3 பிள்ளைகளுடன் தாய் தற்கொலை : கணவருடன் தகராறில் விபரீதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 பிள்ளைகளுடன் தாய் தற்கொலை : கணவருடன் தகராறில் விபரீதம்

Added : செப் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement

விழுப்புரம்: கணவருடன் ஏற்பட்ட தகராறால், மூன்று குழந்தைகளுடன் தாய், தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார். கணவர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், கீழக்கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 34; இவரது மனைவி தனலட்சுமி‚ 30; திருமணமாகி, ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 7 வயது, 9 மாத கைக்குழந்தை கமலேஷ் என இரண்டு மகன்கள், 4 வயதில் மகள் உள்ளனர்.இளங்கோவன், விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில், மூடை துாக்கும் வேலை செய்து வருவதால் விழுப்புரம் வழுதரெட்டயில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 10ம் தேதி கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.அன்று இரவு, தன லட்சுமி, மூன்று பிள்ளைகளுடன், கீழக்கொண்டூர் கிராமத்தில் உள்ள தன் மாமியார் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை, 6:00 மணிக்கு மாமனார், டீ வாங்க வெளியில் சென்றார்; மாமியார் வயலுக்கு சென்றார்.அப்போது, தனலட்சுமி, மூன்று பிள்ளைகளையும் வீட்டிற்கு பின்னால் உள்ள கூரை கொட்டகைக்கு அழைத்துச் சென்று, கதவை தாழிட்டு, குழந்தைகள் மற்றும் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.கொட்டகை எரிவதை பார்த்த கிராம மக்கள், தீயை அணைத்தனர். கொட்டகையின் கதவை உடைத்து பார்த்த போது, உள்ளே நான்கு பேரும், தீயில் கருகி இறந்து கிடந்தனர்.இளங்கோவன் மீது சந்தேகம் இருப்பதாக, தனலட்சுமியின் அண்ணன் மதியழகன், அரகண்டநல்லுார் போலீசில் புகார் அளித்தார்.வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manivannan - chennai,இந்தியா
13-செப்-201807:05:54 IST Report Abuse
manivannan siriya vayathu thane athenna avvalavu porumai illamal? kuzhanthaikalai kolla yar adhikaram koduththathu ?posukkunu thee vachukarathu?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X