அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அழகிரிக்கு எதிராக அவரது தங்கை
திருவாரூரில் களமிறக்க திட்டம்

திருவாரூர் இடைத்தேர்தலில், அழகிரி போட்டியிட்டால், அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், அழகிரியின் தங்கையர் செல்வி, கனிமொழி ஆகியோரில் ஒருவரை நிறுத்துவது குறித்து, அறிவாலயத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

அழகிரி,செல்வி,எதிராக,தங்கை,Tiruvarur,திருவாரூர்,களமிறக்க, திட்டம்


மறைந்த கருணாநிதியின், சொந்த தொகுதியான திருவாரூரில், தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தயாராகி வருகிறார். வரும், 15ல், அண்ணா துரை பிறந்த நாளை ஒட்டி, விழுப்புரத்தில், தி.மு.க., முப்பெரும் விழா நடக்கிறது. அதுவரை அமைதியாக இருந்து விட்டு, விழா முடிந்ததும், திருக்குவளையில், தன் சுற்றுப்பயணத்தை துவக்க, அழகிரி திட்டமிட்டுள்ளார்.

திருவாரூர் தொகுதியில், அழகிரி போட்டியிடுவது உறுதி ஆகி விட்டால், அவரை வீழ்த்துவதற்கு, அவரது சகோதரியை,

தி.மு.க., வேட்பாளராக களமிறக்க வேண்டும் என, ஸ்டாலின் தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: கருணாநிதி போட்டியிட்ட, சென்னை - சேப்பாக்கம், திருவாரூர் தொகுதிகளில், தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய அனுபவம், செல்விக்கு உண்டு.

செல்வி போட்டியிட விரும்பவில்லை என்றால், கனிமொழியை நிறுத்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அவரது ராஜ்ய சபா, எம்.பி., பதவி காலம், அடுத்த ஆண்டு முடிகிறது. அடுத்த ஆண்டு, மே மாதத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், துாத்துக்குடி தொகுதியில் போட்டியிட, கனிமொழி திட்டமிட்டுள்ளார்.

தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், நடக்கவுள்ள இடைத்தேர்தலில், கட்சி வெற்றி பெற்றால் தான், அவரது எதிர்கால அரசியல் பயணமும் வெற்றி பெறும். எனவே, வெற்றி வியூகம் அமைத்து, தேர்தலை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம், ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. அழகிரியை வீழ்த்த, எந்த நிலைக்கு இறங்கவும், ஸ்டாலின் தயாராக இருக்கிறார். இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின.

Advertisement

நாலாவது இடம்!

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., இடையிலான, மும்முனை போட்டியில், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளருக்கு, 20 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்தன. அதுவே, 2016 சட்டசபை தேர்தலில், இருமுனைப் போட்டி நிலவியதில், தி.மு.க.,வுக்கு, 40 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்தன. இந்த தேர்தலில், கூடுதலாக கிடைத்த, 20 சதவீதம் ஓட்டுக்கள், எந்தெந்த ஜாதியினர் என்ற புள்ளி விபரத்தை, அழகிரி மகன் தயாநிதியின், 'சர்வே டீம்' ஆராய்ந்து வருகிறது. இந்த தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., தினகரன், அழகிரி என, நான்கு முனைப் போட்டி ஏற்படும்போது, தன் அணி சார்பில், இந்த தொகுதியில், ஜாதி அடிப்படையில் வேட்பாளரை நிறுத்தி, தி.மு.க.,வை நான்காம் இடத்திற்கு தள்ள, அழகிரி வியூகம் அமைத்துள்ளார்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்ஜெயிப்பவர் முதல்வராகலாமோ?

Rate this:
bal - chennai,இந்தியா
14-செப்-201819:41:17 IST Report Abuse

balயார் வந்தால் என்ன....ரெண்டுமே ஒரே குட்டை...தினகரன் MLA ஆகி என்ன கிழித்தார்...எப்படா தேர்தல் வரும்.....

Rate this:
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
14-செப்-201818:30:56 IST Report Abuse

Poongavoor RaghupathyDMK Party has become the battleground for Karunanidhi's family. The family members are washing their dirty linens in public. DMK-Is it a party for the people welfare or for gains to the family. The Tamilnadu people are mesmerised with Tamil and Dravidian culture by the DMK. When DMK Party leaders are not able to unite their own family how do we expect they can unitedly work for the welfare of the people. Oh People of Tamilnadu please be beware of DMK party and exercise your franchise judiciously in next election to be free from the clutches of DMK Party. It may not be long when we hear that Dayalu,Rajathi Ammals and Udayanidhi will stand in election.

Rate this:
மேலும் 65 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X