Rahul demands Jaitley's resignation over Mallya's claim | மல்லையாவை சந்தித்த ஜெட்லி பதவி விலக வேண்டும்: ராகுல் | Dinamalar

மல்லையாவை சந்தித்த ஜெட்லி பதவி விலக வேண்டும்: ராகுல்

Updated : செப் 13, 2018 | Added : செப் 13, 2018 | கருத்துகள் (115)
Advertisement
காங்கிரஸ், பா.ஜ., ராகுல், ஜெட்லி, மல்லையா

புதுடில்லி: மல்லையாவை ஜெட்லி சந்தித்த குற்றத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ஜெட்லி பதவிவிலக வேண்டும் என காங்.தலைவர் ராகுல் கூறினார்.


சந்தித்தேன்

இந்திய வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியான மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது, செய்தியாளர்களிடம் கூறியது, ஜெனிவாவில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வேண்டியது இருந்தது, இந்தியாவை விட்டு புறப்படும் முன்னதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினேன். வங்கி கடன்களை திருப்பி செலுத்துகிறேன் என தெரிவித்தேன் என்று கூறி இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.


மறுப்பு

ஆனால், இதனை மறுத்துள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி, விஜய் மல்லையா கூறிய கருத்து முழு பொய்; சிறிதளவும் உண்மை இல்லை. 2014ல் இருந்து, என்னை சந்திப்பதற்கு மல்லையாவுக்கு நான் நேரம் ஒதுக்கியது கிடையாது. அதே நேரத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த அவர் ஒருமுறை சபையில் இருந்து நான் என்னுடைய அலுவலகத்துக்கு செல்லும்போது தன் பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ராஜ்யசபா வராண்டாவில் என்னிடம் பேச முயன்றார். 'சமரசம் செய்து கொள்கிறேன்'என, அவர் கூறினார். இவ்வாறு அவர் பல பொய் வாக்குறுதிகளை ஏற்கனவே அளித்துள்ளது எனக்கு தெரியும். அதனால் இது தொடர்பாக, என்னிடம் பேசிப் பயனில்லை. கடன் வழங்கிய வங்கிகளுடன் சமரசம் செய்யும்படி கூறியதாக தெரிவித்திருந்தார்.


கோரிக்கை

இது குறித்து காங். தலைவர் ராகுல் டுவுிட்டரில் கூறியது, ஜெட்லி, மல்லையாவை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி உரிய விசாரணைக்கு .உத்தரவிட வேண்டும். அதுவரை ஜெட்லி தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இ்வ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-செப்-201814:22:43 IST Report Abuse
Nallavan Nallavan சீனத் தூதரைச் சந்தித்த தேச விரோதியை என்ன செய்வது ? ராஜீவ் கொலையாளிகளாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையிலேயே பிரியங்கா சந்தித்ததன் காரணம் என்ன ?
Rate this:
Share this comment
பாசிச பி.செ.பிதன் - தூத்துக்குடி ,இந்தியா
13-செப்-201817:10:54 IST Report Abuse
பாசிச பி.செ.பிதன் தூதரை சந்தித்தது கொடுங்குற்றம்.திருடனை சந்திப்பது கவுரவமா?...
Rate this:
Share this comment
Cancel
13-செப்-201813:50:20 IST Report Abuse
வந்தேமாதரம் மல்லையா, நிராவ் மோடிய நம்பும் ராகுலே உங்கள் சாயம் வெளுக்குதா! எதுக்கு தார்மீகப் பொறுப்பு? கடன் கொடுத்தவர்கள நாடு கடத்தணும்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13-செப்-201813:45:10 IST Report Abuse
A.George Alphonse This cheat and looter Vijaya Mallaya is not a Arichandran or Honest or sincere man to believe his statement .He is a filtered lier and dishonest man who cheated and looted our Nation's banks and escaped to foreign country and enjoying his life in shameless way and giving such useless,meaningless and non-sense statements now and then.By taking this cheat's statements as granted the president of congress party is now demanding the resignation of the FM is not any sense or meaning. The whole nation knows about the congress party is corrupted and full of scams and not any morale right to ask the FM to resign at present.The cheat and looter Vijaya Mallaya was silent on this matter all these days and what made him to mentioned Mr.Jatly's name now.This cheat is only playing hide and seek game with our nation by mentioning the FM name in order to prolong the proceedings of this case and also to escape his arrest by the British government and handing him over to our country at the earliest.But the God is watching all his dramas,gimmicks and magic and very soon he will get award from Him without any doubt.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X