செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

Updated : செப் 14, 2018 | Added : செப் 14, 2018 | கருத்துகள் (72)
Advertisement
நெல்லை 144 தடை, தென்காசி கலவரம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், vinayagarchaturthi, விநாயகர் சதுர்த்தி  கணேஷ் சதுர்த்தி , விநாயகர் சதுர்த்தி 2018, கணேச சதுர்த்தி 2018, ஹாப்பி விநாயகர் சதுர்த்தி, Ganpati Bappa Morya, Ganesh Chaturthi, Vinayagar Chathurthi, Happy Vinayagar Chathurthi ,விநாயகர் சதுர்த்தி விழா ,  நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் , செங்கோட்டை கலவரம், தென்காசி 144 தடை, செங்கோட்டை 144 தடை,

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், விநாயகர் சிலைகள், குண்டாற்றில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட போது, இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கற்களை வீசி தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


144 தடை உத்தரவு

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இதனையடுத்து செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த தடை உத்தரவு நாளை (செப்.,15) காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினரிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் மத உணர்வுகளை பாதுகாப்பதற்காக இந்த தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக ஷில்பா தெரிவித்தார். தற்போது செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் 144 தடை போடப்பட்டுள்ளது, மேலும் தேவைப்படும் இடங்களில் தடை பிறப்பிக்கப்படும். மத கலவரங்களை தூண்டும் வகையிலான செயல்கள் நடைபெறாமல் இருக்கவே தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
15-செப்-201811:59:08 IST Report Abuse
ரத்தினம் முதலில் இது இந்தியாவா, இல்ல பாகிஸ்தானா? பாகிஸ்தானில் இந்த மாதிரி பெரும்பான்மையினரின் உரிமை பறிக்கப்படுமா? கல் வீசி கலவரம் செய்தவனை விட்டுட்டு பக்தியாய் ஊர்வலம் சென்றவர்கள் தான் இதுக்கு காரணம் என்று போலி புனை பெயரில் கருத்து போட்டு இந்த மண்ணின் துரோகிகளும் , போலி நடுநிலை நக்கிகளும் , ஓட்டுக்கு நாட்டை நாசமாக்குபவர்களும் ஓலமிடுகிறார்கள். இதுக்கு முன்னாடி இப்படித்தான் கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவத்தில் திட்டமிட்டு நடந்த கொடூர செயலை மறைத்து சாமியார்கள் தாங்களே தீ வைத்து கொண்டார்கள், தீ தானாக பற்றிக்கொண்டதுன்னு புளுகி அரசின் ஆதரவோடு பொய் பிரச்சாரம் செய்தார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-செப்-201810:54:27 IST Report Abuse
Nallavan Nallavan இப்பொழுதே இந்த நிலை என்றால் ஹிந்துக்கள் சிறுபான்மை ஆகிவிடும் காலம் வந்தால் என்ன ஆகும் ?? இதுதான் நம்முடைய கவலை .....
Rate this:
Share this comment
Cancel
tamil - coonoor,இந்தியா
15-செப்-201809:24:35 IST Report Abuse
tamil காவல்துறையினரின் கவனக்குறைவு தான் காரணமாக இருக்கலாம், நாட்டில் சபரிமலை யாத்திரை வருடா வருடம் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது, பழனி பங்குனி உத்திரம், தைப்பூசம், திருச்செந்தூர் சூரசம்ஹாரம், மதுரை சித்திரை திருவிழா எல்லாமும் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது, நாட்டின் பலபகுதிகளில் பள்ளிவாசல், தர்கா, சர்ச் உள்ளது அதன் அருகாமையிலேயே பிள்ளையார் கோயில்கள், மாரியாத்தா கோயில்கள் உள்ளன, விழாக்காலங்களில் விழா சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது, ஏராளமான மக்கள் லட்சக்கணக்கில் கூடுகிறார்கள் ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடைபெறுவது கிடையாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X