பதவி வெறியில் மகன்கள் மோதல் லாலு பிரசாத் யாதவ் அதிர்ச்சி

Added : செப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement

பாட்னா, பீஹாரில், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில், யாருக்கு முக்கியத்துவம் என்பதில், அவருடைய இரண்டு மகன்கள் இடையேயான மோதல் தீவிரமாகியுள்ளது. கட்சிக் கூட்டத்தில், லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் கலந்து கொள்ளாதது, இதை உறுதிபுஅபடுத்துவது போல் அமைந்துள்ளது.பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில், அதிகாரம் உள்ள பதவிகளை கைப்பற்றுவதில், அவருடைய இரண்டு மகன்களுக்கு இடையே பலப்பரீட்சை நடந்து வருகிறது.பாட்னாவில் நடந்த கட்சியின் முக்கியமான கூட்டத்தில், லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் கலந்து கொள்ளவில்லை. அண்ணன் தேஜ் பிரதாப், தம்பி தேஜஸ்வி யாதவ் இடையேயான பதவி அதிகாரப் போட்டி தீவிரம் அடைந்துள்ளதை, இது காட்டுவதாக, கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து, ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர்கள் கூறியதாவது:நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சி அமைத்தபோது, தன் இளைய மகன் தேஜஸ்விக்கு, துணை முதல்வர் பதவியையும், மூத்த மகனுக்கு அமைச்சர் பதவியையும் லாலு பிரசாத் பெற்றுத் தந்தார். தற்போது, லாலு சிறையில் உள்ள நிலையில், தேஜஸ்வி யாதவ், கட்சியை முன்னின்று நடத்தி வருகிறார்; மாநில எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார்.அதே நேரத்தில், கட்சி யில் தனக்கு போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று, தேஜ் பிரதாப் கருதுகிறார். இதுவே, கட்சியில் யார் பெரியவர் என்பதில், அண்ணன், தம்பி இடையே போராட்டமாக உருமாறியுள்ளது. ஆனால், அவர்களுக்குள் நடக்கும் இந்த அதிகாரப் போர், கட்சிக்கு நல்லதல்ல.ஏற்கனவே லாலு சிறையில் உள்ளார். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ.,வை வீழ்த்துவது சுலபமானதல்ல. இந்த நேரத்தில், அண்ணன், தம்பி இடையேயான மோதல் அதிகரித்தால், அது, கட்சித் தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி விடும். கட்சியின் வெற்றிக்கு பாதகம் ஆகும்.இவ்வாறு மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.இதற்கிடையே, ''இந்த உலகில் எந்த சக்தியும், கட்சிக்கான என்னுடைய பணிகளை குறைத்து மதிப்பிட முடியாது,'' என, தேஜ் பிரதாப் கூறியுள்ளார். அவருடைய இந்தக் கருத்து, தேஜஸ்விக்கு எச்சரிக்கை விடுப்பது போல் உள்ளது என, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.கட்சி பதவிகளுக்காக, மகன்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல், லாலு பிரசாத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
16-செப்-201806:16:13 IST Report Abuse
 Muruga Vel லாலுவின் மகள் மிசா பாரதி இன்னம் இந்த சண்டையில் பங்கேற்கவில்லை …
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X