ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பிரமாண்டம்!
ரூ.1 லட்சம் கோடியில் வேலைவாய்ப்பு மண்டலங்கள்
ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு

புதுடில்லி : நாடு முழுவதும், ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 14 இடங்களில், தேசிய வேலைவாய்ப்பு மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன. 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் இந்த, 'மெகா' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

ரூ.1 லட்சம் கோடி,வேலைவாய்ப்பு,மண்டலங்கள்,
ஒரு கோடி,வேலை,பிரமாண்டம்


மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு அமைந்தபோது, 'அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், 'போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை' என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

லோக்சபாவுக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும், பிரமாண்ட திட்டத்தை, மத்திய அரசு தயாரித்து வருகிறது. அதன்படி, மூன்று ஆண்டுகளில், நாடு முழுவதும், ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 14 இடங்களில், தேசிய வேலைவாய்ப்பு மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன. கடலோர மாநிலங்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து, மத்திய அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது: அதிக அளவில்

வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், வேலைவாய்ப்பு மண்டலங்களை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசுக்கு ஆலோசனை அளிக்கும், 'நிடி ஆயோக்' அமைப்பின் ஆலோசனையின்படி, மத்திய கப்பல் போக்குவரத்து துறையின் மூலம், விரிவான திட்டம் தயாராகி வருகிறது.

இந்த திட்டத்தின்படி, நாட்டின், 14 இடங்களில், இந்த மண்டலங்கள் அமைக்கப்படும். தலா, 2,000 ஏக்கர் நிலத்தில், கடலோர மாநிலங்களில் இந்த மண்டலங்கள் அமையும். அடுத்த மூன்று ஆண்டுகளில், ஒரு கோடி பேருக்கு, இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வேலைவாய்ப்பு மண்டலத்திலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் தொழிற்சாலைகளை இங்கு அமைக்கலாம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து, இந்த திட்டத்தை செயல்படுத்தும். மாநில அரசுகள், இந்த திட்டத்துக்காக, குறைந்தபட்சம், 2,000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தர வேண்டும்.

இந்த மண்டலத்தில், 35 வகையான தொழில்கள் இயங்க முடியும். உணவு, சிமென்ட், பர்னிச்சர், மின்னணு பொருட்கள் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், இங்கு தங்கள் ஆலைகளை அமைக்கலாம். ஜவுளி, தோல் பொருட்கள், ஆபரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோரும், இங்கு செயல்படலாம்.

தற்போது விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதி வடிவம் பெற்றதும், முறையான ஒப்புதல்கள் பெறப்பட்டு, அமைச்சரவைக்

Advertisement

கூட்டத்தில் விவாதிக்கப்படும். அடுத்த ஆண்டு துவக்கத்தில், இந்த திட்டம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :


* ரூ.1 லட்சம் கோடி மதிப்பில், வேலைவாய்ப்பு மண்டலங்கள் அமைய உள்ளன
* கடலோர மாநிலங்களில், 14 மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன
* அடுத்த மூன்று ஆண்டுகளில், நாடு முழுவதும், ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
* இந்த திட்டத்தின் கீழ் நிறுவனங்களை, ஆலைகளை அமைப்போருக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும்
* வரி, விடுமுறை காலம், மூலதன மானியம், ஒற்றைச் சாளர முறை ஒப்புதல் போன்ற சலுகைகள் கிடைக்கும்
* வேலைவாய்ப்புகளை அதிகளவில் அளிப்பதற்கு ஏற்ப, அதிக சலுகைகள் அளிக்கப்படும்.


Advertisement

வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
14-செப்-201822:11:05 IST Report Abuse

அம்பி ஐயர்யாராவது ஒருத்தருக்கு “ஒரு கோடி..”ன்னு பேர் வச்சுட்டு அவருக்கு வேலை கொடுத்துட்டாப் போச்சு....

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-செப்-201821:45:24 IST Report Abuse

Pugazh V//ஒவ்வொரு வேலைவாய்ப்பு மண்டலத்திலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் தொழிற்சாலைகளை இங்கு அமைக்கலாம்// இப்போது இருக்கும் "ஸ்பெஷல் எகானமி ஸோன்கள்" மேலே சொன்னதற்காகத்தான் உருவாக்கப்பட்டவை. காங்கிரஸ் ஆட்சி யில் அமலாக்கத்திற்கு வந்தவை. இந்த SEZ Special Economy Zone களின் பேரை "வேலைவாய்ப்பு மண்டலம் என்று பேரை மாற்றி ஊரை ஏமாற்றுகிறார்கள் பீஜேபீ யின் தலை முதல் தொண்டர்கள் வரை. மக்கள் அவ்வளவு விவரம் இல்லாதவர்களா?????

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-செப்-201820:26:34 IST Report Abuse

Pugazh Vஅண்டப்புளுகுகளின் உச்சம் வெ. சென்னை எழுதிய இதுதான். இப்போது வேலைவாய்ப்பு இணையதளங்கள் ஏராளம். வேலைவாய்ப்பு மையங்கள் என்பதெல்லாம் பக்கா ஏமாற்று வேலை. நடக்கவே வாய்ப்பே இல்லாதவற்றை பேசுவதே இவருக்கு வழக்கமா போச்சு.. யோசிக்காமல் ஜால்ரா அடிக்க பெரிய கும்பல் இருப்பது வேற இவருக்கு வசதி.

Rate this:
Manian - Chennai,இந்தியா
14-செப்-201822:20:43 IST Report Abuse

Manianஉன் போன்றவர்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள். அரசியல் வியாதிகள், அரசாங்க வியாதிகள் தொழில் ஆரம்பிக்கும் முன்பே 35 - 40 % கஃட்டிங் கேக்கிறார்கள். உங்க்ளுக்கு லாபம் எப்படியுகம் வரும். அப்போது நாங்க இருப்போமா இல்லையானு தெறியாது. அதனால் இதை அட்வான்ச்சாக தாருங்கள். உங்கள் வாக்கில் மூலம் தந்தாள் போதும் என்கிறார்கள். இதை நான் நேரில் கேட்ட்டேன். அனால், இதை லஞ்ச போலீசிடம் சொன்னால் நான் கொள்ள பாடுவேன் என்பதும் தெறியும். ஆகவே, சுமா கூவாதே . கிராமங்களை சென்று மக்கள் ஓடடை விற்பதை தடுக்க ஏதாவது நல்ல காரியம் செய். நீ அந்தப் புழுகனாக இருப்பதால், எல்லோரையும் உன்னை போல நினைக்காதே தம்பி. அதோட, னையும் இட-ஜாதி- மத ஒதுக்கீட்டில் படிச்ச புயலாக இருந்ததால்தான் இப்படி நினைப்பதை....

Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X