ம.பி.,யில் தேர்தல் பரீட்சை; 323 அதிகாரிகள், 'பெயில்' Dinamalar
பதிவு செய்த நாள் :
ம.பி.,யில் தேர்தல் பரீட்சை
323 அதிகாரிகள், 'பெயில்'

போபால்: விரைவில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில், தேர்தல் ஆணையம் நடத்திய தேர்வில், 323 அரசு அதிகாரிகள் தேர்ச்சி பெறவில்லை.

ம.பி.,தேர்தல் பரீட்சை,323,அதிகாரிகள்,பெயில்


மத்திய பிரதேச மாநிலத்தின், 230 சட்டசபை தொகுதிகளுக்கு, விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில், இந்த மாநிலத்தில், தேர்தல் பணிகள் தொடர்பான தேர்வை, தேர்தல் ஆணையம் நடத்தியது.

இந்த தேர்வை, சட்டசபை தேர்தல் பணிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு உள்ள, 700 அதிகாரிகள் எழுதினர்.

இதில், 323 அதிகாரிகள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களில் பெரும்பாலானோர், போபால், சிஹோர், குணா, இந்துார் உள்ளிட்ட முக்கிய இடங்களில், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.மேலும், துணை கலெக்டர், சப் - டிவிஷனல் மாஜிஸ்திரேட், தாசில்தார் ஆகிய நிலைகளில் உள்ள அதிகாரிகள் கூட, இந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஒருசில அதிகாரிகளுக்கு, அடிப்படை பற்றி கூட தெரியவில்லை.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இந்த விவகாரம், மிகப்பெரிய பிரச்னை. தேர்தல் ஆணையம் நடத்திய தேர்வில், 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தோல்வி

Advertisement

அடைந்துள்ளனர். இவர்களால், எப்படி நியாயமான தேர்தலை நடத்த முடியும்? இது குறித்து, தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, மத்திய பிரதேச மாநிலத்தில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-செப்-201823:19:59 IST Report Abuse

Pugazh Vஇதில் புளுக என்ன அவசியம்? போபால் BHEL இல் கூடப் படித்த சில நண்பர்கள் இருக்கிறார்கள். சென்னை ஜெகன் தகவலுக்கு.

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
13-செப்-201817:40:32 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்பழனி தேர்தலுக்கு பயப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடைவாங்கியது தி.மு.க தான், காரணம் தோல்வி பயம்.இனி நடத்த அழகிரி பயம் என்ன செய்ய நிற்க நடக்க பேச படுக்க எழ இப்படி எதெற்கெடுத்தாலும் பயம் பயம்

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
13-செப்-201815:48:37 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்வாத்தியார்களில் தி.மு.க ஆதரவு உள்ளவர்கள் கூடும் இடங்களில் சென்று கவனித்து பாருங்கள்.அவர்கள் பேச்சை சம்பளம், வீட்டுவாடகை படி, அகவிலைபடி, வாளாய ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்றவை மட்டுமே இருக்கும். எனவே பள்ளிகளை 50 சதவீதம் தனியாருக்கு கொடுத்துவிட்டு அங்கு படிக்கும் மாணவர்களுக்கு உரிய கல்வி கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X