18 எம்.எல்.ஏ., வழக்கு: ஆட்சிக்கு ஆபத்து? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
MLA,எம்.எல்.ஏ.,தகுதி நீக்க வழக்கு,அடுத்த வாரம்,தீர்ப்பு?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகலாம் எனஆளும் கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் பழனிசாமியை மாற்றக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்து பதவிகளை பறித்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார்.

இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. 'தகுதி நீக்கம் செல்லும்' என தலைமை நீதிபதியும் 'செல்லாது' என மற்றொரு நீதிபதியும் தீர்ப்பு கூறினர்.

அதைத் தொடர்ந்து இவ்வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் ஜூலை 23ல் விசாரணையை துவக்கினார். அரசு தரப்பு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள்

தரப்பு, தேர்தல் கமிஷன் தரப்பு மற்றும் சபாநாயகர் தரப்பு வாதம் ஆக., 31ல் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல், வழக்கின் தீர்ப்பை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

இந்த தீர்ப்பு எப்போது வெளியாகும் என அனைத்து கட்சியினரும் ஆவலோடு எதிர்பார்த்தபடி உள்ளனர். மூன்றாவது நீதிபதி வழங்கும் தீர்ப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

'சபாநாயகர் செய்தது சரி' என தீர்ப்பளித்தால் அதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.,க்களும் உச்ச நீதிமன்றம் செல்ல வழி பிறக்கும். அதை அவர்கள் விரும்பாவிட்டால் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும். அதில் வெற்றி

பெற்றாக வேண்டிய கட்டாயம், ஆளும் கட்சிக்கு ஏற்படும்.

'சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லாது' என தீர்ப்பு வந்தால் 18 பேரும் மீண்டும் எம்.எல்.ஏ.,க்களாகி விடுவர். தினகரன் ஆதரவு பெருகி விடும். அதிலிருந்து தப்பிக்க உச்ச நீதிமன்றம் சென்று மூன்றாவது நீதிபதி தீர்ப்புக்கு தடையுத்தரவு பெற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படும்.

இதற்கிடையில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டால், ஆட்சி கவிழும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக ஆளும் கட்சியினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் 18 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கின் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்தபடி

உள்ளனர். இந்நிலையில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகலாம் என ஆளும் கட்சி வட்டாரத்தில் எதிர் பார்க்கப்படுகிறது.

சபாநாயகருடன் முதல்வர் ஆலோசனை!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னையில் நேற்று மதியம் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சபாநாயகர் தனபாலை அவரது அறையில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது 18 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் தீர்ப்பு பாதகமாக வந்தால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும். எனவே அது குறித்து ஆலோசித்துள்ளனர். அத்துடன், 'கேரளா வெள்ள நிவாரணத்திற்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்குவர்' என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் பல எம்.எல்.ஏ.,க்கள், இன்னமும் அதற்கு ஒப்புதல் கடிதம் வழங்காமல் உள்ளனர். விரைவாக கடிதம் பெற்று நிதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-201822:07:04 IST Report Abuse

kulandhaiKannanAny number of elections will not clear the political confusion in Tamil Nadu. லெட்டர்பேடு கட்சிகளும், அவற்றை நம்பி வாழும் தொலைகாட்சிகளும் இருக்கும்வரை.

Rate this:
kowsik Rishi - Chennai,இந்தியா
15-செப்-201817:16:25 IST Report Abuse

kowsik Rishiஒரு தேர்தல் வரவேண்டும் அப்போ எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு தெரிந்து விடும் - தற்போது மக்கள் எதிர்பார்ப்பது ஒரு தேர்தல் தான் அதை மட்டும் நடத்த அரசியல் வாதிகள், கட்சிகள், அரசு எல்லாரும் பயப்படுகிறார்கள் அதை விட்டுவிட்டு மற்ற எல்லா விஷயத்தையும் பேசுகிறார்கள் - எப்படியும் தேர்தல் வரும் அப்போ தெரிந்துவிடும் ஒரு முடிவு - விடிவு - அதற்க்கப்புறம் தான் அவரர் நிலைமை, இடம், பலம் எல்லாம் வேலைக்காகும் - அதுவரை வெறும் பேச்சு வேற்று பேச்சு அவ்வளவு தான்

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
15-செப்-201817:10:10 IST Report Abuse

Bhaskaranமோடி சொல்லும்வரை தீர்ப்பெல்லாம் வராது தள்ளிகிட்டே போகும்னுதான் மக்கள் நினைக்கிறாங்க

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X