பயங்கரவாதிகள் தொடர்பு? புழல் சிறையில் விசாரணை Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பயங்கரவாதிகள் தொடர்பு?
புழல் சிறையில் விசாரணை


சென்னை : சகல வசதிகளுடன், ராஜ வாழ்க்கை வாழ்ந்து வரும், புழல் சிறை கைதிகள், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டனரா என, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.

பயங்கரவாதிகள்,தொடர்பு?,புழல்,சிறை,விசாரணைசென்னை, புழல் மத்திய சிறையில், தண்டனை கைதிகளுக்கான, உயர் பாதுகாப்பு பிரிவு உள்ளது. இதில், பாகிஸ்தான் உளவாளிகள், சர்வதேச போதை பொருள் கடத்தல் பேர்வழிகள், பயங்கரவாதிகள் அடைக்கப்படுவர். இந்த பிரிவில் தான், பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி பிரமுகர்களை கொன்ற வழக்கில் கைதான, போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாதிகள், அடைக்கப்பட்டு உள்ளனர்.


அதேபோல, இலங்கையை சேர்ந்த, சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களான, முகமது ரிகாஸ், தஞ்சாவூரைச் சேர்ந்த, முகமது ஜாகிர் மற்றும் முகமது இப்ராகிம், முகமது ரபீக், மதுரை அழகர் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர். இக்கும்பல், புழல் சிறையை உல்லாச விடுதியாக மாற்றி விட்டது.


சமீபத்தில், சிறைத்துறை போலீசார் நடத்திய சோதனையில், முகமது ரிகாஸ் உள்ளிட்டோரிடம், இரண்டு, 'ஸ்மார்ட் போன்' உட்பட ஒன்பது அலைபேசி சிக்கின. இவற்றை ஆய்வு செய்த போது, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.


போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகள், புழல் சிறையை, உல்லாச விடுதி போல் மாற்றி, ராஜ வாழ்க்கை வாழ்வதற்கான படங்கள் இருந்தன.மேலும், இலங்கை, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள, சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களுடன், முகமது ரிகாஸ், முகமது ஜாகீர் உள்ளிட்டோர் தொடர்ந்து பேசியுள்ளனர். சிறையில் இருந்தபடியே, போதை பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


மேலும், சிறையில், சகலவித வசதிகளை, இக்கும்பல் அனுபவித்து வரும் படங்களை, 'வாட்ஸ் ஆப்' வழியாக, வெளிநாடுகளில் பதுங்கி உள்ள, கூட்டாளிகளுக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் மூலமாக, சிறை அதிகாரிகளுக்கு, பல லட்சம் ரூபாய் கைமாறி இருப்பதாக தெரிகிறது.


கைதிகளிடம் சிக்கிய, அலைபேசிகளை சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், விசாரணையில் இறங்கி உள்ளனர்.

கறுப்பு ஆடு எது?

கைதிகளுக்கு சகல வசதிகளும் கிடைக்க சிறைத்துறை டி.ஐ.ஜி., ஒருவர் துணையாக இருந்துள்ளார். அவர் தமிழக அமைச்சர் ஒருவருக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவர் மூலமாகவே லஞ்சப்பணம் கைமாறி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் சிலர் 'அவர் அப்படிபட்டவர் அல்ல' என தெரிவிக்கின்றனர். அந்த கறுப்பு ஆடு யார் என சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., அசுதோஷ் சுக்லா விசாரித்து வருகிறார்.'ஆப்பிள்' போன் சிக்கியது :

புழல் தண்டனை சிறையில், கடந்த வாரம், சிறைத்துறை விஜிலென்ஸ் அதிகாரிகள், 7 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அதில், 3 அலைபேசிகள், விலையுயர்ந்த ஆப்பிள்' நிறுவன போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement


100 கிலோ பாசுமதி அரிசி பறிமுதல்!

