புகையிலையை அறவே ஒழிக்க வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகையிலையை அறவே ஒழிக்க வேண்டும்

Added : செப் 13, 2018
Advertisement

சென்னை:''புகையிலையை அறவே ஒழிக்க வேண்டும்,'' என, மருத்துவ கல்லுாரி பேராசிரியர் கூறினார்.
சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், கிருஷ்ணமூர்த்தி நினைவு கருத்தரங்கம் மற்றும் கவுரவிப்பு விழா, நேற்று நடந்தது.மருத்துவமனை தலைவர் சாந்தா, கடந்த ஆண்டு, படிப்பு முடித்து, முதல் மதிப்பெண் பெற்ற, மாணவ - மாணவியருக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
மேலும், மருத்துவமனைக்கு, 30 ஆண்டுகளாக சட்ட ஆலோசகராக இருக்கும், உயர் நீதிமன்ற
வழக்கறிஞர் ராஜாவுக்கு, 'சிறந்த சேவையாளர்' விருது வழங்கி கவுரவித்தார்.கருத்தரங்கில், பெங்களூர், ராமையா மருத்துவ கல்லுாரியின் பேராசிரியர் குருநாத்கிலாரா பேசியதாவது:
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, கிருஷ்ணமூர்த்தி, சாந்தா ஆகியோரின் விடா முயற்சி, அயராத உழைப்பு தான், இந்த மருத்துவமனையை உலக தரத்திற்கு உயர்த்தி உள்ளது.ஓலை குடிசையாக இருந்த மருத்துவமனை, இன்று மாடிகளாக உயர்ந்துள்ளதை பார்க்கும்போது, கிருஷ்ணமூர்த்தியின் தியாக உணர்வை கண்டு பிரமிப்படைகிறேன்.
இந்த மருத்துவமனை, அபார வளர்ச்சி கண்டுள்ளது. தீவிர விழிப்புணர்வால், 60 சதவீதம் பேருக்கு, புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புற்றுநோய் அறுவை சிகிச்சையில், இன்றும் கூடுதலான புதிய நவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன.
வாய், தொண்டை, உணவுக் குழாய், நுரையீரல் புற்றுநோய்கள் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது. புகையிலையை, அறவே ஒழிக்க வேண்டும்.நோயாளிகள், மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொண்டால், ஆயுளை நீட்டிக்க முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், கேன்சர் மருத்துவமனை துணைத்தலைவர் ஹேமந்த்ராஜ், இணை இயக்குனர் செல்வ லட்சுமி மற்றும் மருத்துவ மனை ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X