பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலா,  பன்னீர்செல்வம், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், ஜெயலலிதா மரணம் , ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை, ஆறுமுகசாமி விசாரணை, விசாரணை கமிஷன் , நீதிபதி ஆறுமுகசாமி, சசிகலா பெங்களூரு சிறை, லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே, சிங்கப்பூர் பிசியோதெரபி சிகிச்சை , அப்பல்லோ மருத்துவமனை , பிரதாப் ரெட்டி ,சசிகலாவிடம் நேரடி விசாரணை,விஜயபாஸ்கர், ஜெயலலிதா மரண சர்ச்சை, ஓ பன்னீர்செல்வம், 
Sasikala, Panneerselvam, Judge Arumugasamy Commission, Jayalalithaa death, Arumugasami commission inquiry, Arumugasamy inquiry,o Panneerselvam, 
investigation commission, Judge Arumugasamy, Sasikala Bengaluru jail, London Dr. Richard Pele, Singapore physiotherapy treatment, Apollo Hospital, Pratap Reddy, direct inquiry to Sasikala, Vijayapaskar, Jayalalithaa death dispute,

சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓராண்டாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன்,விசாரணையின் இறுதி கட்டமாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் நேரடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கும் 'சம்மன்' அனுப்பி விசாரணைக்கு அழைக்க தீர்மானித்துள்ளது. இதனால் ஜெ. மரண சர்ச்சைக்கு விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெ. மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப். 24ல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 'மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால் விசாரணை கமிஷனுக்கு அலுவலகம் ஒதுக்கவே ஒரு மாதத்திற்கு மேலானது. அதன்பின் பொது மக்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை துவக்கப்பட்டது.

மூன்று மாதங்களுக்குள் பணி நிறைவு பெறாததால் கமிஷனின் பதவி காலம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது விசாரணை கமிஷனின் பதவி காலம் அக்.,24ல் நிறைவடைகிறது. இம்மாதம் 24ம் தேதி கமிஷன் துவங்கி ஓராண்டு நிறைவடைகிறது.விசாரணை கமிஷனில் இதுவரை ஜெ. உறவினர்கள், உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தகவல்களை கூறியுள்ளனர். 'மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைத்த உணவு வழங்கப்பட்டது' என ஒரு தரப்பும்,'வழங்கப்படவில்லை' என்று மற்றொரு தரப்பும் மாறுபட்ட தகவல்களை தெரிவித்தன.

ஜெ.,க்கு அளித்த மருத்துவ சிகிச்சைகளுக்கும் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளுக்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.'ஜெ.,உடல் நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த கவர்னரை பார்த்து ஜெ., கட்டை விரலை காட்டினார்' என சில டாக்டர்கள் சாட்சியம் அளித்தனர். 'அப்படி எதுவும் நடக்கவில்லை' என்று அதே மருத்துவமனை டாக்டர்கள் சிலர் மறுத்தனர். இந்தச் சூழ்நிலையில் இவ்வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் சசிகலா,சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ளார்.

அவர் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் அவரிடம் நேரில் விசாரிக்க வேண்டி இருப்பதால் 'சம்மன்' அனுப்ப ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அவரை அழைத்து வருவதில் சட்டச் சிக்கல் இருப்பதால் சிறைக்கே சென்று அவரிடம் விசாரணை நடத்த கமிஷன் முடிவு செய்து உள்ளது.அதேபோல ஜெ.,க்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே,சிங்கப்பூர் பிசியோதெரபி சிகிச்சை மருத்துவர்களையும் நேரில் அழைப்பதற்கு பதிலாக 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே அவர்களிடம் விசாரிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

துணை முதல்வர் பன்னீர்செல்வம், மின் துறை அமைச்சர் தங்கமணி,உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி,சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை,சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்,அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி ஆகியோரை நேரில் அழைத்து விசாரிக்கவும் கமிஷன் முடிவு செய்துள்ளது.

இவர்களிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின் ஜெ.,மரண சர்ச்சை தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் என கமிஷன் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

அக்.24க்குள் முடிவு!

விசாரணை கமிஷன் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன் விசாரணையை முடித்து அறிக்கை அளிக்க நீதிபதி ஆறுமுகசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை நடந்த விசாரணை குறித்த தகவல்களை தொகுக்கும் பணி துவங்கியுள்ளது.Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
14-செப்-201822:09:40 IST Report Abuse

அம்பி ஐயர்“என்ன தடாலடி.....???” தடாலடியா விசாரிச்சா ஜெ. திரும்ப வந்துடுவாங்களா..... இல்ல அதுக்குப் பின்னால உள்ள மர்மம் தான் வெளில வரப் போவுதா....??? வேஸ்ட் ஆஃப் டைம் & மணி.....

Rate this:
14-செப்-201820:58:18 IST Report Abuse

ஆப்புஎன்னாது? மெகா சீரியல் இல்லையா?

Rate this:
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
14-செப்-201818:52:23 IST Report Abuse

Poongavoor RaghupathySasikala in spite of her huge wealth is neither living nor dying. Look at the enormous accusations against her from many. This is the real punishment for her inside the prison. What can be her mental status with so many enquiries and cases. We are yet to see a lady with so many cases in Courts. When the verdict for all cases are going to come. Do our Judiciary have any time frame to finalise these cases.

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X