பலாத்கார புகாரில் பேராயருக்கு சம்மன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பலாத்கார புகாரில் பேராயருக்கு சம்மன்

Updated : செப் 12, 2018 | Added : செப் 12, 2018 | கருத்துகள் (45)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பேராயர், பலாத்கார புகார், ஆலோசனை

திருவனந்தபுரம்: பலாத்கார புகாருக்குள்ளான பேராயருக்கு வரும் 19ம் தேதி ஆஜராகும்படி கேரள போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.


போராட்டம்

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதி கிடைக்க வலியுறுத்தி, சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கடிதம்

பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டில்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை, பேராயர் முலக்கல், என்னை பலாத்காரம் செய்தார். . தற்போது நான் புகார் கொடுத்துள்ளேன். பேராயர் முலக்கலை நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருகிறார். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


லஞ்ச புகார்

கன்னியாஸ்திரியின் சகோதரர் கூறுகையில், பேராயர் முல்லக்கல், மற்றும் இரண்டு பேர் எனது நண்பரை அணுகி, பலாத்கார புகாரை திரும்ப பெற்று கொண்டால் ரூ.5 கோடி தருகிறோம் என தெரிவித்தனர் என்றார்.


ஒரு வாரம் அவகாசம்

பலாத்கார வழக்கு நாளை(செப்.,13) கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், பேராயரிடம் விசாரணை நடத்தப்பட்டதா, அதன்பிறகு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது. இதனையடுத்து, இன்று(செப்.,12) போலீசாரின் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. வரும் 19ம் தேதி ஆஜராகும்படி பேராயருக்கு சம்மன் அனுப்புவது என இதில் முடிவு எடுக்கப்பட்டது.


அறிக்கை:

கடந்த மாதம் போலீசார், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், 2014 மே முதல் 2016 செப்., வரை பேராயர் தனது பதவியை பயன்படுத்தி பல முறை கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளனர். கடந்த மாதம் ஜலந்தர் சென்று பேராயரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் தெரிவித்த தேதிக்கும், கன்னியாஸ்திரி தெரிவித்த தேதிக்கும் வித்தியாசம் உள்ளதாக தெரிவித்தனர்.


மறுப்பு

பேராயருக்கு ஆதரவு தெரிவித்த ஜலந்தர் டயோசிஸ், கன்னியாஸ்திரி பழிவாங்கும் நோக்கில் புகார் தெரிவித்துள்ளார். தனது கணவருடன் கன்னியாஸ்திரிக்கு தொடர்பு உள்ளதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். இது குறித்து பேராயர் விசாரணை நடத்தியதால் அவர் புகார் கூறியுள்ளார். கன்னியாஸ்திரி குறிப்பிட்ட தேதியில், பேராயர் குருவிலாங்காடு பகுதியில் தான் தங்கியிருந்தார். முதல்முறை பலாத்காரம் செய்யப்பட்ட பின் ஏன் அவர் புகார் கூறவில்லை. தேவாலயத்திற்கு எதிராக சதி செய்பவர்கள், கன்னியாஸ்திரிகளை தூண்டிவிட்டுள்ளனர். கன்னியாஸ்திரிகள் பின்னணியில் பலர் உள்ளதாக கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
12-செப்-201819:45:30 IST Report Abuse
Nakkal Nadhamuni இந்த கேஸு கடைசியில் புஸ்ஸுன்னுதான் போகும்... Church is very powerful ... கன்னிகாஸ்திரீகள் தாய் மதம் திரும்புவது நல்லது... அவர்களுக்கு அங்கு நியாயம் கிடைக்காது...
Rate this:
Share this comment
Muruga Vel - Chennai,இந்தியா
12-செப்-201820:36:38 IST Report Abuse
 Muruga Velதாய் மதத்திலயும் எல்லாரும் நல்லவரில்லை … ஆஷா ராம் பாபு …. மதர்ஸாவில் சிறுவர்கள் படாத பாடு படறாங்க . ரோம் பாதிரி எந்த பையனையும் விட்டு வைக்கிறதில்லை...
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
13-செப்-201801:36:49 IST Report Abuse
uthappaதாய் மதத்தில் சிறு புத்தியுடன் இருந்தவன் , எந்த மதம் சேர்ந்தாலும் அந்த புத்தியுடன் தான் இருப்பான். மதத்திற்கும் தனி மனிதனின் குணத்திற்கும் கொக்கி போட கூடாது.தவறு வளர்ந்த விதம்....
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-201819:43:24 IST Report Abuse
முக்கண் மைந்தன் Prima facie evidence (முகாந்திரம்) இருந்தா சட்டுபுட்டுனு charge sheet ட்ட file பண்ணி சாரணைய ஆரமிங்கப்பா... எதுக்கு இவ்ளோ இழுத்தடிக்கறீங்க...?
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
12-செப்-201819:39:56 IST Report Abuse
தமிழ் மைந்தன் பாதிரியார்கள் பணி பிற மதத்தினர்களை காசுகொடுத்தல், கவர்தல், கற்பழித்தல், காணாமல் செய்தல், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்த பெருமளவு பணம் இந்த பாவாடைகள் மூலமாக வந்து கொண்டு இருந்தது இப்போது தடை செய்யப்பட்டதால் கூவுறானுக பாருங்க சத்தம் காதை பொளக்குது ஆனாலும் மோடி ஒழிக கோசம் வருதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X