சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள்;
உல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை

சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 'போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள், ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, பஞ்சு மெத்தையில் உறக்கம், 'பலான' படம் பார்க்க, 'டிவி' என, ராஜ வாழ்க்கை நடத்துவது அம்பலமாகி உள்ளது.

ராஜ வாழ்க்கை,பயங்கரவாதிகள்,உல்லாச விடுதி,புழல் சிறை


சென்னை, புழல் மத்திய சிறை, 221 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள தண்டனை கைதிகள் சிறையில், உயர் பாதுகாப்பு, 'செல்' என்ற, 'பிளாக்' உள்ளது. இதில், சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள்,

பா.ஜ., மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களை கொன்ற வழக்கில் கைதான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சிறையில் ராஜ வாழ்க்கை நடத்துவது தெரிய வந்துள்ளது.

இலவம்பஞ்சு மெத்தையில் துாக்கம், பாட்டு கேட்டு ஆட்டம் போட, ஹோம் தியேட்டர், 'செக்ஸ்' படம் பார்க்க, 'டிவி' மற்றும் 'செல்பி' எடுக்க, விதவிதமான, ஸ்மார்ட் போன்கள் என, சொகுசு வாழ்க்கையின் உச்சத்தில் குதுாகலிக்கின்றனர்.

அத்துடன், வெயிலுக்கு இதமாக, கூலிங் கிளாஸ் கண்ணாடிகள், பூப்பந்து விளையாட, உயர் தர ஷூக்கள், சூடாக பால் குடிக்க, 'பிளாஸ்க்' மற்றும் தினமும், கறி, மீன், முட்டை என, ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, வெளிநாட்டு மது வகைகள், சிகரெட் என, சகல விதமான வசதிகளோடு கும்மாளம் போடுகின்றனர்.

Advertisement

வெளியில் இருப்பவர்களால் கூட இப்படி வாழ முடியாது. குடும்பத்தாருடன், 'வீடியோ' காலில் பேச்சு; கூட்டாளிகளுக்கு சதி திட்டம் தீட்டி கொடுக்க, ரகசிய மொபைல் போன், வெளிநாட்டு வாசனை திரவியங்களையும் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.

பயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள், ஸ்மார்ட் போனில் எடுத்த செல்பி மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதனால், சிறையில், காவலர் துவங்கி, உயர் அதிகாரிகள் வரை, லஞ்சம் கொடுத்து, புழல் சிறையை உல்லாச விடுதி போல, பயங்கரவாதிகள் மாற்றி இருப்பது அம்பலமாகி உள்ளது.

கூடுதல் டி.ஜி.பி., விசாரணை :

சிறைத்துறை இயக்குனரும், கூடுதல், டி.ஜி.பி.,யுமான, அசுதோஷ் சுக்லா நேற்று, புழல் சிறையில், 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது, பயங்கரவாதிகள், இந்த அளவுக்கு ஆட்டம் போட துணையாக இருந்த காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அறிக்கை தருமாறு, சிறை விஜிலன்ஸ் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில், விஜிலன்ஸ் போலீசார் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவர்களின் நடவடிக்கையும் ரகசியமாக கண்காணிக்கப்படுகிறது.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
20-செப்-201814:03:59 IST Report Abuse

Bhagat Singh Dasanநீதிமன்றம் அறநிலையத்துறை சிலை கடத்தல் வழக்கில், அர்ச்சகர்கள் ஏன் இதை பற்றி முறையாக புகார் தரவில்லை என்று கேள்வி எழுப்புகிறது. அதே போல சிறை காவலர்கள், அதிகாரிகள் ஏன் இதை பற்றி மேலதிகாரிக்கு புகார் அனுப்ப வில்லை என்று கேட்குமா? நடவடிக்கை எடுக்குமா? இளிச்சவாயனுக்கு தான் சட்டமும், தண்டனையும்.

Rate this:
Ranganathan Venkata Subramanian - COIMBATORE,இந்தியா
17-செப்-201819:43:09 IST Report Abuse

Ranganathan Venkata Subramanianஇதுக்கெல்லாம் ஸ்டாலின் வைகோ திருமாவளவன் வேல்முருகன், காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போற்றோர் கருத்து தெரிவிக்கவில்லையே ஏன் பயம் காரணமா?

Rate this:
prem - Madurai ,இந்தியா
17-செப்-201817:13:47 IST Report Abuse

premகாசுக்காக தமிழன் என்ன வேணா செய்வான்.... இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ...? 50 ஆண்டுகால திராவிட ஆட்சியின் கொடுமை இது..... பராசக்தி...என் செய்ய நினைத்திருக்கிறாய் என் தமிழ் சாதியை...? இப்பிறவி இழி பிறவி ... என்றொழிப்பீர் இந்திரரே ...?

Rate this:
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X