பொய் வழக்கில் கைதான இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு| Dinamalar

பொய் வழக்கில் கைதான இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

Updated : செப் 14, 2018 | Added : செப் 14, 2018 | கருத்துகள் (41)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நம்பி நாராயணன், சுப்ரீம் கோர்ட், செயற்கைகாள் தொழில்நுட்பம் ,இஸ்ரோ விஞ்ஞானி, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி, விஞ்ஞான ரகசியங்கள், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், விஞ்ஞானி நம்பி நாராயணன்,  ராக்கெட் தொழில்நுட்பம்,  
Nambi Narayanan, Sub-court, artificial technology, ISRO scientist, former scientist of ISRO, scientific secrets, former scientist Nambi Narayanan, scientist Nambi Narayanan, rocket technology,

புதுடில்லி: விஞ்ஞான ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக கைது செய்யப்பட்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


விடுதலை

இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் , வெளிநாட்டிற்கு உளவு பார்த்ததாக 1994 ல் குற்றம்சாட்டப்பட்டது. ராக்கெட், செயற்கைகாள் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை உளவுபார்த்து, மாலத்தீவை சேர்ந்த 2 பேருக்கு வழங்கியதாக அவர், கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த போது, கடும் சித்ரவதைகளுக்கு ஆளானதாக புகார் கூறியிருந்தார். கேரள போலீசாரிடம் இருந்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டு பொய் என கண்டறியப்பட்டு, 1996 ல் வழக்கு முடிவுக்குவந்தது. சுப்ரீம் கோர்ட் அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தது.


மேல்முறையீடு

இந்நிலையில் தன் மீது பொய் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து தன்னை சிக்கிவைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம்பி நாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கோர்ட், நம்பி நாராயணனுக்கு 50 லடச ரூபாய் இப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதுடன், சம்பந்தபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
14-செப்-201820:34:49 IST Report Abuse
ஆ.தவமணி,   '' தங்களது செயல்பாடுகளை கண்காணிக்கவும், தவறுகள் இருந்தால் தண்டனை வழங்கவும் அதிகாரம் உள்ள நீதித்துறை - நீதிமன்றம் என்ற அமைப்பு ஒன்று உள்ளது '' என்று தெரிந்தே குற்றங்கள் செய்து, அப்பாவிகளை பொய் வழக்கில் சிக்கவைக்கும் அரசியல்வாதிகள் மிக்க நாடு நம்நாடு.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
14-செப்-201819:50:09 IST Report Abuse
அம்பி ஐயர் நம்பி நாராயணன் என்பதற்குப் பதிலாக அப்துல்லாவோ..... கிறிஸ்டோபர் என்றோ பெயர் வைத்திருந்தால் கைதே செய்திருக்கமாட்டார்கள்.... ரகசியங்களை விற்றிருந்தாலும் கூட.....
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
14-செப்-201819:41:11 IST Report Abuse
Narayan அமெரிக்க கைக்கூலி காங்கிரஸ் செய்த வேலை இது. ஒரு தனி மனிதன் இவர் மட்டும் பாதிக்கப்படவில்லை, நமது ஜீ எஸ் எல் வீ திட்டமே பத்து வருடம் வரை இதனால் தள்ளி போனது. வெளிநாட்டு கட்சி காங்கிரஸ் இந்தியாவுக்கு எதிராக இது போல் செய்யாமல் இருந்து இருந்தால் நிச்சயம் இந்நேரம் நிலவுக்கு இந்தியனை அனுப்பியே இருப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X