மல்லையா விவகாரம்: பா.ஜ., - காங்., நீயா? நானா? | Dinamalar

மல்லையா விவகாரம்: பா.ஜ., - காங்., நீயா? நானா?

Added : செப் 14, 2018 | கருத்துகள் (24)
Advertisement
விஜய் மல்லையா, நீரவ் மோடி, அருண் ஜெட்லி, ராகுல் காந்தி, விஜய் மல்லையா விவகாரம், வங்கி மோசடி,  காங்கிரஸ் தலைவர் ராகுல் , ஜெட்லி - மல்லையா சந்திப்பு , பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி , ஷிஜத் பூனாவாலா, காங்கிரஸ் , மல்லையா விவகாரம்,  ராகுல்,பாஜக, காங்கிரஸ் , 
Vijay Mallya, Neerav Modi, Arun Jaitley, Rahul Gandhi, Vijay Mallya affair, bank fraud, Congress leader Rahul,
Jaitley - Mallya meet, Punjab National Bank fraud, Shijet Poonawala, Congress, Mallya affair, Rahul, BJP, Congress,

புதுடில்லி : விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக காங்.,, பா.ஜ., மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. விஜய் மல்லையாவை அருண் ஜெட்லி சந்தித்தார் என காங்., குற்ற்சாட்டி வரும் நிலையில், வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடியை ராகுல் சந்தித்ததால் பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.
வங்கிகளில் பெற்ற ரூ.9000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்ததற்காக அவர் பதவி விலக வேண்டும் என காங்., தலைவர் ராகுல் வலியுறுத்தி வருகிறார். ராகுல் கூறுவது உண்மை தான் எனவும், ஜெட்லி - மல்லையாவை சந்தித்ததை தான் பார்லி.,வளாகத்தில் சந்தித்ததாகவும் காங்.,கின் புனியாவும் கூறி இருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பா.ஜ.,வின் ஷிஜத் பூனாவாலா, ஜெட்லி - மல்லையா சந்திப்பிற்கு புனியா சாட்சி என்றால், நானும் திருக்குரான் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி செய்த நீரவ் மோடியை 2013 ல் ராகுல் சந்தித்தார். எனது ஞாபகம் சரியானது என்றால் 2013 செப்.,11 ல் டில்லியில் ஓட்டல் ஒன்றில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இந்த சந்திப்பு நடந்தது. அதே காலத்தில் தான் சோக்சி, நீரவ் மோடி ஆகியோருக்கு விதிகளை மீறி கடன் வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார குற்றங்களுக்கான சட்டத்தை மோடி அரசு தீவிரப்படுத்தியதால் நேர்மையானர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக விஜய் மல்லையா விவகாரத்தை ராகுல் கிளப்பி உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
14-செப்-201820:09:49 IST Report Abuse
Gnanam நீயா நானா என்று நாடகமாடுவதை விட்டுவிட்டு, வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காமல் சுகபோகம் அனுபவிக்கும் அனைவரிடமிருந்தும் பணத்தை திரும்பப்பெற இருகட்சிகளும் திட்டம் தீட்டுங்கள் ஐயா. மக்களின் பணம் மக்களின் நன்மைக்காக பயன்பெறவேண்டும். கடன்கொடுக்குமுன்பு, வங்கிகள் அநேக இடங்களில் கையொப்பம் வாங்குகிறார்களே - தகுந்த ஆதாரமின்றி கடன் கொடுத்த அதிகாரிகளுக்கும் தண்டனை கொடுக்கவேண்டும். ஆனால் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றும் நயவஞ்சகர்களை விட்டுவைக்கக்கூடாது. வாராக்கடன் என்று பெயர்சூட்டி மக்களை ஏமாற்றக்கூடாது.. மக்களின் பணம் மக்களுக்கே உரியது.
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
14-செப்-201816:17:05 IST Report Abuse
vbs manian மல்லையா நன்றாகவே கொளுத்தி போட்டுள்ளார். மக்கள் பணம் 9000 கோடி விழுங்கி ஏப்பம் விட்டு விட்டு லண்டனில் இருந்து நம்மை பார்த்து சிரிக்கிறார். மனசாட்சியே இல்லாத ஜென்மம். அந்த மல்லையா சாமிதான் கேட்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
karupanasamy - chennai,இந்தியா
14-செப்-201816:08:55 IST Report Abuse
karupanasamy மல்லையாவை ராஜ்யசபா உறுப்பினராக்கியது தேவேகவுடாவும் காண்கிறாசும்தான்
Rate this:
Share this comment
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
15-செப்-201806:39:42 IST Report Abuse
K.   Shanmugasundararajமல்லையா அவர்களை 2010 ல் ராஜ்யசபா எம் பி ஆக்கியது ஜனதாதள் எஸ் ம் , மோடி , ஆர் எஸ் எஸ் ன் கட்சியான பி ஜெ பி யும் சேர்ந்து தான். காங்கிரஸ் அந்த தேர்தலில் ஒரு எம் பி வெற்றி உறுதி என்ற நிலையில் , தனது மீதம் உள்ள வாக்குகள் 29 க்காக 2 வது வேட்பாளராக டி வி மூர்த்தியை நீறுத்தியது.. 2 வது முறையாக மல்லையாவை ராஜ்ய சபா எம் பி ஆக்கியது பாசிச பி ஜெ பி தான். மல்லையா வங்கியில் வாங்கிய கடனை காட்டாது வெளிநாட்டுக்கு செல்ல உதவியதும் பாசிச பி ஜெ பி தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X