இதனைசயிம் கொடுக்கப்பட வேண்டும்.எதுவுமே செய்யாத மாநிலங்கள் எதற்க்காக வரி வசூலிக்கிறார்கள்? எல்லா பெட்ரோல் பங்க் களிலும் இப்பிடி போர்டு வைக்க சொன்னால் மக்கள் புரிந்து கொள்வார்கள்... மூல பொருள்: 34.00 மத்தியஅரசு வரி:13.00 மாநில அரசு வரி:30.00 டீலர் கமிஷன்: 6.00 மொத்தம் ருபாய் _______ (ஒரு லிட்டர்Petrol): 83.00...
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
12-செப்-201820:14:30 IST Report Abuse
ஜெயந்தன் மத்திய அரசின் வருவாய் எவ்வளவு..அதையும் சொல்ல வேண்டாமா..20 மாநிலங்களில் இவர்கள் ஆட்சியில் இருக்கும்போதே மக்களுக்கு நாக்கு தள்ளுகிறது..இன்னும் மொத்தமும் இவர்கள் வந்து விட்டால்..சங்குதான்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X