'விஞ்ஞானி கைது தேவையற்றது': ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு Dinamalar
பதிவு செய்த நாள் :
'விஞ்ஞானி கைது தேவையற்றது'
ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

புதுடில்லி : 'கடந்த, 1994ல், 'இஸ்ரோ' சதி வழக்கு தொடர்பாக, விஞ்ஞானி, நம்பி நாராயணன், 76, கைது செய்யப் பட்டது, அவசியமற்றது' எனக் கூறி உள்ள உச்ச நீதிமன்றம், அவரை கைது செய்த, கேரள போலீஸ் அதிகாரிகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

நம்பி நாராயணன்,விஞ்ஞானி,கைது,தேவையற்றது,ரூ.50 லட்சம், இழப்பீடு,உத்தரவு


'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றியவர், நம்பி நாராயணன்.

கடத்தல் :


இவர், மேலும் இரு விஞ்ஞானிகள் மற்றும் மாலத் தீவுகளைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட ஐந்து பேர், 1994ல், விண்வெளி ஆராய்ச்சி திட்டம் குறித்த ரகசிய ஆவணங்களை, வெளிநாடுகளுக்கு கடத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, நம்பி நாராயணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், காங்.,கைச் சேர்ந்த, அப்போதைய கேரள முதல்வர் கருணாகரன் மீது, எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். இதனால், கருணாகரன் பதவி விலக நேர்ந்தது.

பின், இந்த வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. விசாரணைக்கு பின், இஸ்ரோவில் சதி திட்டம் எதுவும் நடக்கவில்லை என்பதை கண்டுபிடித்து, சி.பி.ஐ., அறிவித்தது. 'நம்பி நாராயணனை சட்டவிரோதமாக கைது செய்ததற்கு, அப்போதைய, டி.ஜி.பி., சிபி மாத்யூஸ், இரண்டு போலீஸ் கண்காணிப்பாளர்கள், ஜோசுவா, விஜயன் ஆகியோர் காரணம்' என, சி.பி.ஐ., கூறியது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை, 1998ல், விசாரித்த உச்ச நீதிமன்றம், 'நம்பி நாராயணன் உள்ளிட்டோருக்கு, கேரள அரசு, தலா, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இழப்பீட்டு தொகையை கேரள அரசு வழங்கக் கோரி, தேசிய மனித உரிமை கமிஷனில், நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பு விசாரணைக்கு பின், 2001, மார்ச்சில் தீர்ப்பளித்த மனித உரிமை கமிஷன், 'இடைக்கால நிவாரணமாக, நம்பி நாராயணனுக்கு, 10 லட்சம் ரூபாயை, கேரள அரசு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

இதற்கிடையே, தன்னை சட்டவிரோதமாக கைது செய்த கேரள முன்னாள் போலீஸ் உயரதிகாரிகள், சிபி மாத்யூஸ், ஜோசுவா, விஜயன் ஆகியோருக்கு எதிராக, கேரள உயர் நீதிமன்றத்தில், நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார்.

தேவையில்லை :


அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'போலீஸ் உயரதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை' என, தீர்ப்பளித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில்

Advertisement

நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு:

இஸ்ரோவில் ஆவணங்களை வெளிநாடுகளுக்கு கடத்த சதி நடந்ததாக கூறி, விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டது, தேவையற்றது. அவரை, அவசியமின்றி கொடுமைப்படுத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புள்ள போலீஸ் உயரதிகாரிகளின் பங்கு பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக, முன்னாள் நீதிபதி, டி.கே.ஜெயின் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், போலீசாரால் மன உளைச்சலுக்கு ஆளான விஞ்ஞானி, நம்பி நாராயணனுக்கு, கேரள அரசு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும். இந்த தொகையை, நான்கு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
17-செப்-201802:01:12 IST Report Abuse

Manianஅறிவாளிகள் ஏன் இந்தியாவை விட்டு ஒட்டி விடுகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஏற்கனவே ஜாதி-மதம்-இட ஒதுக்கீட்டில் லஞ்சம் கொடுத்து தகுதி இல்லாதவர்களே பதிவில் அமரும்போது, விஞ்ஞாநிகலாள் அவர்கள் வாழ்வு தடை படும் என்னும்போது அவர்களை விராடுவதே நல்லது என்று என்னும் பாவிகள் அதிகம். இங்கே என்ன வளம் இல்லை என்று கேட்பவர்கள் தங்கள் சிந்தனை திறமையை வளர்த்துக்கொண்டால் இந்த உண்மைகள் புரியும். அப்படியே நாட்டிற்கு சேவை செய்து நன்றிக்கடனை அடைக்க வந்தாலும் ( ரிசர்வ் பேங் அதிகாரிகளாக -ராஜன் போன்றவர்கள்) அவர்களும் இதே நாதாரிகளால் விரட்டி அடிக்க படுகிறார்கள். திறமை உங்கள் உயிருக்கு ஆபத்து.

Rate this:
Manian - Chennai,இந்தியா
18-செப்-201808:56:20 IST Report Abuse

Manianஇதில் சொல்லாமல் விடட ஒரு செய்தியும் உண்டு. இந்தியாவில் ஒரு சின்ன கண்டுபிடிப்பு செய்தாலும் அதில் எல்லோரும் குளிர் காய்கிறார்கள். அதை விளம்பர படுத்தி தாங்களே செய்தது போல் பெயரும் புகழும் வாங்க எண்ணுகிறார்கள். இவர் ஒரு கைரோஜெனிக் எஞ்சினை முழுவதும் செய்து முடித்து அதை உபயோகித்த பின்னாலே தான் சொல்ல வேண்டும். பொக்ரானில் அணு குண்டு வெடிப்பதை நாம் ரகசியமாக வைத்திருக்கவில்லையா? . அது தம்பட்டம் அடிக்க பட்டிருந்தால், என்றே அமெரிக்கா நம்மை தீர்த்து கட்டியிருக்கும். அதேபோலவே திரு கலாமின் விண்வெளி ஆராய்ச்சியும். அமெரிக்காவில் நடக்கும் ரகசிய ஆராச்சிகளை அவர்கள் சொல்வதில்லை. அவர்களுடைய ரகசிய ஸ்டேல்த் Stealth fighter விமாத்தின் ரகசியம் அவர்கள் கண்டுபிடித்த உலோக கலவையில் தான் இருக்கிறது. அதை திருட சைனா மிகவும் முயற்சி செய்கிறது. ரகசியம் காக்காமையால் கான்கிரஸ் அல்பங்கள் இந்த விஞ்ஞானியை கொடுமை படுத்தினார்கள். இதை அவர் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது....

Rate this:
krishnan - salem,இந்தியா
15-செப்-201815:22:37 IST Report Abuse

krishnan50 லடச ரூபாய் இப்பீடு என்பது குறைவு. அவர் உழைப்பு இல்லாமல் நமது தேசம் இழந்த காலம் அவர் இழந்த காலம் எந்த கணக்கில் சேர்ப்பது ??

Rate this:
Sudarsanr - Muscat,ஓமன்
15-செப்-201812:58:57 IST Report Abuse

SudarsanrSrikanth - Coimbatore,இந்தியா - உங்க உள்மனம் சொல்வது எங்களுக்கு புரியுது... உயிரோடையாவது விட்டு வச்சோம்... சதோஷப்படுங்கன்னு சொல்றிங்க... அதானே...

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X