கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பழனிசாமி,முறைகேடு,வழக்கு,போலீஸ்,ஐகோர்ட்,கெடு

சென்னை : தமிழக நெடுஞ்சாலைத் துறை பணிகள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தி.மு.க., அளித்த புகார் மீதான விசாரணை அறிக்கையை, 17ம் தேதி தாக்கல் செய்யும்படி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க., அமைப்புச் செயலரும் ராஜ்யசபா, எம்.பி.,யுமான ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு: முதல்வர் பழனிசாமி வசம் நெடுஞ்சாலை துறை உள்ளது. ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழி சாலை திட்டம், திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழி சாலை திட்ட ஒப்பந்தப் பணிகள், முதல்வர் பழனிசாமியின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.

மதுரை ரிங் ரோடு, வண்டலுார் - வாலாஜாபாத் ஆறு வழி சாலை, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்டங்களில், நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, முதல்வரின் உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு, ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு 4,800 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஒப்பந்தப் பணிகளை, நெடுஞ்சாலைத் துறை மூலம் வழங்கியதில் அதிகார துஷ்பிரயோகத்தை, முதல்வர் பழனிசாமி செய்துள்ளார்.

அதன் மூலம் ஆதாயம் அடைந்துள்ளார். இதுகுறித்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், இது தொடர்பாக, ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு அதன் வரைவு அறிக்கை 'விஜிலன்ஸ்' ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில் 'முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறை வருகிறது.

பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அதனால், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; அந்த விசாரணையை, நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ''நான்கு வழி சாலைக்காக 1 கி.மீ., துாரத்துக்கு, 21.50 கோடி ரூபாய்க்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது; அதிகபட்சம், 10 கோடி ரூபாய் தான் செலவாகும். முதல்வரின் உறவினர் என்பதால், தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன'' என்றார்.

உடனே அட்வகேட் ஜெனரல் '2014ல் தான் அந்த ஒப்பந்ததாரரின் சம்பந்தியாக முதல்வர் ஆனார். இந்த திருமணத்தால், அவருக்கு ஒப்பந்தம் கிடைக்க தகுதியில்லை எனக் கூற முடியாது. சாலை ஒப்பந்தப் பணிகளில் அந்த நிறுவனம், 1991ல் இருந்து ஈடுபடுகிறது. டெண்டர் மதிப்பை அதிகரித்ததாக கூறுவதும் சரியல்ல. ஆரம்பகட்ட விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளோம்' என்றார்.

அதற்கு நீதிபதி, 'புகாரில் குற்றம் புலப்படவில்லை என்கிற முடிவுக்கு அதிகாரிகள் வந்து விட்டனரா' என, கேள்வி எழுப்பினார். உடனே அட்வகேட் ஜெனரல் 'விசாரணையை அறிக்கை விஜிலன்ஸ் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை, ஆணையர் நிராகரிக்கலாம் அல்லது மேற்கொண்டு விசாரணையை தொடரவும் உத்தரவிடலாம்' என்றார்.

இதையடுத்து மனுதாரர் அளித்த புகாரின் மீது தினசரி நடந்த விசாரணை விபரங்கள் அடங்கிய அறிக்கையை லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்யும்படி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார். அறிக்கையை சீலிட்ட உறையில் தாக்கல் செய்யவும் புகார் கொடுத்தவரிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என்பதை விளக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வரும் 17ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
13-செப்-201821:44:07 IST Report Abuse

K.n. Dhasarathanலஞ்ச ஒழிப்பு துறையா எங்கே இருக்கு ? நெடுஞ்சாலை துறை வேலை செய்ததா ? எங்கே ?எப்போது ? கல்லா கட்டுறதற்கே நேரம் இல்லை, புகார் கொடுத்து இரண்டு வருடம் தானே ஆயிருக்கு , பார்க்கலாம்.

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
13-செப்-201815:40:01 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்சபரி அவர்களை இப்பவே கண்ணகட்டுதே என கருணாநிதி நினைத்திருந்தால் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடிக்க முடியுமா? அதில் ஒன்றை மறந்துவிட்டீர்கள் காரியம் என்றால் காலில் விழு, காரியம் முடிந்தால் காலைவாரி விடு என்பது தலைவர் பதவிக்காக எம்.ஜி.ஆர் காலில் விழுந்துகிடந்தது கிடைத்ததும் அவரையே நீக்கியது

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
13-செப்-201814:31:32 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்இதுக்கு தான் கருணாநிதி முஸ்லிம் மற்றும் கிருஸ்தவர்களை நண்பர்களாக்கி ஊழல்கள் செய்துவந்தார். நீங்கள் முதல்வராக இருக்கலாம் ஆனால் கருணாநிதி போல் சிக்காமல் செய்யமுடியாது எடப்பாடி அவர்களே. ஏன்னா அவர் மகன் ஸ்டாலின் கூட இப்படி ஊழல்கள் செய்வது சற்று கடினம்

Rate this:
karutthu - nainital,இந்தியா
13-செப்-201817:34:26 IST Report Abuse

karutthuஸ்டாலின் அவர்கள் ஊழல் செய்து இனிமேல் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை .ஏனென்றால் அவர் ஏற்கனவே வேண்டிய அளவுக்கு சம்பாதித்து விட்டார் .போதாக்குறைக்கு தலைவரின் சொத்துக்களில் இவருடைய பங்கும் வந்திருக்கும் .ஆதலால் அவர் ஊழலில் ஈடுபட வேண்டிய அவசியம் இருக்காது . ...

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X