இந்தியாவின் சக்தியை உலகம் அறியும்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் Dinamalar
பதிவு செய்த நாள் :
இந்தியாவின் சக்தியை உலகம் அறியும்
பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

இந்துார் : ''எல்லா பிரிவு மக்களையும் உள்ளடக்கி, நல்லிணக்கமாக வாழும் வல்லமை உள்ளதால், இந்தியாவின் மகத்தான சக்தியை உலகம் அறிந்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்தியா,சக்தி,உலகம் அறியும்,பிரதமர்,India,Modi,Narendra modi,இந்தியா,நரேந்திர மோடி,மோடி,பெருமிதம்


இஸ்லாம் மதம் தொடர்பாக, 'ஆஷாரா முபாரகா' என்ற நிகழ்ச்சி, ஆண்டுதோறும், ம.பி., மாநிலம், இந்துாரில் நடத்தப்படுகிறது. நேற்று நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

அப்போது, அவர் பேசியதாவது: இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த, போஹ்ரா பிரிவினர், நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பான வகையில் பங்காற்றி உள்ளனர். எல்லா பிரிவு மக்களையும் உள்ளடக்கி, நல்லிணக்கமாக வாழும் வல்லமை உள்ளதால், இந்தியாவின் மகத்தான சக்தியை உலகம் அறிந்துள்ளது.

போஹ்ரா பிரிவு தலைவர், டாக்டர் சையத்னா முபத்தால் சைபுதீனை, ஒரு முறை, விமான நிலையத்தில் சந்தித்தேன். அப்போது, குஜராத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை, தடுப்பணைகள் அமைப்பது பற்றி அவரிடம் பேசினேன். பின், குஜராத்தில் ஏராளமான கிராமங்கள் பயனடையும் வகையில், பல தடுப்பணைகளை, சைபுதீன் உருவாக்கினார். இதனால், ஏராளமான கிராமங்களில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது.

Advertisement

மற்றொரு சந்தர்ப்பத்தில், குஜராத்தில், ஊட்டச் சத்து குறைபாடு குறித்த பிரச்னைக்கு, சைபுதீன் மேற்கொண்ட நடவடிக்கைகள் சிறந்த தீர்வாக அமைந்தன. இமாம் உசேனின் புனித செய்தியை பரப்பும் வகையில், போஹ்ரா பிரிவினர் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
17-செப்-201815:21:32 IST Report Abuse

ganapati sbபோஹ்ரா பிரிவு முஸ்லிம்கள் சுபி பிரிவு முஸ்லிம்கள் போல இந்திய கலாசாரத்தோடு இணைந்து வாழ்பவர்கள் போல உள்ளது வஹாபிய முஸ்லிம்களே வெறுப்பை பிரிவினை விதைப்பவர்கள் ஷியா சன்னி மதில் மேல் பூனைகள்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-செப்-201820:36:39 IST Report Abuse

Pugazh Vதமிழகத்தில், எல்லா மொழி, மதம் இனம் மற்றும் ஜாதியை சேரஙவர்கள் சமூக மரியாதை யுடன் தலைநிமிர்ந்து கவுரவமாக வாழ முடிந்ததே கலைஞர் அவர்களால் தான். அனைத்து மத, இன, மொழி மற்றும் ஜாதியினரை இணக்கத்துடன்.மரியாதையுடன் வாழ வைத்த வர் கலைஞர். கலைஞர் உருவாக்கிய சமத்துவ புரங்களே இதற்கு சாட்சியாக இன்றும் இருக்கின்றன.

Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
17-செப்-201815:06:21 IST Report Abuse

RameshDMK Ex Party Chief has properly used TamilNadu people's stupidity and logically illogical thinking and ive amnesia characters and accumulated many billion rupees in the name of politics. Other state people , so called, MGR and Jaya have many things better than Karunanidhi and less corrupted than him....

Rate this:
N Parthiban - Thanjavur,இந்தியா
15-செப்-201820:31:12 IST Report Abuse

N ParthibanBut in India we won't. Some parties and Tamil saviours daily play muhari/oppari against modi/bjp

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
16-செப்-201806:46:15 IST Report Abuse

ஜெயந்தன்He also fiddling while the nation is on fire.....

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X