பிஷப்புக்கு எதிராக கன்னியாஸ்திரி சதி: ஜீசஸ் சபை| Dinamalar

பிஷப்புக்கு எதிராக கன்னியாஸ்திரி சதி: ஜீசஸ் சபை

Updated : செப் 14, 2018 | Added : செப் 14, 2018 | கருத்துகள் (104)
Advertisement
Kerala,nun,rape case,பிஷப்,எதிராக,கன்னியாஸ்திரி,சதி,ஜீசஸ் சபை

கொச்சி : கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில், பிஷப்புக்கு எதிராக கன்னியாஸ்திரி சதி செய்துள்ளதாக ஜீசஸ் சபை குற்றம்சாட்டியுள்ளது.


பாலியல் புகார் :

கேரளாவில், கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த, பிராங்கோ மூலக்கல் என்ற பாதிரியார், அவரது கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த கன்னியாஸ்திரியை, 2014 - 2016 வரை, 13 முறை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் வழக்கை வாபஸ் பெற, பாதிரியார் தரப்பில் இருந்து, 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக பலாத்காரத்துக்கு ஆளான கன்னியாஸ்திரியின் சகோதரர் தெரிவித்திருந்தார்.


கைது நடவடிக்கை:

இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு, வரும், 19ல், நேரில் ஆஜராகும்படி, பாதிரியார் பிராங்கோவுக்கு, போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர். மேலும், பாதிரியாரை கைது செய்வது தொடர்பாக, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


போட்டோ வெளியீடு:

இந்நிலையில், ஜலந்தரில் உள்ள மிஷனரிஸ் ஆப் ஜீசஸ் சபை, புகார் தந்த கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை வெளியிட்டு அடையாளப்படுத்தியுள்ளது. மேலும் பிஷப்புக்கு எதிராக கன்னியாஸ்திரி, 9 பேருடன் சேர்ந்து சதி செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஜீசஸ் சபை, கன்னியாஸ்திரி தன் கட்டுப்பாட்டில் சி.சி.டி.வி.,யை வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது.


வேறு ஒரு நிகழ்ச்சியில்..

கன்னியாஸ்திரியின் நண்பர்களே, தேவாலய வருகை பதிவேட்டை கையாண்டவர்கள் என்றும், கன்னியாஸ்திரி பாலியல் புகார் நடந்ததாக தெரிவித்த தேதியில்(மே 23, 2015), பிஷப் பிராங்கோ வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான போட்டோ ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
15-செப்-201814:57:21 IST Report Abuse
Sridhar Rengarajan கன்னியாஸ்திரிகளை பாதிரியார்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வது, பாலியல் வன்புணர்வு, கற்பழிப்பு, க்ரூப் செக்ஸ், ஹோமோ செக்ஸ், ஓரல் செக்ஸ், காஸ்டிங் கவுச் என பயன்படுத்துவது என்பது உலகம் முழுக்க எல்லா இடங்களிலும் நடப்பதுதான். இது இன்று நேற்று நடப்பதல்ல பல நூற்றாண்டுகளாக நடப்பதுதான். போப் மாதிரி உள்ளவர்களே இந்த பாலியல், ஹோமோ செக்ஸ் பிரச்சினையில் சிக்கி இருக்கிறார்கள். அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அவ்வப்போது சில இடங்களில் வெளிவரும். ஆனால் எப்போதுமே கன்னியாஸ்திரிகள் பலிக்கடாவாக்க படுவார்கள் பாதிரியார்கள் தப்பித்துக்கொள்வார்கள். அவ்வப்போது கன்னியாஸ்திரிகள் கொல்லப்படுவார்கள் அதை தற்கொலையாக மாற்றப்படும். அப்படியே அந்த கேஸை மூடி மறைத்துவிடுவார்கள். இதுவே கான்கிராஸ் காலம் என்றால் இந்நேரம் ஊத்தி மூடி இருப்பார்கள். கேரளாவில் கூட பாருங்கள் அங்கு எம்.எல்.ஏ ஜார்ஜ் என்பவர் கருத்து தெரிவிக்கும் போது கற்பழித்த பாதிரியாரை பொம்பள பொறுக்கி என்று சொல்லாமல் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை விபச்சாரி என்று பேசி இருக்கிறார். பாதிரியார்கள் என்ற பாதுகாப்பான போர்வையில் மைனர் பெண்குழந்தைகளை பேட் டச் செய்வது, ஹோமோசெக்சில் ஈடுபடுவது, வசதியாக கன்யாஸ்திரிகளை கற்பழிப்பது, பாவமன்னிப்பு கேட்க வரும்பெண்களை கற்பழிப்பது சர்வசாதாரணமாக காலம்காலமாக நடப்பதுதான். எல்லாம் ஜகஜமப்பா.
Rate this:
Share this comment
Cancel
Krishnakumar - Nellore,இந்தியா
15-செப்-201813:04:58 IST Report Abuse
Krishnakumar தவறு செய்தால் யாராக இருந்தாலும், காப்பாற்றாமல் தண்டனை வழங்கும் உலகின் உன்னதமான எங்கள் ஹிந்து மதத்திற்கு சகோதரிகள் அனைவரும் வரவேண்டும் என்பது இந்த அடியேனின் விருப்பம்.
Rate this:
Share this comment
MDALI - yanbu,சவுதி அரேபியா
15-செப்-201814:03:00 IST Report Abuse
MDALIHEHEHEHEHEHEHEHEHEHE.............. எதுல சிரிக்கறதுன்னே தெரியலே...
Rate this:
Share this comment
nandaindia - Vadodara,இந்தியா
15-செப்-201814:58:57 IST Report Abuse
nandaindiaஉங்களுக்கு ஹிந்துக்கள் எது செய்தாலும் அதை உல்டாவாக செய்து தானே பழக்கம். ஆகவே ஹிந்துக்கள் நாங்கள் வாயால் சிரிப்பதால் நீங்கள் அதால் சிரிக்கலாம் வழக்கம் போல். சரியா?...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-செப்-201810:52:46 IST Report Abuse
Nallavan Nallavan மதத்துப் பெரியவர்களே, கற்பழிக்கும் கயவர்களைக் காப்பாற்றுவது சரியா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X