மதுரை, மதுரையில் தனிமனைகளை வரன்முறைப்படுத்துவதற்காக மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் அதிக பயனாளிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சுழற்சி அடிப்படையில் வரன்முறைப்படுத்தப்படும் முகாம்கள் இணைந்து நடத்தப்படுகிறது. மண்டலம் 2 அலுவலகத்தில் நடந்த முகாமில் 115 மனுக்கள பெறப்பட்டன. இதில் 80 மனுக்களுக்கு வரன்முறைப்படுத்துவதற்கு பணம் செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், '' தனிமனைகளை வரன்முறைப்படுத்துதில் ஏற்பட்டுள்ள காலதாமதங்கள் இந்த முகாம்களினால் விரைவாக முடிவிற்கு வருகிறது. இதனால் கட்டுமான பணிகளில் உள்ள தேக்கநிலையும் மாறியுள்ளது, தொடர்ந்து அனைத்து மண்டங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும்,'' என்றனர்.கமிஷனர் அனீஷ்சேகர், உதவி கமிஷனர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் ரங்கநாதன், உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர் செயலர் வேல்முருகன் பங்கேற்றனர்.