சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கோடிகளை குவித்த ஆர்.டி.ஓ., அதிகாரி
புரோக்கர் வீட்டில் ஆவண புதையல்

கள்ளக்குறிச்சியில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு, கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்து உள்ளது, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் தெரியவந்துள்ளது. இவருக்கு, புரோக்கராக செயல்பட்ட செந்தில்குமாரின், சேலம் ஆத்துார் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின.

கோடிகளை குவித்த,ஆர்.டி.ஓ., அதிகாரி,புரோக்கர், வீட்டில், ஆவண புதையல்


கடலுார், தவுலத் நகரைச் சேர்ந்தவர், பாபு, 52. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

கள்ளக்குறிச்சியில் கைது :


இவர் தகுதிச்சான்று வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, நேற்று முன்தினம் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால், கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடலுாரில் உள்ள அவரது வீட்டில், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், 33.50 லட்சம் ரூபாய், 15 கிலோ வெள்ளி, 140 சவரன் நகைகள், 45 வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான புத்தகங்கள் கைப்பற்றப் பட்டன.

மேலும், ஆறு வங்கி லாக்கருக்கான சாவி மற்றும் பல கோடி ரூபாய்க்கு வாங்கி குவிக்கப்பட்ட சொத்துகளுக்கான ஆவணங் களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்களில், 60 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

வங்கி லாக்கரில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு சொத்துகளுக்கான ஆவணங்கள் மற்றும் நகைகள் வைக்கப்பட்டு

இருப்பதும் தெரிய வந்துஉள்ளது. இருப்பினும், வங்கி களின் அனுமதியுடன் அவற்றை திறந்து பார்த்த பிறகே, உண்மை மதிப்பு தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.

கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், பாபு வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் உட்பட அனைத்து ஆவணங்களையும், நேற்று முன்தினம் இரவு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, 45 வங்கி கணக்குகளை முடக்கி வைக்க, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதம் அனுப்பும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஆவண புதையல் :


மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவுக்கு, 13 ஆண்டுகளாக புரோக்கராகவும், பினாமியாகவும் இருக்கும், சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த, ஜோதிடர் செந்தில்குமார், 44, என்பவரையும், போலீசார் கைது செய்தனர்.அவரது வீட்டில், நேற்று முன்தினம் மாலை, 4:30 முதல், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை மேற்கொண்டனர். இது, அதிகாலை, 2:30 மணி வரை நடந்தது.

ஜோதிட அறை உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதில், ஸ்ரீருத்ர கங்கா பைனான்ஸ் மற்றும் ஸ்ரீருத்ர கங்கா சிட்ஸ் பிரைவேட் லிமிடெட், தொழுதுார் கிரீன்பார்க் பள்ளியில், பங்குதாரராக உள்ள ஆவணங்கள் மற்றும் அறக்கட்டளை ஆவணங்கள் சிக்கின.

செந்தில்குமாரின் மனைவி கவிதா பெயர்களில், 2 கோடி ரூபாய்க்கு, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. அதற்கு, வரி செலுத்தியபோதும், முதலீடு செய்துள்ள வருவாய்க்கு ஆதாரம் இல்லை. வீட்டிலிருந்து, 15 வங்கி கணக்குகளின் சேமிப்பு கணக்கு புத்தகம், 150 சவரன் நகைகள் உட்பட,33 கோடி ரூபாய் மதிப்புக்கும் அதிகமான சொத்துகளின் ஆவணங்கள் சிக்கி உள்ளன.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: ஆத்துாரில், 2006ல் பாபு பணிபுரிந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த

Advertisement

புகாரில், செந்தில்குமார் வீட்டில், 62.62 லட்சம் ரூபாய்க்கு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பாபு மீது வழக்கு நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சசிகலா குடும்ப ஜோதிடர் :

செந்தில்குமார், கேரளாவின் பிரசன்ன ஜோதிடம் பார்ப்பது வழக்கம். 2008 முதல், சசிகலாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், தினகரன் ஆதரவு, முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பூங்குன்றன், எம்.பி.,க்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலருக்கு, குடும்ப ஜோதிடராக உள்ளார். இவர்கள், செந்தில்குமாரிடம் ஆலோசித்து, முக்கிய கோவில்களில் நடக்கும் பரிகார பூஜையில் பங்கேற்பர்.


