ஜிடிபியை 10 சதவீதமாக உயர்த்த இலக்கு: பிரதமர் மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜிடிபியை 10 சதவீதமாக உயர்த்த இலக்கு: பிரதமர் மோடி

Added : செப் 14, 2018 | கருத்துகள் (61)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
PM Modi, India GDP,Unity in diversity ,Madhya Pradesh,பிரதமர் மோடி, இந்திய ஜிடிபி,  மத்திய பிரதேசம், சயீப் மசூதி, தாவூதி போஹ்ரா, வேற்றுமையில் ஒற்றுமை, குஜராத், மஹாத்மா காந்தி, ஆயுஸ்மான் பாரத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், ம.பி., இந்தூர்,தூய்மை இந்தியா, ஆயுஸ்மான் பாரத், ஜிடிபி, இந்தியா, 
Prime Minister Modi, Indian GDP,  Saif Mosque, Dawoodi Bohra,
 Gujarat, Mahatma Gandhi, Ayesham Bharat Scheme, Purity India Project, MP, Indore, Purity India, Ayesamman Bharat, GDP, India,

புதுடில்லி: கடந்த காலாண்டில், நாட்டின் ஜிடிபி 8 சதவீதமாக உள்ளதாகவும், அதனை 10 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


பிரதிபலிப்பு

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சயீப் மசூதியில், தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது: தொழில்நுட்பம் நம்மை ஒற்றுமைபடுத்தும் சக்தியாக திகழ்கிறது. அமைதியை எட்ட அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இங்கு உரையாற்றுவது பெருமை அளிக்கிறது. இந்தியா தனது வரலாறை நினைத்து பெருமை கொள்கிறது. நமது வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பானது உலகம் முழுதும் பிரதிபலிக்கிறது.


பழமையான உறவு

உங்களின் ஆசிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறன். குஜராத் முதல்வராக நான் இருந்த போது, போஹ்ரா சமுதாயத்தினர் எனக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களுடனான எனது உறவு பழமைவாய்ந்தது. இந்த அன்பு தான் என்னை மீண்டும் இங்கு அழைத்து வந்துள்ளது.
இந்த சமுதாயத்தினர் எனது குடும்பத்தினர் போல் உள்ளனர்.இப்பகுதி மக்கள் மஹாத்மா காந்தியுடன் இணைந்து போராடினர். நாட்டின் அமைதியில் போஹ்ரா சமுதாயத்தினர் முக்கிய பங்களிக்கின்றனர். இளைஞர்களின் முன் மாதிரியாக உள்ளனர். வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். அமைதிக்காக நிறைய பணிகளை செய்துள்ளனர். ஏழைகளுக்கு முன்னேற்றம் காண உதவியுள்ளனர்.


முக்கியத்துவம்

தூய்மை இந்தியா திட்டத்தில் இந்தூருக்கு முக்கிய பங்கு உள்ளது. நாட்டில் 90 சதவீத வீடுகளில் கழிப்பறைகள் உள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தை மக்கள் முன்னெடுத்து சென்றனர். முதல்முறையாக இந்தியாவில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு அமைந்துள்ளது.
ஆயுஸ்மான் பாரத் திட்டம், 50 கோடி மக்களுக்கு உயிர்காக்கும் கருவியாக உள்ளது. 2022க்குள் அனைவருக்கும் வீடு என்பது அரசின் இலக்காக உள்ளது. தற்போது வரை 1 கோடி பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. தூய்மை திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். அனைவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முயற்சி செய்து வருகிறோம். கடந்த காலாண்டில் ஜிடிபி 8 சதவீதமாக இருந்தது. இதனை 10 சதவீதமாக இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AXN PRABHU - Chennai ,இந்தியா
14-செப்-201823:27:10 IST Report Abuse
AXN PRABHU உங்கள் ஐந்து வருட ஆட்சியில் மொத்தமாக எல்லா ஆண்டுகளுக்கும் சேர்த்து 10 % GDP அடைவது தானே உங்களது லட்சியம் ? சூப்பர் அப்பு...
Rate this:
Share this comment
Cancel
Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா
14-செப்-201821:57:11 IST Report Abuse
Thulasingam Jayaram Pillai இத்தனை வருஷமா எந்த அணிய புடுங்கிக்கினு இருந்தாரோ??
Rate this:
Share this comment
Cancel
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
14-செப்-201821:55:47 IST Report Abuse
துயில் விரும்பி நீ henna வேணாலும் பண்ணிக்கோ சாமி. எங்களுக்கு மூணு வேலை கஞ்சி , கட்டிக்க கோவணம், இருக்க ஒரு சத்திரம் ஏற்பாடு பண்ணி கொடுத்துரையா புண்ணியமா போகும், நாங்களும் உசுரு இருக்கிற வரைக்கும் வாழ்ந்துட்டு இருக்கிற இடம் தெரியாம இருந்துடுறோம் சாமி. இந்த GDP inflation dificit fiscal எல்லாம் எங்களுக்கு தெரியாது அய்யா. உங்களுக்கு ஒட்டு போட்டதும் தண்ணி ஊத்தி ஊத்தி தெளிய தெளிய அடிக்கறீங்கய்ய. புதுமையா நாங்க உங்கள ஜெயிக்க முடியாது அய்யா. எங்களை விட்டிடு சாமி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X