புழல் மத்திய சிறையில், நேற்று போலீசார் நடத்திய சோதனையில், கைதிகளிடம் இருந்து 100 கிலோ பாசுமதி அரிசி, 40 ரேடியோ, 20, 'டிவி' மற்றும் ஏழு, 'டிவிடி பிளேயர்'கள் சிக்கியுள்ளன. அதேபோல் 200, 'டிவிடி கேசட்' ஐந்து 'மைக்ரோ ஓவன்' அடுப்பு, நான்கு 'மிக்சி' மற்றும் ஏழு 'ஜூசர்'கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தண்டனை கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை. பயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச கடத்தல்காரர்கள் அடைக்கப்பட்டுள்ள 'பிளாக்'கில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருக்க கூடும் என்பதால் பாதுகாப்புடன் சோதனை நடத்துவது பற்றி சிறைத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.'டிவி', எப்.எம்., ரேடியோ அகற்றம் :

நேற்று காலை, புழல் உயர் வகுப்பு சிறையில் இருந்த, 20 'டிவி' க்கள், 2 எப்.எம்., ரேடியோக்கள் அகற்றப்பட்டன. மேலும், பஞ்சு மெத்தை, 2 ஸ்மார்ட்போன்கள் போன்றவையும், பறிமுதல் செய்யப்பட்டன. ஸ்மார்ட்போன்களை, பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார், அவர்களது ஸ்மார்ட் போனிலிருந்து, சர்வதேச பயங்கரவாதிகளிடம் பேசி, சதித்திட்டம் தீட்டியுள்ளனரா என்பது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-201815:57:08 IST Report Abuse

நக்கல்திராவிட கட்சிகள்.... இந்த மாதிரி அக்கிரமங்கள் நடக்கும்போது ரெண்டே மூஞ்சிதான் மனக்கண் முன்னால் வருகிறது.. ஒன்று ஈவேரா, ரெண்டு முக... இவர்கள் இருவரும்தான் அனைத்திற்கும் காரணம்... இவர்களுக்கு முன் எத்தனை பேர் இந்த நாடு நல்லா இருக்க பாடுபட்டார்கள்.. மொத்த சிஸ்டத்தையே கெடுத்தவர்கள் இவர்கள் இருவரும்... இனிமே தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து சிறைகளையும் வாரத்துக்கு ஒரு முறை உள்ளே சென்று CBCID அதிகாரிகள் சென்று பார்வை இடவேண்டும்.. எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.. விசாரித்து யாரெல்லாம் கூட்டு களவாணிகள் என்று கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும்.... முடிந்தால் சுவாமியை சிறிது காலம் தமிழ் நாட்டின் கவர்னராக நியமிக்க வேண்டும்...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
15-செப்-201815:41:09 IST Report Abuse

Endrum Indianஅவனுங்க பேர் தான் தெள்ளத்தெளிவாக முஸ்லிம்கள் என்று இருக்கின்றதே, அப்போ நிச்சயம் தாவூத் போன்றவர்களுடன் நிச்சயம் தொடர்பு இருக்கும் நேரடியாவாகவோ மரிமுகமாகவையோ, அவன் தொழில் போதை பொருட்கள் கடத்துவது தானே, ஆகவே நிச்சயமா தொடர்பு இருக்கும் மற்றும் பாகிஸ்தானுடன் கூட தொடர்பு இருக்கும் தீவிரவாதத்துக்காக. இதெல்லாம் சர்வ சாதாரணம் முஸ்லிம்களுக்கு அவர்கள் தான் இந்தியர்கள் கிடையாது என்று அவர்கள் நினைத்துக்கொண்டு செய்கின்றார்கள். .

Rate this:
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா
15-செப்-201813:24:24 IST Report Abuse

சுப்பையா, கருப்பட்டி வியாபாரம்.குற்றவாளிகளின் அறைகள் எத்தனை வருடங்களாக சொகுசு பங்களாவாக இயங்கி வருகிறது??? அதிமுக & திமுக அமைச்சர்கள் , MLA க்கள் மற்றும் ஜெயிலருக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா தீவிரவாதிகளிடம் இருந்து செய்யப்பட்டது என்ற விவரம் வெளிவர வேண்டும்.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X