11 ஆயிரம் கோடி முதலீடு: மின் வாரிய ஒப்பந்தம் எப்போது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

11 ஆயிரம் கோடி முதலீடு: மின் வாரிய ஒப்பந்தம் எப்போது

Added : செப் 13, 2018

சென்னை: மின் சிக்கன திட்டத்தில், 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு, தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்ய, மத்திய அரசின், 'எனர்ஜி எபிஷியன்சி' நிறுவனம், 14 மாதங்களாக காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசின், 'எனர்ஜி எபிஷியன்சி' நிறுவனம், குறைந்த மின்சாரத்தில் இயங்கும், எல்.இ.டி., பல்பு, டியூப் லைட், மின் விசிறி உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று, பல மாநில அரசுகள், அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.இதன் வாயிலாக, அம்மாநில அரசுகள், அரசு அலுவலகங்களுக்கு தேவையான மின் சாதனங்களை, எனர்ஜி எபிஷயன்சியிடம் இருந்து கொள்முதல்செய்கின்றன.அதற்கான பணத்தையும், உடனே வழங்குவதற்கு பதில், தவணை முறையில் செலுத்துகின்றன.இதையடுத்து, 'தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில், எனர்ஜி எபிஷியன்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு, 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெறப்படும்' என, தமிழக அரசு, 2017 ஜூன் மாதம் அறிவித்தது; 14 மாதங்கள் ஆகியும், இதுவரை, ஒப்பந்தம் செய்யப்படவில்லை.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:எனர்ஜி எபிஷியன்சி, மத்திய அரசு நிறுவனம். அந்நிறுவனம், குறைந்த மின்சாரத்தில் இயங்கும் சாதனங்களை, நாடு முழுவதுமான தேவைக்கு, அதிகளவு கொள்முதல் செய்வதால், மிக குறைந்த விலைக்கு கிடைக்கிறது.பல மாநில அரசுகள், நிதி நெருக்கடியில் இருப்பதால், அந்நிறுவனத்தின் உபகரணங்களை, பணம் இல்லாமல்வாங்குகின்றன; பணத்தை, தவணை முறையில்வழங்குகின்றன.குறைந்த மின்சாரத்தில் இயங்கும் சாதனங்களை பொருத்துவதால், ஏற்கனவே இருந்ததை விட, மின் கட்டணமும் குறையும். இதனால், மின் கட்டணத்தில் மிச்சமாகும் பணத்தை வைத்து, தவணை தொகையை செலுத்தலாம்.தற்போது, தமிழகத்தின, பல துறைகள், தங்களுக்கு தேவையான உபகரணங்களை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 'டெண்டர்' வாயிலாக வாங்குகின்றன.டெண்டர் நிபந்தனைகள், குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஆதரவாக இருப்பதால், ஆதாயம் கிடைக்கிறது.இந்த, ஒரே காரணத்திற்காகவே, எனர்ஜி எபிஷியன்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய, அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.இவ்வாறு அவர்கூறினார்.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X