விமானத்தில் மொபைல் போன் சேவை: ஒரு மாதத்தில் அறிமுகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விமானத்தில் மொபைல் போன் சேவை: ஒரு மாதத்தில் அறிமுகம்

Added : செப் 15, 2018 | கருத்துகள் (17)
Advertisement
TRAI, Flight Internet service,   Telecom service,விமானம், விமானத்தில் மொபைல் போன், விமானத்தில் இன்டர்நெட் சேவை,  தொலை தொடர்பு துறை, டிராய், 
Airoplane,flight mobile phone service, flight internet ,  Internet service on the plane,

புதுடில்லி: விமானத்தில் செல்லும் போது, மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்தும் சேவை, அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

விமானங்களில் பயணம் செய்யும் போது, மொபைல் போன் பயன்படுத்துவது தொடர்பாக, மத்திய தொலை தொடர்பு அமைச்சகத்துக்கு, 'டிராய்' என்ற, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைகள் அளித்தது. இந்த பரிந்துரைகளை ஏற்று, விமானத்தில், மொபைல் போன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தொலை தொடர்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: விமானம், 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க துவங்கிய பின், மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துவது தொடர்பாக, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்.

இதற்கு, தொலை தொடர்பு நிறுவனங்கள் உரிமம் பெறுவதற்கான விதிகள் உருவாக்கும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது. சட்ட அமைச்சகம் அனுமதி அளித்த இரு வாரங்களில், உரிமம் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து, அக்டோபர் முதல், விமானத்தில், மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துவது நடைமுறைக்கு வரும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
15-செப்-201815:25:40 IST Report Abuse
Endrum Indian மனிதன் முதன் முதலில் தடவியது விலங்குகளை, பிறகு பெண்களை, இப்போ கடைசி கடைசியாக மொபைலை தடவி தடவியே இவன்/இவள் வாழ்க்கை கழிகின்றது. அது இந்த பிளேனில் இல்லையென்றால் பைத்தியம் பிடித்து அலைவார்கள் என்று தான் இந்த நல்லெண்ண நடவடிக்கை.
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
15-செப்-201810:49:58 IST Report Abuse
S.Ganesan சற்று நேரமாவது வளவள பேச்சு தொல்லை இல்லாமல் இருந்த ஒரே இடம். அதுவும் போச்சா
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-செப்-201810:12:01 IST Report Abuse
Kasimani Baskaran போனில் சொல்லுவது போல திமுக ஒழிக என்று சுடலைக்கு முன்னால் கூட இனி சாடையில் சொல்லலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X