மதுரை: திமுகவில் தன்னை சேர்க்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூறி வருகிறார். ஆனால், இதற்கு எந்த பதிலும் திமுக தரப்பிலிருந்து கூறப்படவில்லை.
இன்று மதுரையில் அழகிரி நிருபர்களிடம் பேசுகையில்; உங்களுக்கு தொடர்ந்து திமுகவில் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்? என்ற கேள்விக்கு அது அவரை கேட்க வேண்டிய கேள்வி. அங்கே போய் காரணம்கேளுங்கள். அவரை கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? என்றார்.