கல்லூரி மாணவி பலாத்காரம் : பிரதமரிடம் பரிசு பெற்றவர்

Added : செப் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement

ரெவாரி: ஹரியானா மாநிலத்தில், கல்லுாரி மாணவியை கடத்திச் சென்ற கும்பல், பாலியல் பலாத்காரம் செய்து சாலை ஓரத்தில் வீசியது. ஹரியானா மாநிலத்தில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மகேந்திரகர் மாவட்டம், கனியா என்ற இடத்தில், சமீபத்தில், 19 வயது கல்லுாரி மாணவி, டியூஷனுக்கு செல்வதற்காக, பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். காரில் வந்த மூன்று பேர், மாணவியை கடத்திச் சென்றனர். ஒதுக்குப்புறமான இடத்துக்கு, அந்த மாணவியை அழைத்துச் சென்றனர். அங்கு, ஏற்கனவே ஒன்பது பேர் இருந்தனர். மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை, வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளனர்.பின், 12 பேரும், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். மயங்கிச் சரிந்த மாணவியை, சாலை ஓரத்தில் துாக்கி வீசி விட்டு, தப்பினர்.மறுநாள் காலை, அந்த வழியாக சென்றவர்கள், இளம்பெண் மயங்கிக் கிடக்கும் தகவலை, போலீசுக்கு தெரிவித்துள்ளனர். போலீசார், அந்தப் பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும், போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி, பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அதற்காக, பிரதமர் மோடியிடம் பாராட்டும், பரிசும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் கூறியதாவது:கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, மூன்று மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivan Mainthan - Coimbatore,இந்தியா
16-செப்-201800:05:08 IST Report Abuse
Sivan Mainthan விக்கிரமாதித்தன்: இதுக்குத்தான் சவூதி அரேபியாவில் உள்ளது போல் சட்டத்தை மாத்துங்கப்பா. பெண்கள் அனைவருக்கும் பர்தா, பலாத்காரம் செய்யும் ஆண்களுக்கு பொது இடத்தில் வைத்து கட்டிங். நடக்குமா? வேதாளம்: ராசா.. இது சனநாயக நாடு. அதாவது சாமான்யனுக்கு பாதுகாப்பில்லாத நாடு. 100 ரூபா திருடுனா நாறச் சிறை. 10,000 கோடி திருடினாலோ, கொலை செய்துவிட்டு புழல் சிறைக்குச் சென்றாலோ சொகுசு சிறை வாழ்க்கை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X