வாரிசு வேலையில் வந்தவர் :

கடலுார், செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த, பாபுவின் தந்தை சுப்ரமணியன். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரிந்தார். அவர் இறந்ததால், 1991ல், பாபுவுக்கு, தமிழக அரசு, வாரிசு வேலை வழங்கியது. 1998 முதல், மோட்டார் வாகன ஆய்வாளராக, பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறார். 2006ல், சொத்து குவிப்பு புகாரில் வழக்கு பதிவானதால், பதவி உயர்வின்றி பணிபுரிகிறார். பாபுவின் இரு மகள்கள், மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கின்றனர். தம்பி செந்தில், ஆத்துார், விழுப்புரத்தில், இரு, நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை செய்கிறார். தங்கை ஜெயலலிதா, அவரது கணவர் ராஜேந்திரன், உளுந்துார்பேட்டையில், 'டிரைவிங் ஸ்கூல்' நடத்துகின்றனர். ஆய்வின்போது, ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளதால், குடும்ப உறவினர்களிடம், போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-செப்-201811:52:02 IST Report Abuse

Selvakumar Krishnaஇவனை மட்டுமல்ல, அவன் மனைவி , மகள்கள் அனைவரையும் சிறையில் அடைக்கவேண்டும். லஞ்சம் வாங்கும் பணத்தில் மருத்துவம் படிக்கமாட்டேன் என்று அவன் மகள்கள் சொல்லியிருந்தால் இவன் இவ்வளவு பேராசை பட்டிருக்கமாட்டான். 2006 இல் பிடிபட்ட இவனை 12 வருடம் பணியில் வைத்துள்ள சட்ட முறைகளை முதலில் மாற்றவேண்டும்.

Rate this:
RP Iyer - Bengaluru,இந்தியா
18-செப்-201815:26:19 IST Report Abuse

RP Iyerபுழலில் அடைக்கலாம். அங்குதான் ராஜபோக வாழ்க்கை அனுபவிக்கலாம்...

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
14-செப்-201820:48:27 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)இந்த ஒரு அதிகாரியே இவ்வளவு சம்பாத்தியம் என்றால் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு வருமானம் வரும்? இவர்கள் இவ்வளவு காசு பாத்தா அரசியல் வியாதிகள் எவ்வளவு பார்க்கும் ? கனக்குப் போட்டால் கால்குலேட்டர் error (தவறு) என்று காண்பிக்கும் அவ்வளவு கோடி தேறும் . நாங்க ஒரு 5 மாட வெச்சுகிட்டு தீவனம் போடா முடியாம திண்டாடுகிறோம் . ஊருக்கு உண்ண பால் கொடுக்கும் எங்களால் 3 வேலை உண்ண முடியவில்லை . இந்த நாதாரிகள் கோடிகளில் புரளுகிறார்கள் . அது தான் தெரிந்து விடடாதே சொத்தை பிடுங்கி அவனை போட்டுத் தள்ளினாள் அடுத்தவனுக்கு பயம் வரும் . இல்லாவிடில் இது தொடர்கதை தான் இதற்கு முடிவே வராது . உடனடி மரண தண்டனை அதுவும் சாலையில் வைத்து வழங்க வேண்டும் அப்படி ஒரு நிலை வரும் வரை லஞ்சம் குறையாது .

Rate this:
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
14-செப்-201818:43:04 IST Report Abuse

Poongavoor RaghupathyOnly a way out to stop corruption is to give a strong punishment if the corruption charges are proved. The punishment should be to remove one leg and one hand treat him well and release him so that for his life time he will not forget his crime and repent. Putting inside the jail and feeding him is only a waste of our money. Unless and until the punishments are severe we will not be able to stop this corruption. There should only one Court for these corruption case and no further appeal must be allowed on the verdict otherwise the accused will die naturally before the final verdict comes.

Rate this:
மேலும் 61 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X