பொது செய்தி

தமிழ்நாடு

1,800 வகை தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு துறை தகவல்

Added : செப் 13, 2018
Share
Advertisement

சூலுார்:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், சூலுார் ஒன்றிய அலுவலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி பதிவு முகாம் நடந்தது.மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர் ஜோதிமணி பேசியதாவது:மத்திய அரசு துறைகள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக பல்வேறு துறைகளில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. தனியார் துறைகளில் வேலைவாய்ப்பும் கிடைக்க வழி செய்யப்படுகிறது. அழகு கலை, கட்டுமானம், தொலைத்தொடர்பு, வேளாண்மை, வங்கி நிதி சேவை, உணவு பதனிடுதல் உள்ளிட்ட, 1,800 வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.பயிற்சி முடித்ததும், அரசு சான்றிதழ் மற்றும் தனியார் நிறுவனங் களில் வேலையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.கனரா வங்கி சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குனர் அசோகன், அரசினர் தொழிற்பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலர் பிரபு, எம்.ஏ.எஸ்., சோலார் சிஸ்டம்ஸ் நிறுவன திறன் பயிற்சியாளர் சிவக்குமார், மாதிரி தொழில் நெறி வழிகாட்டு மைய அலுவலர் காயத்ரி ஆகியோர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X