பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எட்டு வழிச்சாலை செலவு:
ரூ.7,120 கோடியாக குறைப்பு

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்ட செலவு, 7,120 கோடி ரூபாயாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குறைத்துள்ளது.

எட்டு வழிச்சாலை,செலவு,ரூ.7120 கோடி,குறைப்பு


சென்னை - சேலம் இடையே, 'பாரத்மாலா' திட்டத்தின் கீழ், எட்டு வழிச்சாலை அமைக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, 11 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக, இச்சாலை அமைக்கப்பட உள்ளது.

இச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த, எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பான வழக்கும், உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், திட்டத்தில் சிறிய மாற்றத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்துள்ளது. இதனால், திட்ட மதிப்பீட்டு தொகை, 7,120 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சேலம், கல்வராயன் மலைப் பகுதியில், 13.29 கி.மீ., துாரத்துக்கு, 90 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்க, திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது, இது, 9 கி.மீட்டரா கவும்; 70 மீட்டர் அகலமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

வனப் பகுதியில், 111 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளது. எதிர்ப்புக்கு பணிந்து, சாலை திட்டத்தில், பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பிரசாரம்

Advertisement

செய்யப்படுகிறது; இது தவறானது. வனத்துறையின் கோரிக்கையை ஏற்று, வனப் பகுதியில் மட்டுமே, மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இச்சாலை பணியை, ஆறு கட்டங்களாக முடிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தில், சாதகமாக தீர்ப்பை பெற்று, விரைவில் பணிகள் துவங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu - tirunelveli,இந்தியா
15-செப்-201813:13:16 IST Report Abuse

muthuINSTEAD OF MAKING END TO END ROAD ( TO AND FRO FROM SALEM ) AS THERE IS NO VILLAGES IN BETWEEN TO GET BENEFIT FROM THIS ROAD , , CONSIDER EXTENSION OF EXISTING ROAD FOR BETTER ADVANTAGES FROM THE HISTORY OF ROAD

Rate this:
astromaniam - Trichy,இந்தியா
13-செப்-201816:02:24 IST Report Abuse

astromaniamதேர்தல்களில் நல்லவர்களை தேர்ந்தெடுக்கத்தவறி இருபது ரூபாய் டோக்கனுக்கு விலை போகும் தமிழக வாக்காளர்கள் நல்லவர்களின் ஆட்சியில் கிடைக்கும் சௌகரியங்களை பயன்படுத்தாமல் குறை சொல்கிறார்கள்.

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
13-செப்-201815:53:54 IST Report Abuse

 ஈரோடுசிவாசாலை போடப்படும் ... இதில் எதிர்ப்பவனும் பயணம் செய்வான் .... நிலம் தர மறுப்பவனும் பெருத்த லாபமடைவான் ... சாலையோர கிராமங்கள் முன்னேற்றமடையும் .

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X